டிவி - ஏசி ஒன்றை கூட விடலையே.. வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டை மொட்டையடித்த மக்கள்! வீடியோ
காத்மாண்டு: நேபாளத்தில் வெடித்த வன்முறைக்கு நடுவே ஆண்களும், பெண்களும் சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்து கைகளுக்கு கிடைத்த பொருட்களை மொத்தமாக அள்ளிச்சென்றனர். இதனால் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள சூப்பர் மார்க்கெட் சில நிமிடங்கள் மொத்தமாக காலியானது. இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
அண்டை நாடான நேபாளத்தில் பிரதமர் கேபி சர்மா ஒலி தலைமையிலான ஆட்சி நடந்து வந்தது. இவர் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ், யூடியூப் உள்பட 26 சமூக வலைதளங்களுக்கு பிரதமர் கேபி சர்மா ஒலி தடை விதித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் இளைஞர்கள் நடத்திய போராட்டம் வன்முறையானது. இதனால் சமூக வலைதளங்கள் மீதான தடை ரத்து செய்யப்பட்டது.

இருப்பினும் போராட்டக்காரர்கள் பின்வாங்கவில்லை. கேபி சர்மா ஒலியின் ஆட்சி மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்து வந்தன. இதனை கண்டித்து அவ்வப்போது போராட்டங்கள் நடந்து வந்த நிலையில் கேபி சர்மா ஒலி ராஜினாமா செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்தனர்.
அதுமட்டுமின்றி அரசியல் கட்சி தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அரசியல்வாதிகளின் வீடு, நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம் தீவைத்து எரிக்கப்பட்டது. இதனால் நேற்று வன்முறை கட்டுக்கடங்காமல் நாடு முழுவதும் பரவியது.
இதையடுத்து கேபி சர்மா ஒலி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனாலும் வன்முறை இன்னும் தொடர்கிறது. ராணுவம் தற்போது நாட்டை கட்டுப்பாட்டில் எடுத்து வன்முறையை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இதற்கிடையே தான் நேபாள வன்முறை தொடர்பான வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. நாடாளுமன்ற கட்டத்துக்குள் நுழைந்து போராட்டக்காரர்கள் சூறையாடியது, தீவைத்தது, அமைச்சர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை விரட்டி விரட்டி தாக்கியது என பல்வேறு வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
அந்த வகையில் தற்போது இன்னொரு வீடியோ வெளியாகி உள்ளது. வன்முறையை பயன்படுத்திய சிலர் சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்து டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏசி, மிக்சி, கிரைண்டர், ஆடைகள், உணவு பொருட்கள் உள்பட பல விலை உயர்ந்த பொருட்களை அள்ளி சென்றனர்.
चलिए- ये सब भी कर गए.
— Govind Pratap Singh | GPS (@govindprataps12) September 10, 2025
बड़े-बड़े आउटलेट से एसी-फ्रिज और सामान लूट ले गए.
📍 नेपाल pic.twitter.com/FADYzUqHTB
சில பெண்கள் பெரிய பெரிய பாக்ஸ்களை தலையில் சுமந்து தூக்கி சென்றனர். சூப்பர் மார்க்கெட், மால், ஷோரூம் உள்ளிட்ட பல இடங்களில் பொதுமக்கள் இந்த பகல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பரவி வருகிறது.
One more video of looting.
— Chauhan (@Platypuss_10) September 10, 2025
During the Nepal protest, Many people were seen looting shops & shopping malls! pic.twitter.com/7BdlU8JmiO
அதேபோல் சில இடங்களில் ஜவுளி கடைகள் பூட்டுப்போட்டு பூட்டப்பட்டு இருந்தது. ஆனாலும் பொதுமக்கள் விடவில்லை. ஜவுளிக்கடைகளின் பூட்டை உடைத்தும், கண்ணாடி ஜன்னல்களை உடைத்தும் உள்ளே சென்று ஆடைகளை அள்ளி சென்றனர். இந்த வீடியோவும் தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications