இந்திய பகுதிகளை உள்ளடக்கி 100 ரூபாய் நோட்டு வெளியீடு.. சீண்டி பார்க்கும் நேபாளம்.. வெடித்த சர்ச்சை

Subscribe to Oneindia Tamil

காத்மாண்டு: நம் நாட்டின் அண்டை நாடான நேபாளம் உள்ளது. இந்நிலையில் தான் நேபாளத்தின் மத்திய வங்கி, தனது புதிய 100 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் பகுதிகளை உள்ளடக்கிய போட்டோ இடம்பெற்றுள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

நம் நாட்டின் அண்டை நாடாக நேபாளம் உள்ளது. இந்நிலையில் தான் சீனா, பாகிஸ்தான், வங்கதேசத்தை தொடர்ந்து நேபாளமும் நம் நாட்டை சீண்டி பார்க்கிறது. பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீருக்கு உரிமை கொண்டாடுகிறது.

nepal-released-a-new-100-rupee-currency-note-that-features-including-the-indian-territories

அதேபோல் சீனா அருணாச்சல் பிரதேசத்துக்கு உரிமை கொண்டாடுகிறது. வங்கதேசம் வடகிழக்கு மாநிலங்களை தங்கள் நாட்டுடன் இணைப்போம் என்று வாய்ச்சவடால் கொடுத்து வருகிறது. இந்த 3 நாடுகளும் சட்டவிரோதமாக நம் நாட்டின் பகுதிகளுக்கு சொந்தம் கொண்டாடி வருகிறது.

அந்த வரிசையில் தற்போது மற்றொரு அண்டை நாடான நேபாளமும் நம் நாட்டை சீண்ட தொடங்கி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த சில இடங்களுக்கு நேபாளம் நீண்டகாலமாக சொந்தம் கொண்டாடி வருகிறது. இது சட்டவிரோதம் என்றாலும் கூட நேபாளம் தொடர்ந்து அந்த தவறை செய்து வருகிறது.

நேபாளத்தை எடுத்து கொண்டால் அந்த நாடு மிகவும் சிறியது. நம் நாட்டுடன் 1,850 கிலோமீட்டர் தொலைவுக்கு எல்லையை பகிர்ந்து வருகிறது. மாநிலங்கள் வாரியாக பார்த்தால் சிக்கிம், மேற்கு வங்கம், பீகார், உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் நேபாளத்துடன் எல்லையை பகிர்ந்து வருகிறது.

இந்நிலையில் தான் உத்தரகாண்ட் மாநிலத்துக்கு சொந்தமான லிபுலேக், லிம்பியாதுரா மற்றும் காலாபானி உள்ளிட்ட இடங்கள் நம் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளன. இந்த இடங்களுக்கு நேபாளம் உரிமை கோரி வருகிறது. இதற்கு நம் வெளியுறவுத்துறை கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளது. இப்படியான சூழலில் தான் தற்போது நேபாளம் புதிய 100 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வெளியிட்டுள்ளது. அந்த நாட்டின் ரிசர்வ் வங்கி சார்பில் நேற்று புதிய 100 ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டது.

அந்த நோட்டில் இடம்பெற்றிருந்த போட்டோக்கள் தான் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது. அதாவது நம் நாட்டுக்கு சொந்தமான லிபுலேக், லிம்பியாதுரா, காலாபானி உள்ளிட்ட இடங்களை உள்ளடக்கும் வகையிலான போட்டோ 100 ரூபாய் நோட்டில் இடம்பெற்றுள்ளது. இதுதான் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

மேலும் இந்த புதிய ரூபாய் நோட்டின் எவரெஸ்ட் சிகரத்தின் படம் உள்ளது. அதேபோல் அந்த நாட்டின் தேசிய மலரான ரோடோடென்ட்ரானின் வாட்டர்மார்க்கு இடம் பெற்றுள்ளது. அதோடு புத்தர் பிறந்த இடம் லும்பினி என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. நோட்டின் பின்பக்கத்தில் ஒற்றை கொம்பு கொண்டா காமண்டாமிருகத்தின் படம் இடம்பெற்றுள்ளது. அதேபோல் பார்வையற்றவர்கள் ரூபாய் நோட்டை அடையாளம் காணும் வகையிலும் இந்த நோட்டு அச்சிடப்பட்டுள்ளது.

நம் நாட்டின் இந்த பகுதிகளை நேபாளம் உரிமை கொண்டாடுவது ஒன்றும் புதிது இல்லை. அவ்வப்போது இதுபோன்ற சட்டவிரோத உரிமை கோரலில் நேபாளம் ஈடுபட்டு வருகிறது. முன்னதாக கடந்த 2020ம் ஆண்டில் நேபாளம் நம் நாட்டின் இந்த பகுதிகளை சொந்தம் கொண்டாடியது. நேபாள வரைபடம் அந்த இடங்களை உள்ளடக்கி வெளியிடப்பட்டது. அப்போது நம் நாட்டின் வெளியுறவுத்துறை கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக வெளியுறவுத்துறை சார்பில், ‛‛எந்தவொரு ஒருதலைபட்ச நடவடிக்கையும் கள யதார்த்தத்தை மாற்றாது. எல்லை பிரச்சனைக்கான தீர்வு என்பது தொடர் பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது. இதுபோன்ற செயற்கையாக பிராந்திய உரிமைகோரல்களை யாரும் ஏற்கமாட்டார்கள். என்று ஏற்கனவே இந்தியா எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. ஆனாலும் நேபாளம் அடங்காமல் மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+