காசாவை முழுமையாக கட்டுப்பாட்டில் எடுப்போம்.. கொக்கரித்த இஸ்ரேல் பிரதமர்! உற்று நோக்கும் ஈரான்

Subscribe to Oneindia Tamil

டெல் அவிவ்: காசாவில் கடந்த 3 நாட்களில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், நாங்கள் காசாவை முழுமையாக கட்டுப்பாட்டில் எடுப்போம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

பாலஸ்தீனத்தை தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்று இஸ்ரேல் திட்டமிட்டிருப்பதாகவும், அதன் முதற்கட்ட பணிதான், காசாவை கட்டுப்படுத்துவது என, நெதன்யாகு பேச்சு குறித்து சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியிருக்கின்றனர்.

Israel Gaza Netanyahu

நெதன்யாகு கூறுகையில், "ஹமாஸுடன் சண்டை தீவிரமாக இருக்கிறது. நாங்கள் முன்னேறி வருகிறோம். விரைவில் காசா முழுவதையும் கட்டுக்குள் கொண்டு வருவோம். இதில் நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம். எங்கள் வெற்றியை தடுக்க முடியாத வகையில் நாங்கள் செயல்படுவோம்" என்று கூறியுள்ளார். சமீபத்தில் டெலிகிராமில் அவர் இவ்வாறு பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் போரை தீவிரப்படுத்தி வருகிறது. போரில் கொல்லப்பட்ட பாலஸ்தீன பொதுமக்களின் எண்ணிக்கை இதுவரை 60,000ஐ கடந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பப்பட்ட உணவு, மிக குறைந்த அளவே உள்ளே அனுமதிக்கப்பட்டு வந்தது. இதன் முழு கட்டுப்பாட்டையும் இஸ்ரேல் தன் வசம் வைத்திருந்தது. ஆனால், நேற்று திடீரென அதிசயிக்கத்தக்க வகையில், அனைத்து உணவு டிரக்குகளுக்கும் இஸ்ரேல் அனுமதி அளித்திருந்தது.

இதைப்பற்றி கூறிய நெதன்யாகு, "ராஜதந்திரத்தின் ஒரு பகுதியாக உணவு லாரிகள் உள்ளே அனுமதிக்கப்பட்டிருக்கின்றன" என தெரிவித்திருக்கிறார்.

இரு நாடுகளுக்கும் இடையேயான சண்டை, மத்திய கிழக்கில் அமைதியின்மையை ஏற்படுத்தியிருக்கிறது. பண்டைய பாலஸ்தீனத்தின் ஒரு பகுதிதான் இன்றைய இஸ்ரேலாக இருக்கிறது. ஆனால் முழு பாலஸ்தீனத்தையும் ஆக்கிரமிக்க இஸ்ரேல் அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கு அமெரிக்காவும் உடந்தை. எனவே, பாலஸ்தீன மக்கள் மீதும், பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக இருக்கும் காசா மக்கள் மீதும் இஸ்ரேல் ராணுவம் அடிக்கடி அடக்குமுறைகளை ஏவி வந்தது.

இதற்கு எதிராக போராடிய மக்கள் கொடூரமாக ஒடுக்கப்பட்டார்கள். இது பாலஸ்தீனத்தில் ஆயுதம் ஏந்திய குழுக்கள் உருவாக வழிவகை செய்தது. இப்படியான குழுக்களில் ஹமாஸும் ஒன்று. ஹமாஸ், இஸ்ரேல் மீது கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கவும், ஹமாஸை முற்றிலுமாக ஒழிக்கிறேன் எனவும் இஸ்ரேல் தீவிரமான போரை கையில் எடுத்திருக்கிறது. இந்த போர் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் நடந்து வருகிறது.

ஆனால் ஹமாஸை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. இப்படி இருக்கையில்தான் காசா பகுதியை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொள்வதாக நெதன்யாகு அறிவித்திருக்கிறார்.

Israel Gaza Netanyahu

சரி இந்த பிரச்சனைக்கு என்னதான் தீர்வு என்று கேட்டால், நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார். ஆனால் ஹமாஸ் முற்றிலுமாக காசாவை விட்டு வெளியேற வேண்டும், காசா ஆயுதம் இல்லாத பகுதியாக இருக்க வேண்டும் என்றெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமில்லாத நிபந்தனைகளை நெதன்யாகு போடுகிறார்.

இந்த பிரச்சனையை ஈரான் உற்று நோக்கி வருகிறது. ஹமாஸுக்கு ஆதரவாக ஈரானின் ஹவுதி குழுக்கள் தாக்குதலை மேற்கொண்டு வந்தன. இப்போது ஹமாஸை இஸ்ரேல் நெருக்குவதால், இதில் ஈரான் தலையிடவும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+