ட்ரூடோவுக்கு இதே வேலையா போச்சு.. உடனே பாய்ந்து வந்த நெட்டிசன்கள்.. ஒரே நக்கல்! என்ன மேட்டர் தெரியுமா
ஒட்டாவா: இந்தியா கனடா இடையே மோதல் தொடரும் நிலையில், ஜஸ்டின் ட்ரூடோ தரப்பில் இருந்து வரும் அறிவிப்புகளை நெட்டிசன்கள் வைத்துச் செய்து வருகின்றனர்.
காலிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் கனடாவில் வைத்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக ஜஸ்டின் ட்ரூடோ கூறிய நிலையில் அது பெரிய சர்ச்சையானது.

இந்தியா இந்தக் குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இருப்பினும், தொடர்ந்து ஆதாரம் இல்லாமல் இந்தியாவைக் கனடா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. இனால் இரு தரப்பு உறவு தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.
ஜஸ்டின் ட்ரூடோ: இதற்கிடையே இப்போது ஜஸ்டின் ட்ரூடோவை இணையத்தில் நெட்டிசன்கள் வைத்து செய்து வருகின்றனர். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா விவகாரம் தொடர்பாக ஒவ்வொரு உலக தலைவர்களிடமும் கால் செய்து பேசி வருவதாக இணையத்தில் நெட்டிசன்கள் வைத்துச் செய்து வருகின்றனர்.
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பான இந்தியா உடனான உறவு குறித்து ட்ரூடோ முதலில் ஐக்கிய அமீரக அதிபரிடம் ஆலோசித்த நிலையில், தொடர்ந்து அவர் ஜோர்டான் மன்னர் உடனும் இது தொடர்பாக ஆலோசித்துள்ளார். இப்படி இந்திய விவகாரம் குறித்து அவர் உலகின் மற்ற நாடுகளைச் சேர்ந்த தலைவர்களிடம் தொடர்ந்து போன் செய்து பேசி வருவதையே இணையத்தில் நெட்டிசன்கள் வைத்துச் செய்து வருகின்றனர்.

கனடா அறிவிப்பு: ஜோர்டான் மன்னரிடம் பேசியது குறித்து கனடா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல்-ஹுசைனுடன் பேசினார். அவர் கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவு குறித்தும் விளக்கினார். சட்டத்தின் படி ஆட்சி நடப்பது மற்றும் தூதரக உறவு குறித்த வியன்னா ஒப்பந்தத்தை மதிக்க வேண்டிய முக்கியத்துவம் குறித்தும் ட்ரூடோ விளக்கினார்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ட்ரூடோ இதற்கு சில நாட்கள் முன்பு தான் ஐக்கிய அமீரக அதிபர் முகமது பின் சயீத்துடன் பேசியிருந்தார். அப்போதும் அவர் இந்தியா உடனான உறவு குறித்தும் சட்டத்தின்படி ஆட்சி நடப்பதை மதிப்பது குறித்தும் பேசியிருந்தார். இப்படி ட்ரூடோ உலக தலைவர்களை வரிசையாக அழைத்து இந்தியா குறித்து முறையிட்டு வரும் நிலையில், இதை நெட்டிசன்கள் வைத்துச் செய்து வருகின்றனர்.
நக்கல்: ஜஸ்டின் ட்ரூடோவை கிண்டல் செய்யும் வகையில் நெட்டிசன்கள் மீம்களை பதிவிட்டு வருகின்றனர். ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா வந்திருந்த ட்ரூடோ விமான கோளாறு காரணமாக சில நாட்கள் இங்கே தங்க வேண்டி இருந்தது. அதையும் இதையும் இணைத்து நெட்டிசன்கள் சிலர் மீம்களை பதிவு செய்து வந்தனர்.
ஒவ்வொரு உலக நாட்டிற்கும் போன் செய்து பேசி வரும் ட்ரூடோ சீக்கிரம் ஏர்டெல் கஸ்டமர் கேருக்கும் போன் செய்து இந்தியா குறித்து ஆலோசித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார். இப்படி ட்ரூடோவின் நடவடிக்கைகளை அவர்கள் சரமாரியாகத் தாக்கி பதிவிட்டு வருகின்றனர்.

சர்ச்சைகள்: என்றைக்கு ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவை விமர்சிக்கும் வகையில் கருத்துகளைத் தெரிவித்தாரோ.. அப்போது முதலே அவர் வரிசையாகப் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். முதலில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கனடாவுக்குச் சென்ற போது, நாஜி படை வீரர் ஒருவர் கனடா நாடாளுமன்றத்தில் வைத்துக் கவுரவிக்கப்பட்டார். பல லட்சம் யூதர்களை கொன்று குவித்த நாஜி படையைச் சேர்ந்த வீரர் கவுரவிக்கப்பட்டதற்கு உலகெங்கும் எதிர்ப்புகள் கிளம்பினர். இதையடுத்து ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்க மன்னிப்பும் கேட்டார்.
இந்த விவகாரத்தில் கனடா சபாநாயகர் ராஜினாமாவும் செய்ய வேண்டி இருந்தது. இதையடுத்து புதிய சபாநாயகர் பதவியேற்றார். அப்போது முதல் நாளே அவையில் அனைவருக்கும் முன்பு சபாநாயகரைப் பார்த்து விளையாட்டாக நாக்கை நீட்டி கண் அடித்தார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டான நிலையில், பிரதமர் பதவியில் இருக்கும் ஒருவர் இப்படிச் செய்யலாமா எனப் பலரும் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications