கட்டிப்பிடித்து டார்ச்சர் செய்யும் இளசுகள்! அதுவும் பொது இடத்தில்.. நியூசிலாந்து அரசு போட்ட உத்தரவு
ஆக்லாந்து: இந்த காலத்தில் பொதுமக்கள் பலரும் வேலை காரணமாக தங்கள் சொந்த ஊர்களை விட்டு வெளியே வர வேண்டி உள்ளது. மெட்ரோ நகரங்களில் தான் வேலை வாய்ப்பு இருப்பதால் சொந்த ஊர்களை விட்டு வர வேண்டி உள்ளது. இந்தியா மட்டுமின்றி... உலகெங்கும் இதே நிலை தான். இதற்கிடையே நியூசிலாந்து நாட்டில் இதனால் புது பிரச்சினை ஏற்படுகிறதாம். இது குறித்து நாம் பார்க்கலாம்.
நம்ம ஊரில் ரயில் நிலையங்களில் உணர்ச்சிப்பூர்வமான பிரியாவிடைகளை நாம் பார்த்து இருப்போம். அதுபோலத் தான் வெளிநாடுகளில் விமான நிலையங்களில் பிரியாவிடைகள் தருவார்கள்.

தங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பரை விட்டுப் பிரிவு யாருக்கும் அவ்வளவு ஈஸியாக இருக்காது. இதனால் கட்டியணைத்து அன்பைப் பரிமாறிக் கொள்வார்கள். ஆனால், இது மற்றவர்களுக்கு டார்ச்சராக மாறினால் என்ன செய்வது.. அப்படியொரு சம்பவம் தான் நியூசிலாந்தில் நடந்துள்ளது.
நியூசிலாந்து ஏர்போர்ட்: அதாவது நியூசிலாந்தின் டுனெடின் விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் பிரியாவிடை தரும் போது கட்டியணைக்கிறார்களாம். பிரிய மனமில்லாமல் பல நிமிடங்கள் இப்படியே கட்டியணைத்து கண்ணீருடன் பிரியாவிடை தருகிறார்கள். ஆனால், இது அவசர அவசரமாக விமானத்தைப் பிடிக்கச் செல்லும் இளசுகளுக்கு டார்ச்சராக மாறிவிடுகிறது.
இதனால் இங்குள்ள ஏர்போர்ட் நிர்வாகம் கட்டிப்பிடிக்கக் கட்டுப்பாடு விதித்துள்ளது. அதாவது இங்குப் பிரியாவிடை தரும் போது அதிகபட்சம் 3 நிமிடம் தான் கட்டியணைக்க வேண்டுமாம். விமான நிலையத்தில் நெரிசல் ஏற்படுவதைத் தடுக்கவே இதுபோல மூன்று நிமிடத்திற்கு மேல் கட்டியணைக்கக் கூடாதது என்ற உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.
மூன்று நிமிடங்கள்: ஏர்போர்ட் வளாகத்திலேயே இதற்கான எச்சரிக்கை போர்டுகளை நம்மால் பார்க்க முடிகிறது. அதில், "அதிகபட்சம் 3 நிமிடங்கள் மட்டுமே கட்டியணைக்கலாம்" என்று கூறப்பட்டுள்ளது. ஒருவேலை அதிகம் கட்டியணைத்து பிரியாவிடை தர வேண்டும் என்றால் பார்கிங் நிலையத்திற்குச் சென்று அதைச் செய்யுங்கள் என்ற போர்டுகளையும் பார்க்க முடிகிறது.
விமான நிலையத்தில் நெரிசல் ஏற்படாமல் இருக்கக் கடந்த செப். மாதம் இந்த உத்தரவைப் பிறப்பித்தாக ஏர்போர்ட் தலைமை நிர்வாக அதிகாரி டான் டி போனோ தெரிவித்தார். இந்த உத்தரவு நல்ல பலனைத் தந்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார். டி போனோ மேலும் கூறுகையில், "இந்த உத்தரவைப் பலரும் வரவேற்றார்கள். அதேநேரம் சிலர் நாங்கள் அடிப்படை உரிமைகளை மீறுவதாக விமர்சித்தனர். கட்டியணைத்து பிரியாவிடை தருவது அடிப்படை உரிமை என்றும் அதற்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கக்கூடாது என்றனர்.
காரணத்தை கேளுங்க: காரில் பயணிகளை டிராப் செய்ய வருவோர் சாலையிலேயே நிறுத்துகிறார்கள். கேட்டால் பிரியாவிடை தர லேட் ஆகிவிட்டதாகச் சொன்னார்கள். இதன் காரணமாகவே இந்த போர்ட்டை வைத்தோம். அதேநேரம், ஒருவரைக் கட்டியணைத்து பிரியாவிடை தர 180 நொடிகள் தாராளமாக போதும்" என்றார்.
ஒருவேலை 3 நிமிடத்திற்கு மேல் கட்டியணைத்தால் என்ன செய்வார்கள். அபராதமா.. இல்லை சிறையா என்று கேட்பது புரிகிறது. இரண்டும் இல்லை.. ஆமாம் இதை அறிவிப்பாக மட்டுமே வைத்தாகவும் எத்தனை நேரம் கட்டியணைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை எல்லாம் தங்களால் பார்க்க முடியாது என்றும் டான் டி போனோ குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications