"ஏற்கவே முடியாது!" இந்தியாவை சாடிய நியூசிலாந்து அமைச்சர்.. வர்த்தக ஒப்பந்தத்திற்கு மறுநாளே எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

ஆக்லாந்து: நியூசிலாந்து நாட்டிற்கும் இந்தியாவுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்ததாக நேற்று தான் அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதற்கிடையே இந்த அறிவிப்பு வந்த மறுநாளே நியூசிலாந்தில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் இதற்குக் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாகப் பல மாதங்களாகப் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. நீண்ட விரிவான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, நேற்றைய தினம் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. விரைவிலேயே இரு நாட்டுத் தலைவர்களும் வர்த்தக ஒப்பந்தத்தைக் கையெழுத்திடுவார்கள் எனச் சொல்லப்பட்டது.

New Zealand Foreign Minister Winston Peters Calls India FTA a Bad Deal and slams on Dairy Demands

எதிர்ப்பு

இதற்கிடையே இது குறித்த அறிவிப்பு வந்த மறுநாளே நியூசிலாந்தில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் என்பவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இந்தியா- நியூசிலாந்து இடையேயான இந்தத் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் எந்த விதத்திலும் தடையற்றதாகவோ அல்லது நியாயமானதாகவோ இல்லை என்று வின்ஸ்டன் பீட்டர்ஸ் விமர்சித்துள்ளார்.

மேலும், நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் இந்த ஒப்பந்தம் விவாதத்திற்கு வரும்போது தனது கட்சி இதை எதிர்க்கும் என்றும் அவர் தெரிவித்தார். குடியேற்றம் தொடர்பான பல சலுகைகளை நியூசிலாந்து விட்டுக்கொடுப்பதாகவும், அதேநேரம் பால் உற்பத்தித் துறை போன்ற முக்கியமான துறைகளில் நியூசிலாந்திற்குப் போதுமான சலுகைகள் இந்த ஒப்பந்தத்தில் இல்லை என்றும் அவர் வாதிட்டார்.

நியூசிலாந்து அமைச்சர்

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "துரதிர்ஷ்டவசமாக, இது நியூசிலாந்துக்கு ஒரு மோசமான ஒப்பந்தம். நியூசிலாந்து தனது சந்தையை இந்தியப் பொருட்களுக்கு முழுமையாகத் திறக்கிறது. அதேநேரம் நியூசிலாந்தின் முக்கிய ஏற்றுமதியாக பால் இருக்கும் சூழலில், அதற்கான இறக்குமதி வரியைக் குறைக்க இந்தியா ஒப்புக்கொள்ளவில்லை. இது நியூசிலாந்து விவசாயிகளுக்கும் கிராமப்புற மக்களுக்கும் எதிரான ஒன்று.

இதற்கு முன்பு நியூசிலாந்து மற்ற நாடுகளுடன் போட்ட வர்த்தக ஒப்பந்தங்களில் பால் பொருட்களுக்கு விலக்கு இருக்கும். ஆனால், பால், சீஸ் மற்றும் வெண்ணெய் போன்ற முக்கிய பால் பொருட்களுக்குச் சலுகை இல்லாமல் நியூசிலாந்து போட்டுள்ள முதல் வர்த்தக ஒப்பந்தம் இதுவாகும். இது மிக மோசமான ஒரு வர்த்தக ஒப்பந்தம். இதை அவசர அவசரமாக நியூசிலாந்து இறுதி செய்வதே தவிர்க்க வேண்டும். எங்கள் கூட்டணிக் கட்சியான நேஷ்னல் கட்சியை மீண்டும் மீண்டும் பேச்சுவார்த்தை சொல்ல வலியுறுத்தினோம். இந்த விவகாரத்தில் சிறந்த தீர்வை பெற நாடாளுமன்றத்திலும் இது தொடர்பாக விவாதிக்க உள்ளோம்" என்றார்.

பால் பொருட்கள்

நியூசிலாந்தின் நாட்டின் மிகப் பெரிய முக்கியமான ஏற்றுமதியாக பால் பொருட்கள் ஏற்றுமதி இருக்கிறது. நடப்பாண்டில் மட்டும் நவம்பர் வரை சுமார் $13.94 பில்லியன் மதிப்பிலான பால் பொருட்களை நியூசிலாந்து ஏற்றுமதி செய்துள்ளது. இது நியூசிலாந்தின் மொத்த ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 30 சதவீதமாகும். எனவே, இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தத்தில் பால் பொருட்கள் ஏற்றுமதிக்கு விலக்கு வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாகும்.

ஏன் முக்கியம்

நியூசிலாந்தைப் பொறுத்தவரை அங்கு இப்போது கூட்டணி அரசே இருக்கிறது. 123 பேரைக் கொண்ட நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் ஆளும் கூட்டணி பலம் 68ஆக இருக்கிறது. இதில் நேஷ்னல் கட்சிக்கு 49 எம்பிக்களும், ஏசிடி கட்சிக்கு 11 எம்பிகளும் உள்ளனர். இந்த நியூசிலாந்து ஃபர்ஸ்ட் கட்சிக்கு 8 எம்பிக்கள் உள்ளனர். பெரும்பான்மைக்கு இந்த 8 பேரின் ஆதரவு முக்கியம் என்பதால் பீட்டர்ஸ் கருத்துகள் கவனம் பெற்றுள்ளது.

கடந்த வாரம் இந்த ஒப்பந்தம் நியூசிலாந்து அமைச்சரவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதே கூட நியூசிலாந்து ஃபர்ஸ்ட் கட்சி கருத்து வேறுபாடுகளுடன் ஒப்புக்கொள்ளும் என்றே கூறியிருந்தது. மேலும், இந்த ஒப்பந்தத்தை இப்படியே நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினால் நிச்சயம் எதிர்ப்போம் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+