கடைசி நிமிடத்தில் திரும்ப கிடைத்த லாட்டரி- ரூ.300 கோடி வென்ற நைஜீரிய தம்பதி

நைஜீரியாவை சேர்ந்தவர் ஹகீம்நோசிரு. இவரது மனைவி அபியோலா. இவர்கள் கனடாவில் அன்டாரியா என்ற இடத்தில் தங்கியுள்ளனர். அங்கு ரூபாய் 300 கோடி பரிசு தொகைக்கான லாட்டரி சீட்டை வாங்கினர்.
அந்த சீட்டை அபியோலா தனது பர்சில் வைத்திருந்தார். இதற்கிடையே லாட்டரி சீட்டு இருந்த அந்த பர்ஸ் தொலைந்து விட்டது.ஆனால் அந்த லாட்டரி சீட்டுக்கு தான் பரிசு தொகை விழுந்தது. பரிசு விழுந்தும் அதை பெற முடியாததால் தம்பதி சோகம் அடைந்தனர்.
அந்த லாட்டரி சீட்டை வீடு முழுவதும் தேடிப் பார்த்தனர். எங்கும் கிடைக்கவில்லை. இதனால் "பர்ஸ்" காணவில்லை என போலீசில் புகார் செய்தனர்.
கடந்த மாதம் 1 ஆம் தேதிதான் பரிசு தொகையை பெற கடைசி நாளாகும். இந்த நிலையில் அவர்கள் வழக்கமாக செல்லும் தேவாலயத்துக்கு சென்றனர். அங்கு ஒரு பகுதியில் காணாமல் போன பர்ஸ் பொருட்களுடன் கிடந்தது.
இதனால் ஆச்சரியம் அடைந்த அவர்கள் தொலைந்து போன தங்களது பர்சை எடுத்து அதை திறந்து பார்த்தனர். உள்ளே அவர்களது லாட்டரி சீட்டு இருந்தது.
மகிழ்ச்சி அடைந்த அவர்கள் போலீஸ் நிலையத்துக்கு சென்று தங்களது புகாரை வாபஸ் பெற்றனர். பிறகு கடைசி நேரத்தில் பரபரப்புடன் ரூபாய் 300 கோடி பரிசு தொகையை பெற்றனர்.அதன் பின்னர் தான் நிம்மதி பெருமூச்சு விட்டனர். பரிசு தொகையை கொண்டு உலகம் முழுவதும் சுற்றி வர அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications