இனி ஒருபோதும் பாலஸ்தீனம் தனி நாடாக உருவாகாது! சர்வதேச விதிமீறி இஸ்ரேல் எடுத்த நடவடிக்கை!

Subscribe to Oneindia Tamil

ஜெருசலேம்: மேற்கு கரையில் உள்ள ஹெப்ரான் நகரின் நிர்வாகம் தொடர்பாக 1997-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 'ஹெப்ரான் ஒப்பந்தத்தின்' முக்கிய பகுதிகளை இஸ்ரேல் ரத்து செய்துள்ளதாக அந்நாட்டு நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் அறிவித்துள்ளார். இந்த அதிரடி முடிவின் மூலம், இனி பாலஸ்தீனம் தனி நாடாக உருவாவது சாத்தியமில்லை என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர்.

பாலஸ்தீனத்தை உடைக்க வேண்டும் என்பதுதான் இஸ்ரேலின் கனவு. அதை மெல்ல செயல்படுத்தி வருகிறது. இந்த நடவடிக்கையின் முக்கிய கட்டத்தை தற்போது இஸ்ரேல் அமல்படுத்தியிருக்கிறது.

Palestine

ஓஸ்லோ உடன்படிக்கை

அதாவது, ஓஸ்லோ அமைதி உடன்படிக்கையின் ஒரு பகுதியாக, 1997-ல் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாலஸ்தீன தலைவர் யாசர் அராஃபத் ஹெப்ரான் நகரம் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தனர். இதன் மூலம் இந்த நகரம் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டது.

H1 பகுதி

H2 பகுதி

பாலஸ்தீனத்தின் அதிகாரம்

இதில், முதலில் உள்ள H1 பகுதி, பாலஸ்தீன அதிகாரப்பூர்வ அமைப்பின் முழுப் பொறுப்பில் வந்தது. இரண்டாவது உள்ள H2 பகுதி, யூதர்களின் குடியேற்றங்கள் மற்றும் புனிதத் தலங்கள் உள்ள பகுதியாகும். இதில் பாதுகாப்புப் பொறுப்பை இஸ்ரேல் கவனித்துக் கொண்டாலும், நகர்ப்புறத் திட்டமிடல், கட்டுமானம் மற்றும் சிவில் நிர்வாக அதிகாரங்கள் பாலஸ்தீன நகராட்சியிடமே இருந்தது.

ஆனால், தற்போது நகர்ப்புறத் திட்டமிடல், கட்டுமானம் மற்றும் சிவில் நிர்வாக அதிகாரங்களை முழுமையாக இஸ்ரேல் எடுத்துக்கொள்வதாக அறிவிக்கபட்டிருக்கிறது.

இஸ்ரேலின் அடாவடி

இது குறித்து நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் கூறுகையில், “இத்தனை ஆண்டுகளாக ஆஸ்லோ ஒப்பந்தத்தின் மிக அபத்தமான விதிகளில் ஒன்று அமலில் இருந்தது. யூதர்களின் குடியேற்றப் பகுதிகள் மற்றும் இப்ராஹிமி மசூதி போன்ற புனிதத் தலங்களின் நிர்வாக அதிகாரம் பாலஸ்தீன நகராட்சியிடம் சிக்கியிருந்தது. அதற்கு நேற்றோடு நாங்கள் முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

இனிமேல் ஹெப்ரானில் உள்ள யூதக் குடியேற்றப் பகுதிகள், உள்கட்டமைப்பு மற்றும் வரலாற்றுச் சின்னங்களை மேம்படுத்தும் முழு அதிகாரமும் இஸ்ரேலின் 'உயர்தரத் திட்டமிடல் குழுவிடம்' ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீன அரசு இந்த நடவடிக்கையை சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது மற்றும் நேரடி ஆக்கிரமிப்பு என்று கடுமையாகக் கண்டித்துள்ளது. தங்களை ஒடுக்க நினைக்கும் இந்த முடிவுக்கு எதிராக அமெரிக்காவும் உலக நாடுகளும் உடனடியாக தலையிட வேண்டும் எனப் பாலஸ்தீன வெளியுறவுத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

முழுமையான பாலஸ்தீனம்

ஹெப்ரான் நகரை முழுமையாக இஸ்ரேல் டேக் ஓவர் செய்துவிட்டால், தனி சுதந்திர பாலஸ்தீனம் அமைவது சாத்தியமே இல்லை என்று சர்வதேச அரசியல் விமர்சர்கள் உறுதியாக கூறுகின்றனர். இதற்கான காரணங்களையும் அவர்கள் பட்டியலிட்டிருக்கிறார்கள்.

அதாவது, மேற்குக்கரையின் மொத்தப் பொருளாதாரத்தில் 3ல் 1 பங்கை ஹெப்ரான் நகரமே வழங்குகிறது. பளிங்கு, கண்ணாடிப் பொருட்கள், காலணிகள் மற்றும் விவசாய உற்பத்தியில் இது பாலஸ்தீனத்தின் மிகப்பெரிய வர்த்தக மையமாகத் திகழ்கிறது. ஒரு தனி நாடு சுயமாக இயங்க, ஹெப்ரான் போன்ற ஒரு வலுவான பொருளாதார மையம் பாலஸ்தீனத்திற்கு மிகவும் அவசியம். இதை திட்டமிட்டு கைப்பறுவதன் மூலம், தனி பாலஸ்தீனம் என்கிற சிந்தனையை இஸ்ரேல் காலி செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+