2025 வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு.. உலோக கரிம ஆய்வுக்காக மூவருக்கு நோபல் பரிசு அறிவிப்பு
ஸ்டாக்ஹோம்: இந்த வாரம் சர்வதேச அளவில் பல்வேறு துறைகளிலும் தலைசிறந்து விளங்கும் ஆய்வாளர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இப்போது வேதியியலுக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுசுமு கிடகவா, ரிச்சர்ட் ராப்சன், ஒமர் எம்.யாகி ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு துறைகளில் மிக சிறந்த ஆய்வுகளை மேற்கொள்வோருக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்படும். இந்தாண்டிற்கான நோபல் பரிசு அறிவிப்பு கடந்த திங்கள் முதல் வெளியாகி வருகிறது. முதல் நாள் நேற்று மருத்துவத் துறைக்கும் இரண்டாம் நாளான நேற்று இயற்பியல் துறைக்குமான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே இன்று வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. சுசுமு கிடகவா, ரிச்சர்ட் ராப்சன், ஒமர் எம்.யாகி ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சுசுமு கிடகவா ஜப்பானில் உள்ள க்யோடோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.. ரிச்சர்ட் ராப்சன் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் பல்கலைக்கழகத்திலும், ஒமர் எம்.யாகி அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராக இருக்கிறார்கள்.
உலோக-கரிமம் கட்டமைப்பு தொடர்பான ஆய்வுக்காக இந்த மூவருக்கும் நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications