Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"போர் அறிவிப்பு.." உள்ளே வந்த தென் கொரியா ட்ரோன்... டென்ஷனான வடகொரியா அதிபர் கிம்.. திடீர் பதற்றம்!

Subscribe to Oneindia Tamil

பியோங்யாங்: கொரியத் தீபகற்பத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. தென்கொரியா தனது வான்வழியில் டிரோன்களை பறக்கவிட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ள வடகொரியா இதற்குப் பதிலடியாகத் தாக்குதல் நடத்தத் தயார் நிலையில் இருப்பதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது. ஒரு வேலை தென்கொரியா மீது வடகொரியா தாக்குதல் நடத்தினால் அது அங்குப் போர் சூழலை ஏற்படுத்தும்.

வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் எப்போதுமே ஆகாது. பல ஆண்டுகளாகவே இந்த மோதல் போக்கு நிலவி வருகிறது. அவ்வப்போது தென்கொரியா மீது வடகொரியா சிறுசிறு தாக்குதல்கள் நடத்துவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளது.

north korea south korea world

இதற்கிடையே தென்கொரியா தங்கள் நாட்டின் மீது சட்டவிரோதமாக டிரோன்களை பறக்கவிட்டதாக வடகொரிய குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், இதற்குப் பதிலடி தரத் தயார் நிலையில் இருக்கத் தனது ராணுவத்தை அறிவுறுத்தியுள்ளது.

வடகொரியா: இது தொடர்பான தகவல்களை கொரிய சென்ட்ரல் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது தெற்கு எல்லை முக்கிய இடங்களில் உள்ள ராணுவம் ஒருங்கிணைந்து தாக்கத் தயார் நிலையில் இருக்குமாறு கொரிய மக்கள் ராணுவத்தின் ஜெனரல் கடந்த 12ம் தேதி உத்தரவிட்டுள்ளார். எல்லையில் ஏதாவது எதிர்பாராத மாற்றம் நடந்தால் உடனடியாக துப்பாக்கிச் சூடு நடத்தவும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வடகொரிய ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தலைநகரமான பியாங்யாங்கிற்குள் ட்ரோன்கள் ஊடுருவி நமது இறையாண்மையை மீறியுள்ளது. தென்கொரியா தேவையில்லாமல் இந்த செயலில் ஈடுபட்டு கொரியத் தீபகற்பத்தில் இராணுவ பதற்றத்தை அதிகரித்துள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

தயார் நிலை: மேலும், வரும் காலத்தில் இதுபோல எதாவது டிரோன்கள் ஊடுருவினால் அதற்குப் பதிலடி தர ராணுவம் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதை வடகொரிய ராணுவம் தனது செய்திக்குறிப்பில் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. நிலைமை மோசமானால் தென் கொரியாவில் உள்ள குறிப்பிட்ட இலக்குகளைக் குறிவைத்தும் வடகொரியா தாக்குதல் நடத்தும் என்பது போலவும் அதில் கூறப்பட்டுள்ளது.

போர் அறிவிப்பு: இத்தகைய நடவடிக்கைகள் ஆரம்பித்தால் அது நிச்சயம் ஒரு ஆயுத மோதலாக மாறும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒரு டிரோன் ஊடுருவல் நடக்காமல் இருக்க வட கொரியா கண்காணிப்பு மையங்களையும் ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், வரும் காலத்தில் வட கொரிய வான் பரப்பில் எந்தவொரு ட்ரோன்களும் நுழைந்தால் அது சட்டவிரோதமாகக் கருதப்படும் மற்றும் அதைப் போர் அறிவிப்பாகக் கருதித் தக்க பதிலடி தருவோம் என்றும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் அமைச்சகம் எச்சரித்துள்ளது

வடகொரியாவில் ஊடுருவிய டிரோன்கள் எந்த நாட்டின் உடையது என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், அது தென்கொரியா நாட்டிற்குச் சொந்தமானது என்பதை உறுதியாக நம்பும் வடகொரியா இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தென்கொரியா மறுப்பு: அதேநேரம் இந்தத் தகவலை தென்கொரியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. தங்கள் நாட்டு ராணுவம் வடகொரியா மீது எந்தவொரு டிரோனையும் அனுப்பவில்லை என்று தென்கொரியா தெரிவித்துள்ளது. அதேநேரம் தங்கள் நாட்டில் இருக்கும் வேறு எதாவது மக்கள் குழு இந்தச் செயலில் ஈடுபட்டார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தென்கொரிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே ரஷ்யா- உக்ரைன் இடையே மோதல் நிலவி வருகிறது.. அதேபோல இஸ்ரேல் - ஹிஸ்புல்லா, இஸ்ரேல் - ஈரான் இடையேயும் மோதல் நிலவி வருகிறது. இந்தச் சூழலில் மீண்டும் வெடித்துள்ள இந்த மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+