கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை டெஸ்ட் செய்த வடகொரியா.. அமெரிக்காவுக்கு ஷாக்! மாறும் போர் களம்!
பியாங்யாங்: ஈரானின் கடற்பகுதியை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர அமெரிக்க முயற்சித்து வரும் இந்த நேரத்தில், வடகொரியா மிக முக்கியமான ஆயுத சோதனையை நடத்தியிருக்கிறது.
இந்த சோதனை மூலம், அமெரிக்காவுக்கு நேரடி சாவலை விடுத்திருக்கிறது வடகொரியா. இந்த ஆயுத சோதனை சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது.

வடகொரியா என்ன செய்தது?
வடகொரியா தொடர்ந்து ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது என்பது உலகம் அறிந்த விஷயம். இப்படி இருக்கையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மிக முக்கியமான ஆயுத சோதனையை நடத்தியிருக்கிறது. அதாவது போர் கப்பல்களை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டிருக்கின்றன. இந்த வகை ஏவுகணைகளை தடுத்து நிறுத்துவது நடக்காத காரியம். எனவேதான் அமெரிக்கா இந்த சோதனை, கண்ணில் விளக்கெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு வாட்ச் செய்து வருகிறது.
ஏவுகணையின் சிறப்பம்சம்
வடகொரியா, தனது 'சோய் ஹியோன்' ரக டெஸ்ட்ராயர் கப்பலிலிருந்து இந்த ஏவுகணைகளை சோதித்து பார்த்திருக்கிறது. மொத்தம் 5 ஏவுகணைகள் சோதித்து பார்க்கப்பட்டிருக்கின்றன. இதில் 2 குரூஸ் ரக ஏவுகணை. மீதமுள்ள 3 கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள். இதில் குரூஸ் ரக ஏவுகணைகள் சுமார் 2 மணி நேரம் பறந்திருக்கின்றன. அதேபோல கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் சுமார் 32 நிமிடங்கள் வரை பறந்திருக்கின்றன.
சக்தி வாய்ந்த கப்பல்
இந்த சோதனையை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நேரில் பார்வையிட்டிருக்கிறார். பார்வையிட்டதுடன் நிற்காமல், அடுத்த கட்ட கட்டமைப்புகளை பலப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார். இந்த ஏவுகணையை விட முக்கியம், ஏவுகணை ஏவப்பட்ட 'சோய் ஹியோன்' கப்பல்தான். இது டெஸ்ட்ராயர் வகை கப்பல். அதாவது, ஒரு விமானம் தாக்கி கப்பலுக்கு 4-5 டெஸ்ட்ராயர் கப்பல்கள் பாதுகாப்புக்கு செல்லும். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்தது.
வடகொரியாவின் பிளான்
வடகொரியாவிடம் பெரிய நவீன கப்பல்கள் கிடையாது. தற்போதுதான் புதிய கப்பல்களை கட்டமைத்து வருகிறது. அந்த வகையில் இந்த கப்பல் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது. இந்த கப்பல் கட்டுமானத்தில் இருக்கிறது. இது 3-4வது கப்பலாகும். இந்த கப்பல்களை இந்த ஆண்டுக்குள் கட்டி முடிக்க வேண்டும் என்றும், ஆண்டுக்கு 2 போர் கப்பல்களை புதியதாக சேர்க்க வேண்டும் என்றும் வடகொரியா பிளான் செய்திருக்கிறது.
புதிய ஏவுகணை
இதெல்லாம் யாருக்கு முக்கியமோ? இல்லையோ.. அமெரிக்காவுக்கு மிக முக்கியமானதாகும். ஏனெனில் ஈரான் கடல் பகுதியில் அமெரிக்கா தனது கப்பல்களை நிலை நிறுத்தியிருக்கிறது. உலகில் தன்னை யாரும் தடுக்க முடியாது என்று நினைத்துக்கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கு, இந்த புதிய ஏவுகணை சோதனை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
-
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications