"அப்பா செஞ்ச தப்ப செய்ய விரும்பல".. மகளுடன் மீண்டும் தோன்றி.. கிம் ஜாங் எடுத்த முக்கிய முடிவு.. சபாஷ்

கிம் ஜோங் உன்னுக்கு சுமார் 39 வயதுதான் ஆகிறது. ஆனால் அதற்குள் தனது வாரிக்கு முக்கியத்துவம் ஏன் கொடுக்கிறார் என்பது கேள்வியாக எழுந்திருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

பியாங்யோங்: சமீபத்தில் நடந்து முடிந்த வடகொரியா ராணுவத்தின் 75வது ஆண்டு விழாவில் ஏராளமான ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இது அமெரிக்காவுக்கு நேரடியாக சவால் விடும் வகையில் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த விழாவில் அதிபர் கிம் தனது 10 வயது மகளையும் அறிமுகப்படுத்தியுள்ளார். இது வாரிசு அரசியலுக்கான அடுத்த நகர்வாக பார்க்கப்படுகிறது.

அணு ஆயுதங்களில் அதிகரிக்கும் முதலீடுகள் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், அந்நாட்டு மக்களுக்கு தற்போது வரை கூட போதுமான உணவு கிடைக்கவில்லை என்றும் அமெரிக்க பின்னணியுடன் இயங்கும் ஊடகங்கள் கூறி வருகின்றன. இந்த செய்தியை உண்மையாக்கும் வகையில் வடகொரியாவும் மூன்று மாதங்களுக்கு ஒரு புதிய அணு ஆயுதத்தை உருவாக்கி வருகிறது.

இந்நிலையில்தான் நேற்று வடகொரியா ராணுவத்தின் 75வது ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தலைநகர் பியாங்யோங்கில் ஆயுத அணிவகுப்பு பிரமாண்டமானதாக இருந்தது. குறிப்பாக Hwasong-17 பாலிஸ்டிக் ஏவுகணைகள் அமெரிக்காவுக்கு நேரடியாக சவால் விடும் வகையில் அமைந்திருந்தது. இந்த வகை ஏவுகணைகள் கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன் கொண்டவையாகும். மொத்தாக 95 அடி உயரம் கொண்ட இந்த பிரமாண்ட ஏவுகணை சுமார் 15 ஆயிரம் கி.மீ வரை உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டதாகும்.

 அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல்

அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல்

இது அமெரிக்காவின் மிட்கோர்ஸ் பாதுகாப்புக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். சாலை வழியாக கொண்டுச்செல்லப்படக்கூடிய உலகின் மிகப்பெரிய பாலிஸ்டிக் ஏவுகணை இதுதான். இதனை போர்க்கப்பல்கள் மூலமும் கொண்டு செல்ல முடியும். இது கடந்த ஆண்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக இந்த வகையிலான ஏவுகணைகளில் ஒரேயோரு ஆயுதம் மட்டுமே இருக்கும். ஆனால், இந்த Hwasong-17 பாலிஸ்டிக் ஏவுகணையில் பல ஆயுதங்கள் இருக்கும். புறப்படும் போது ஒன்றாக புறப்படும். வான் எல்லைக்கு அப்பால் சென்று அங்கிருந்து இலக்கை நோக்கி பாயும்.

 திட எரிபொருள்

திட எரிபொருள்

இதானல் ரேடாரின் கண்களில் சிக்குவதிலிருந்து தப்பித்துவிடும். அதேபோல இலக்கு நோக்கி வரும்போது இதில் உள்ள ஏராளமான ஆயுதங்கள் தனித்தனியே இலக்கை தாக்கி அழிக்கும் தன்மை கொண்டதாகும். இது முழுக்க முழுக்க திரவ எரிபொருளில் இயக்கும் ஏவுகணையாகும். ஆனால் வடகொரியா சமீப காலங்களாக திட எரிபொருளில் இயங்கும் ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது. இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் அதிபர் கிம் இந்த உலகத்திற்கு மிக முக்கியமான விஷயத்தை கூறியுள்ளார். அதாவது தனக்கு பின்னர் தனது மகள்தான் அடுத்த தலைவர் என்பதை தெரிவிக்கும் வகையில் இந்த ராணுவ அணிவகுப்பிற்கு மகளையும் உடன் அழைத்து வந்துள்ளார்.

 வாரிசு அரசியல்

வாரிசு அரசியல்

இது வாரிசு அரசியலுக்கான நகர்வாக பார்க்கப்படுகிறது. சமீப காலமாக கிம் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக சொல்லப்படுகிறது. சில சமயங்களில் கிம் தனது மனைவியுடனும், சில சமயங்களில் தனது சகோதரியுடனும் பொதுவெளியில் காட்சியளிக்கிறார். இப்படி இருக்கையில், தற்போது தனது 10 வயத மகள் 'ஜூ ஏ'வை ராணுவ அணிவகுப்புக்கு அழைத்து வந்திருக்கிறார். கிம்மின் தந்தை வடகொரியாவின் அதிபராக இருந்து போது கிம் ஜாங் உன்-ஐ மக்களிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். அவரது மறைவுக்கு பின்னர் கிம் ஜாங் உன் வடகொரிய அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

மகள்

மகள்

தற்போது கிம் தனது 10 வயது மகளை அறிமுகப்படுத்தியிருப்பது அப்பட்டமான வாரிசு அரசியல் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன. கிம்முக்கு தற்போது 39 வயதுதான் ஆகிறது. ஆனால் இதற்குள் வாரிசை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமென்ன என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. கிம் அதிகம் பருமனாக இருப்பதாலும், புகைப்பழக்கத்திற்கு அடிமையானதாலும் உடல் நலம் வேகமாக மோசமடைந்து வருவதால் கூட இவ்வாறு முன் கூட்டியே தனது மகளை அவர் அறிமுகப்படுத்தி வைத்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

 பெண்களுக்கு முக்கியத்துவம்

பெண்களுக்கு முக்கியத்துவம்

வடகொரியாவை பொறுத்தவரை, அனைத்து தலைமை பொறுப்புகளையும் ஆண்களே வகித்து வருகின்றனர் என்றாலும், சில பெண்களுக்கும் முக்கிய பொறுப்புகள் தரப்பட்டே வருகின்றன.. குறிப்பாக, வெளியுறவுத் துறை அமைச்சர் சோ சோன் ஹுய், வெளியுறவு செய்தியாளர் ரி சுன் - ஹீ ஆகியோர் இவர்களில் முக்கியமானவர்கள் ஆவர்.. அதேபோல, கிம்மின் சகோதரியான கிம் யோ-ஜாங்கும் அந்த நாட்டின் செய்தித் தொடர்பாளராக தற்போது இருக்கிறார்... இவர்கள் எல்லாருமே சமீபகாலமாக தென்கொரியாவுக்கு எதிராக செயல்பட்டதில் முக்கிய பங்கினை வகித்து வருவதை மறுக்க முடியாது.. எனவேதான், தன்னுடைய மகளையும் அரசியல் பக்கம் கொண்டு வர கிம் ஜாங் முயற்சிப்பதாக தெரிகிறது.

 வாரிசு அரசியல்

வாரிசு அரசியல்

கிம்முக்கு முன்பு அவரது தாத்தாவும், அப்பாவும் பதவியில் இருந்தனர்... இப்போது கிம் பதவியில் இருக்கிறார்.. இப்படி தொடர்ந்து ஆண் வாரிசுகள் பதவியில் இருப்பதால், மக்கள் ஒருவித வெறுப்பில் இருப்பதாலும், அதை மாற்ற வேண்டும் என்பதால், தன் மகளை அவர் இந்தப் பதவிக்குக் கொண்டுவர அவர் முயற்சிப்பதாகவும் சொல்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, இன்னொன்றையும் சொல்கிறார்கள்.. தன்னுடைய தகப்பனார் காலத்தில், பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்படாமல் இருந்த நிலையில், இந்த தவறையும் நொறுக்க முயல்கிறாராம் வடகொரியா அதிபர் கிம். அதனாலேயே 10 வயது மகளை அவர் பொது நிகழ்வுகளுக்கு அடிக்கடி அழைத்து வருவதும் அதிகமாகி உள்ளதாக கூறப்படுகிறது.. ஆக மொத்தம், ஆணோ? பெண்ணோ? இந்த "வாரிசு அரசியல்" வடகொரியாவையும் பிடித்து ஆட்டுவிக்கிறது என்பதில் சந்தேகமில்லை..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+