தாலிபான்களின் சிம்ம சொப்பனம்.. ஆப்கானில் எழுச்சி பெறும் "கொரில்லா படை".. ஏற்றப்பட்து புரட்சி கொடி!
காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய புரட்சிகர கொரில்லா படையான 'Northern Alliance' எனப்படும் வடக்கு கூட்டணி மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது. காபூலில் வடக்கு உச்சியில் மலை முகடுகளில் இருக்கும் பஞ்ச்சீர் பகுதியில் இந்த படையினர் தங்கள் கொடியை ஏற்றி உள்ளனர். தாலிபான்களுக்கு எதிராக இவர்கள் தங்கள் 'Northern Alliance' கொடியை பறக்க விட்டுள்ளனர்.
தாலிபான்களுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து இருக்கும் இந்த கொரில்லா படை குறித்து பார்க்கும் முன் ஒரு குட்டி பிளாஷ்பேக்கிற்கு விசிட் அடிக்கலாம்..
ஆப்கானிஸ்தானில் 1990களுக்கு முன் சோவியத் படைகள் கம்யூனிச ஆட்சி நடத்தி வந்தது. இந்த கம்யூனிச ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் முஜாகிதீன் என்ற குடைக்கு கீழ் ஒன்றாக சேர்ந்து போராடி வந்தது. ரஷ்யாவிற்கு, அமெரிக்காவிற்கும் இடையில் இருந்த பனிப்போர் காரணமாக இந்த முஜாகிதீன் அமைப்புகளை அமெரிக்கா ஆதரித்தது. இந்த முஜாகிதீன் அமைப்பில் இருந்து பிரிந்ததுதான் தாலிபான்.
சரி விஷயத்திற்கு வருவோம்.. அமெரிக்க படைகளும், முஜாகிதீனும் சேர்ந்து சோவியத் படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து விரட்டி அடித்தது. இதோடு எல்லாம் முடிந்தது சுபம் என்று நினைத்தால்.. முஜாகிதீன் அமைப்பில் இருந்து பிரிந்து இன்னும் சில சின்ன அமைப்புகளை சேர்த்துக்கொண்டு தாலிபான்கள் ஆப்கானில் ஆட்சியை பிடித்தது. சோவியத் சென்ற பின் தாலிபான்களின் கொடுமையான ஆட்சி 1996ல் தொடங்கியது. இப்படி தாலிபான்கள் திடீரென கொடுங்கோல் ஆட்சி நடத்தியதை முஜாகிதீன் அமைப்பில் இருந்த சில இஸ்லாமிய குழுக்களே விரும்பவில்லை. தாலிபான்களின் இந்த ஆட்சியை எதிர்த்த ஆப்கான் மக்கள்தான் தஜிக் என்ற பாரம்பரிய இஸ்லாமிய பிரிவை சேர்ந்த மக்கள்.

யார் இவர்கள்
சன்னி பிரிவு இஸ்லாமை பின்பற்றும் தஜிக் பிரிவு மக்கள் மிதவாதிகள். பாரம்பரியமாக ஆப்கானிஸ்தானில் இருக்க கூடிய பூர்வ குடிகள். மூர்கத்தனமான மக்கள் கிடையாது. பெண் முன்னேற்றம் தொடங்கி சமத்துவம் வரை அனைத்தையும் பின்பற்ற கூடியவர்கள். தாலிபான்களின் மூர்த்தனமான ஆட்சியை இவர்கள் விரும்பவில்லை. தாலிபான்களை கடுமையாக எதிர்த்த இவர்கள் பஞ்ச்சீர் பகுதியில் உருவாக்கிய அமைப்புதான் Northern Alliance இதை United Islamic Front for the Salvation of Afghanistan என்றும் அழைப்பார்கள். இவர்களின் ஒரே நோக்கம் மூர்க்கத்தனமான தாலிபான் ஆட்சியை முடிவிற்கு கொண்டு வந்து, அமைதியான ஆப்கானை நிலைநாட்டுவது. ஆப்கானுக்கு தாலிபான்களிடம் மோட்சம் வாங்கி தருவது. இவர்களின் போர் பாணி கொரில்லா ஸ்டைல் அட்டாக். இவர்கள் தீவிரவாதிகள் கிடையாது.. போராளி குழுக்கள்.

எப்படி வெற்றி
தொடக்கத்தில் இந்த குழுவில் தஜிக் இன முஸ்லீம் மட்டுமே இருந்தனர். பின்னர் தாலிபான் ஆட்சியால் விரக்தி அடைந்த பல்வேறு பூர்வகுடி இஸ்லாமியர்கள் இதில் இணைந்தனர். தாலிபானில் இருக்கும் இஸ்லாமியர்கள் பலர் பாகிஸ்தான் மக்கள் என்பதால், தாலிபானை Northern Alliance குழுவினர் சொந்த மண்ணின் மனிதர்களாக மதிப்பது இல்லை. தாலிபான்களை வீழ்த்த வேண்டும் என்ற கனவில் இவர்கள் ஒரு வகையில் வெற்றியும் பெற்றனர். ஆம் அமெரிக்க படை ட்வின் டவர் அட்டாக்கிற்கு பின் ஆப்கானிஸ்தானில் போர் நடத்தியதே.. அப்போது அமெரிக்க படைகளுடன் இணைந்து தாலிபான்களை Northern Alliance எதிர்த்தது. தாலிபான்களை வீழ்த்த Northern Allianceன் மூளை மிக முக்கிய காரணமாக இருந்தது. இதனால்தான் Northern Allianceயை சேர்ந்த அம்ருல்லா சாலேவை அமெரிக்கா வளர்த்துவிட்டு துணை அதிபராக்கியது
Recommended Video

மீண்டும் வந்துள்ளது
இந்த அமைப்பை உருவாக்கிய தலைவர்களில் ஒருவரான அஹமது ஷா மசூத் ஏற்கனவே தாலிபான் மூலம் 2001ல் கொல்லப்பட்டுவிட்டார். ஆனாலும் இந்த அமைப்பு உயிரோடுதான் இருந்தது. ஆப்கானில் தேர்தல் முறையில் ஆட்சி நடந்ததால் இந்த அமைப்பு அமைதியாக, நிம்மதியாக இருந்தது. இப்போது மீண்டும் தாலிபான் ஆட்சிக்கு வந்துள்ளதால் இதே கொரில்லா இயக்கம் மீண்டும் உயிர் பெற்றுள்ளது. ஆம் மீண்டும் தாலிபான்களை எதிர்க்கும் பணியில் இந்த கொரில்லா படையினர் களமிறங்கி உள்ளனர்.
|
கொடி
இந்த அமைப்பை தொடங்கிய அஹமது ஷா மசூத்தின் மகன் அஹமது மசூத்தான் தற்போது Northern Allianceயை வழி நடத்தி வருகிறார். நேட்டோ படைக்கு நெருக்கமான இந்த அமைப்பு, இந்தியாவிற்கு நட்பான அமைப்புதான். இவர்கள்தான் தற்போது தாலிபான்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து Northern Alliance கொடியை பஞ்ச்சீர் பகுதியில் ஏற்றியுள்ளனர். தாலிபான் ஆட்சியை எல்லாமே ஏற்க முடியாது.. எங்க பரம்பரைதான் பெஸ்ட் என்று கூறி இவர்கள் புரட்சியில் இறங்கி உள்ளனர். 2001க்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து தாலிபான் அமைப்பை இந்த படைகள் எதிர்க்க தொடங்கி உள்ளது. ஆப்கானிஸ்தானை தாலிபான்களிடம் இருந்து மீட்பதே தங்கள் நோக்கம் என்ற கொள்கையோடு இவர்கள் போராடி வருகிறார்கள்.

போராட்டம்
இவர்கள் பாரம்பரிய இனக்குழுவை சேர்ந்த பூர்வகுடி மக்கள் என்பதால் வரும் நாட்களில் இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக எழுச்சி பெற வாய்ப்புள்ளது. முக்கியமாக தாலிபான் அமைப்பிற்கு எதிராக கோபத்தில் இருக்கும் மக்கள் இவர்களோடு இணைய வாய்ப்புள்ளது. சுதந்திரத்தை ருசித்தவனிடம் இருந்து அதை பறித்துக்கொண்டால் விளைவு மோசமாக இருக்கும்.. தாலிபான் இன்றி கீழ் சுதந்திரமாக முன்னேறிய மக்கள் தற்போது தங்கள் சுதந்திரத்தை மீட்டு எடுப்பதற்காக மீண்டும் போராடும் சூழல் அங்கு ஏற்பட்டு வருகிறது. வரும் நாட்களில் மிகப்பெரிய அரசியல் மோதலாக தாலிபான் vs Northern Alliance மோதலாக இது உருவெடுக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.












Click it and Unblock the Notifications