மாஸ்க் அணியாததால் விமானத்துக்குள் கைகலப்பு...பயணிகள் அதிர்ச்சி!!
ஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்தில் இருக்கும் ஆம்ஸ்டர்டாமில் கேஎல்எம் விமானத்தில் இருவர் மாஸ்க் அணியாததால் விமானத்துக்குள் பெரிய அளவில் கைகலப்பு ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் மாறி மாறி அடித்துக் கொண்டதால் விமானத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
வெளியாகி இருக்கும் வீடியோவில் இருவர் அடித்துக் கொள்கின்றனர். அப்போது ஒருவர் எழுந்து அவ்வாறு செய்ய வேண்டாம், நிறுத்துங்கள். விமானத்துக்குள் குழந்தைகள் இருக்கின்றனர் என்று கூறுகிறார். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி இருக்கிறது. சட்டை அணியாத ஒருவர் பார்ப்பதற்கு குத்துச் சண்டை வீரர் போல் இருக்கிறார். இவருக்கும் மற்றொருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்படுகிறது. அப்போது அவரை அடித்து கீழே தள்ளுகிறார் மற்றொருவர். சட்டை அணியாமல் இருப்பவர் கீழே விழுகிறார்.

கைகலப்பில் ஈடுபட்ட இருவரில் ஒருவர் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர் என்றும் அவர் ஆல்கஹால் குடித்து இருந்தார் என்றும் கூறப்படுகிறது. பிரிட்டனைச் சேர்ந்தவர் தனது நண்பர்களுடன் இபிசா தீவுக்கு செல்வதற்காக சென்றுள்ளார். இவர்கள் மாஸ்க் அணிய மறுத்ததால், விமானத்தில் இருக்கும் மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதை ஏற்காத காரணத்தினால் கைகலப்பு, மோதல் ஏற்பட்டடுள்ளது.
கேஎல்எம் விமானத்தில் மாஸ்க் அணிய வேண்டும் என்பது கட்டாயம். இந்த நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டு இருந்த அறிக்கையில், மாஸ்க் அணியாவிட்டால் விமானத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவித்து இருந்தது.
View this post on InstagramA post shared by The Mic High Club (@michighclub) on
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications