Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

87% விவசாயம் அழியும்! உணவுக்கே திண்டாடும் சூழல் ஏற்படும்! அணு குண்டுகள் ஆபத்து.. புதிய ஆய்வு முடிவுகள்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அணு ஆயுத போர் ஏற்படும்போது அது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், கதிர்வீச்சு ஆபத்தைத் தாண்டி உலகெங்கும் கூட அணு ஆயுதங்கள் பேரழிவை ஏற்படுத்தும் என்பது புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அணு ஆயுதங்களால் உணவு உற்பத்தி முடங்கும் என்றும் இதனால் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

அணு ஆயுதப் போர் ஏற்பட்டால் அது எந்தளவுக்கு மோசமான ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தொடர்பாக ஆய்வாளர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள். அணு ஆயுதம் பயன்படுத்தும்போது அதன் ஆற்றல் அபரிமிதமாக இருக்கும். இதனால் சில கிமீ வரை இருக்கும் எல்லாப் பொருட்களும் அழிந்து போகும். அதேபோல அணு ஆயுதங்களால் கதிரியக்கப் பாதிப்புகளும் ஏற்படும். இது பல கிமீ தொலைவு வரை அனைவரையும் பாதிக்கும்.

Nuclear War Could Starve Billions Study Reveals Catastrophic Impact on Global Food Supply

அணு ஆயுதங்கள்

ஜப்பானில் அணு ஆயுதம் பயன்படுத்தப்பட்டபோது எந்தளவுக்கு மோசமான விளைவுகள் ஏற்பட்டது என்பதை நாம் பார்த்துள்ளோம்.. இதற்கிடையே புதிதாக நடத்தப்பட்ட ஆய்வில் இந்த இரு பாதிப்புகளையும் தாண்டி வேறு சில மோசமான விளைவுகளும் ஏற்படும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அதாவது அணு ஆயுத போர் ஏற்படும்போது அது சர்வதேச உணவு விநியோகத்தில் பேரழிவை ஏற்படுத்தும் என்பது பென்சில்வேனியா மாகாண பல்கலைக்கழக ஆய்வாளர்களின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த பாதிப்பு அணு ஆயுதப் போர் நடக்கும் இடத்தில் மட்டுமின்றி உலகளவில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. "அணுசக்தி குளிர் காலம்" (nuclear winter) குறித்து இதில் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அதில் அணு குண்டுகளால் வளிமண்டலத்தில் பரவும் புகை மற்றும் தூசியால் சூரிய ஒளியே மறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரிய ஒளி மறைவதால் பல ஆண்டுகளுக்குப் பயிர் உற்பத்தி பாதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.

ஆய்வாளர்கள் சொல்வது என்ன

உலகிலேயே அதிக அளவில் பயிரிடப்படும் தானியமான சோளத்தை மையமாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அணு ஆயுதப் போர் விவசாயத்தை எந்தளவுக்குப் பாதிக்கும் என்பதை விளக்கியுள்ளனர். அணு ஆயுதப் போரினால் உணவு உற்பத்தியில் ஏற்படும் நீண்டகால விளைவுகளையும், உலக மக்கள் தொகைக்கு ஏற்படும் கடுமையான அச்சுறுத்தலையும் இந்த ஆய்வு முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன.

87% குறையும்

இது தொடர்பாக பென்சில்வேனியா பல்கலைக்கழகத் தாவர விஞ்ஞானி யூனிங் ஷி கூறுகையில், "அணு ஆயுதப் போர் ஏற்பட்டால் என்ன நடக்கும் என்பதை ஆய்வு செய்தோம். ஆறு வெவ்வேறு அணு ஆயுத சூழல்களை வைத்து ஆராய்ச்சி நடத்தினோம். 38,572 இடங்களில் சோள உற்பத்தி குறித்து நாங்கள் ஆய்வு செய்தோம். இதில் நாங்கள் கண்டறிந்துள்ள விஷயங்கள் அணு ஆயுதங்கள் எந்தளவுக்கு மோசம் என்பதை விளக்குகிறது" என்றார்.

அணு ஆயுத போர் ஏற்படும்போது அது விவசாயத்தை நேரடியாகப் பாதிக்குமாம்.. உலகப் போர் நடந்தால், ஆறு முதல் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இதன் பாதிப்பு உச்சத்தை அடையும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இதன் காரணமாக சோள உற்பத்தி அதிகபட்சமாக 87% பாதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன சிக்கல்?

புவி வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் உள்ள ஓசோன் படலம் தான் சூரியனில் இருந்து வரும் பெரும்பாலான புற ஊதா கதிர்வீச்சை உறிஞ்சுகிறது. அதன் பிறகே சூரிய ஒளி பூமியை அடைகிறது. இதனால் ஆபத்தில்லாமல் இருக்கிறோம். ஆனால், அணு ஆயுதப் போர் ஓசோன் மண்டலத்தை முடக்கிவிடும். அணு ஆயுத வெடிப்பின் போது ஏற்படும் வளிமண்டலத்தில் நைட்ரஜன் ஆக்சைடுகளை உருவாக்குகின்றன

நைட்ரஜன் ஆக்சைடுகளின் இருப்பு மற்றும் புகையினால் ஏற்படும் வெப்பம் ஓசோனை விரைவாக அழித்துவிடும். இதனால் பூமியின் மேற்பரப்பில் புற ஊதா கதிர்வீச்சு அதிகரிக்கும். இது தாவரத் திசுக்களைச் சேதப்படுத்தி, உலக உணவு உற்பத்தியை மேலும் குறைக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+