அமெரிக்காவிலிருந்து சிறப்பு விமானத்தில் இந்தியா புறப்பட்டார் ஒபாமா! நாளை காலை டெல்லி வருகை!!
வாஷிங்டன்: குடியரசு தினவிழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நாளை காலை இந்தியா வருகிறார். இதையொட்டி ஆன்ட்யூஸ் விமான படை தளத்தில் இருந்து சிறப்பு விமானத்தில் இன்று மாலை ஒபாமா புறப்பட்டார்.
குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக, அமெரிக்க அதிபர் ஒபாமா நாளை இந்தியா வரவுள்ளார். 3 நாட்கள் இந்தியாவில் இருக்கும் அவர், பிரதமருடன் பேச்சுவார்த்தை, தொழிலதிபர்களுடன் சந்திப்பு, குடியரசு தின விழாவில் பங்கேற்பு என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

இதையொட்டி இன்று இந்திய நேரப்படி மாலை 5.15 மணிக்கு வாஷிங்டன்னிலுள்ள ஆன்ட்யூஸ் விமானப்படை தளத்தில் இருந்து சிறப்பு விமானத்தில் ஒபாமா கிளம்பினார். அவருடன் மனைவி மிச்சேல், உயர் அதிகாரிகள், எம்.பிக்கள் குழுவும் இந்தியா பயணிக்கிறது.
Andrews Air Base : President Barack Obama & Michelle Obama leave for India #ObamaInIndia pic.twitter.com/H2HYri9zIT
— ANI (@ANI_news) January 24, 2015 இந்தியா வரும் வழியில், ஜெர்மனியில், விமானம் நிறுத்தப்பட்டு, எரிபொருள் நிரப்பப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து பயணத்தை மேற்கொள்ள உள்ள விமானம், டெல்லி பாலம் சர்வதேச விமான நிலையத்திற்கு நாளை காலை 10 மணியளவில் வந்தடையும். ஒபாமா வருகையையொட்டி தலைநகர் டெல்லியில் பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications