2050ல் கடலில் தூண்டில் போட்டால் மீன் கிடைக்காது- “பிளாஸ்டிக்” தான் கிடைக்குமாம்!
வாஷிங்டன்: உலகில் வருகின்ற 2050 ஆம் ஆண்டில் கடலில் மீன்களே இருக்காத அளவிற்கு பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதாக உலக பொருளாதார அமைப்பு அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
அதுகுறித்த அறிக்கையில், "உலகம் முழுவதும் ஒரு ஆண்டுக்கு குறைந்தது 8 மில்லியன் டன்கள் அளவுக்கு பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் கொட்டப்பட்டு வருகின்றன.
இது ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு லாரி குப்பையை கொட்டுவதற்கு சமமானதாக இந்த பிளாஸ்டிக் குப்பைகள் விளங்குகின்றன.

2050ல் இருமடங்கு:
இதற்கு உடனடியாக தீர்வு காணப்படாவிட்டால் 2030 ஆம் ஆண்டுக்குள் இருமடங்காகும் நிலை ஏற்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் மட்டுமே:
இதுவே 2050 ஆம் ஆண்டுக்குள் 4 மடங்காக அதிகரித்து விடும். இதன் எதிரொலியாக, கடலில் மீன்களை விட பிளாஸ்டிக் குப்பைகளே அதிகம் இருக்கும் அபாயமான நிலை உருவாகும்.

20 மடங்காக அதிகரிப்பு:
தற்போது, கடலில் 150 மில்லியன் டன்களுக்கும் அதிகமாக பிளாஸ்டிக் குப்பைகள் உள்ளன. கடந்த 50 ஆண்டுகளில் பிளாஸ்டிக் பயன்பாடு 20 மடங்காக அதிகரித்துள்ளது.

ஒருமுறை உபயோகம்:
அடுத்த 20 ஆண்டுகளில் இது மேலும் இரட்டிப்பாகும் அபாயமும் உள்ளது. பெரும்பாலான பிளாஸ்டிக் பேக்கேஜிங் பொருட்கள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடியதாக இருக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications