அடேங்கப்பா.. மூன்றே நாளில் இரட்டிப்பாக பரவுகிறதாம் ஓமிக்ரான் வைரஸ்! அலர்ட் கொடுக்கும் "ஹு"
ஜெனிவா: உலகம் முழுவதையும் கொரோனா தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலையியல் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் ஓமிக்ரான் உலக நாடுகளிடையே வேகமாக பரவி வருகிறது.
முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்ட மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் டெல்டாவை வைரஸை விட இது வீரியம்மிக்கது என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவையும் ஓமிக்ரான் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் 110-க்கும் மேற்பட்ட ஓமிக்ரான் பாதிப்புகள் பதிவாகி உள்ளன. மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், கேரளா, தமிழ்நாடு என பல மாநிலங்களை ஓமிக்ரான் வைரஸ் தனது பிடியில் வைத்துள்ளது.
இந்த நிலையில் மக்கள்தொகை நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள நாடுகளில் ஓமிக்ரான் வேகமாக பரவி வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. ஆனால் இது வைரஸின் நோய் எதிர்ப்பு சக்தியைத் தவிர்க்கும் திறன், அதன் உள்ளார்ந்த அதிகரித்த பரவுதல் அல்லது இரண்டின் கலவையா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று தெரிந்துள்ளது.
மேலும், ஓமிக்ரான் கொரோனா வைரஸ் மாறுபாடு 89 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. சமூக பரவல் உள்ள பகுதிகளில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 1.5 முதல் 3 நாட்களில் இரட்டிப்பாகிறது என்று உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சியை கூட்டியுள்ளது. ஓமிக்ரான் வைரஸ் மிகவும் ஆபத்தானது என்று உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications