ஓமிக்ரான்: பாதிப்பு குறைவுதான்... ஐரோப்பிய மருந்துகள் முகமை ஆறுதல்
ஐரோப்பா : உருமாறிய கொரோனாவான ஓமிக்ரானால் பாதிப்புகள் குறைவுதான் என ஐரோப்பிய மருந்துகள் முகமை ஆறுதல் அளித்துள்ளது.
உருமாறிய கொரோனா வைரஸின் மாறுபாடு கடுமையான நோய் பாதிப்பை ஏற்படுத்துமா என்பது தெரிந்து கொள்ள இன்னும் சில காலங்கள் தேவைப்படும் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனாவுக்கு எதிரான 3வது தடுப்பூசி மார்ச் 2022ல் அறிமுகம் ஆகும் தெரிவித்துள்ள ஈ.எம்.ஏ, கோவிட்டுக்கு எதிராக மாத்திரைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

உருமாறிய கொரோனா
தென்ஆப்பிரிக்காவில் நவம்பர் 25ம் தேதி கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா உலக அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இது மிகவும் கொடூரமான தொற்று நோயாக இருக்கலாம் எனவும் அதனால் பாதிப்புகள் இருக்கும் எனவும் அச்சம் ஏற்பட்டது. மேலும் தற்போதைய தடுப்பூசிகளுக்கு புதிய ஓமிக்ரான் வைரசை கட்டுப்படுத்தாது எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் ஐரோப்பிய மருந்துகளின் முகமை வியாழக்கிழமை ஓமிக்ரான் குறித்து ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில், முதல் 3 அலைகளை விட இந்த ஓமிக்ரானால் ஏற்படும் பாதிப்புகள் பெரும்பாலும் சாதாரணமாக இருப்பதாகத்தான் தோன்றுகிறது என தெரிவித்துள்ளது. அதே சமயம் ஆனால் இந்த உருமாறிய கொரோனா வைரஸின் மாறுபாடு கடுமையான நோய் பாதிப்பை ஏற்படுத்துமா என்பது தெரிந்து கொள்ள இன்னும் ஆராய்ந்து வருவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

விரைவில் 3வது டோஸ்
மேலும் நோயின் தீவிரத்தன்மையின் உருமாற்றம் இதுவரை பரவி வரும் அனைத்து வகைகளிலிருந்தும் வேறுபட்டதா என்பதை கண்டறிய மேலும் ஆதாரங்கள் தேவைப்படுவதாக ஐரோப்பிய மருந்துகளின் முகமையின் தலைவர் மார்கோ கேவலேரி தெரிவித்துள்ளார். இந்த வார தொடக்கத்தில் உலக சுகாதார நிறுவனம் ஆரம்ப அறிகுறிகள் ஓமிக்ரான் வைரஸ் தொற்றுநோயாக இருக்கலாம் என்று தெரிவித்திருந்தது. அதே சமயம் பைசர், பயோடெக் தடுப்பூசி தயாரிப்பாளர்கள், தங்களது கோவிட் மூன்றாவது டோஸ் தடுப்பூசிகள் உருமாறிய கொரோனாவுக்கு எதிராக போராடும் தன்மை கொண்டது என்றும், இது மார்ச் 2022 இல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் தெரிவித்துள்ளனர்.

வைரசுக்கு எதிராக செயல்படும்
ஓமிக்ரானுக்கு எதிராக தடுப்பூசிகள் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டன என்பது குறித்து விரைவில் தெரிவிப்பதாக கூறிய காவலேரி "தற்போது அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் உருமாறிய வைரசுக்கு எதிராக செயல்படுகிறதா என்று கூற தற்போது போதுமான தகவல்கள் இல்லை என தெரிவித்தார். ஆனாலும் இது தொடர்பான ஆதாரங்களை சேகரிக்க நாங்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம் என தெரிவித்தார். v

மெர்க் நிறுவனத்துக்கும் அனுமதி
ஐரோப்பிய மருந்துகள் முகமை இதுவரை நான்கு நிறுவனங்களின் கோவிட் தடுப்பூசிகளை அங்கீகரித்துள்ளது. அதாவது பைசர், பயோடெக், மாடர்னா, ஜான்சன் & ஜான்சன் மற்றும் ஆஸ்ட்ராஜெனிகா ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் மெர்க் நிறுவனத்தின் கோவிட்டுக்கு எதிரான மாத்திரைக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த மாத்திரைகளுக்கு மருத்துவமனை செல்ல வேண்டிய அவசியம்இல்லை. வீட்டில் இருந்தே எடுத்துக் கொள்ளலாம்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications