டோன்ட் வொரி.. ஓமிக்ரான் வைரஸ் தாக்கம் லேசானவை.. தென் ஆப்பிரிக்க நிபுணர்கள் சொல்றதை பாருங்க!
ஜோகன்னஸ்பர்க்: உலகம் முழுவதையும் கொரோனா தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலையில் தென்னாப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய ஓமிக்ரான் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஓமிக்ரான் வைரஸ் தனது பிறப்பிடமான தென் ஆப்பிரிக்காவை போட்டு பாடாய்படுத்தி வருகிறது. நவம்பர் 29 முதல் டிசம்பர் 5 வரை மட்டும் அந்த நாட்டில் ஓமிக்ரான் காரணமாக கொரோனா பாதிப்புகள் முந்தைய வாரத்தை விட 111% அதிகரித்துள்ளது.

ஓமிக்ரான் வைரஸ்
கொரோனா பாசிட்டிவ் விகிதமும் கடந்த வாரத்தின் தொடக்கத்தில் 22.4% ஐ எட்டியது. இது நவம்பர் முதல் வாரத்தில் 1.2% ஆகத்தான் இருந்தது. எனவே இந்த உருமாறிய ஓமிக்ரான் வைரஸ் மிகவும் ஆபத்தானது என்று தகவல்கள் கூறுகின்றன. முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்ட மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் டெல்டாவை வைரஸை விட இது வீரியம்மிக்கது என்றும் தகவல்கள் வலம் வருகின்றன.

ஆறுதல் செய்தி
இந்த நிலையில் முதல் மூன்று அலைகளை விட ஓமிக்ரான் வைரஸ் குறைவான பாதிப்பையே ஏற்படுத்துகிறது என்று தென்னாப்பிரிக்கா மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய தனியார் ஹெல்த்கேர் நிறுவனமான நெட்கேர் லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி ரிச்சர்ட் வெளியிட்ட அறிக்கையில், 'முதல் மூன்று அலைகளின் போது நாம் அனுபவித்த கொடுமையை விட ஓமிக்ரான் வைரஸ் மிகவும் லேசானவைதான்.

ஆக்ஸிஜன் சிகிச்சை தேவையில்லை
நெட்கேர் மருத்துவமனைகளில் ஓமிக்ரான் வைரஸ் பாசிடிவ் விகிதம் அதிகமாகி பலர் சிகிச்சையில் இருந்தாலும் மருத்துவமனைகளில் உள்ள 90% கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சிகிச்சை தேவையில்லை. அவர்கள் மிகவும் சாதரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பயப்படும்படியாக ஏதும் இல்லை' என்று ரிச்சர்ட் கூறியுளளார்.
Recommended Video

ஆபத்தில்லாத நிலை
இதேபோல் குரூப் ஹோல்டிங்ஸ் லிமிடெட் மருத்துவமனை அறிக்கையின்படி, ' 321 பேர் கொரோனா, ஓமிக்ரானுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் 20% பேர் அதன் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். சுமார் 30% பேர் 30 வயதுக்கு குறைவானவர்கள். இவர்களில் பெரும்பாலானர்கள் ஆபத்தில்லாத நிலையில் உள்ளதால் விரைவில் சிகிச்சையில் இருந்து மீண்டு விடுவார்கள்' என்று கூறப்பட்டுள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications