ஒசாமா உயிருடன் தான் இருக்கிறார்: மீண்டும் மீண்டும் கூறும் ஸ்னோடென்

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் உயிருடன் இருப்பதாக முன்னாள் சிஐஏ ஊழியர் எட்வர்ட் ஸ்னோடென் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் உளவு ரகசியங்களை உலகிற்கு தெரிவித்தவர் முன்னாள் சிஐஏ ஊழியரான எட்வர்ட் ஸ்னோடென். அமெரிக்கா பல்வேறு நாடுகளின் தூதரங்களில் உளவு பார்த்த விவகாரத்தை அம்பலப்படுத்தினார். இதனால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அவர் தப்பியோடி ரஷ்யாவில் தஞ்சம் அடைந்தார்.

இந்நிலையில் அவர் மாஸ்கோ ட்ரிப்யூன் செய்தித்தாளுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது,

ஒசாமா

ஒசாமா

உலக மக்கள் நினைப்பது போன்று அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் கொல்லப்படவில்லை. அவர் உயிருடன் தான் உள்ளார்.

பஹாமாஸ்

பஹாமாஸ்

ஒசாமா, தனது குடும்பத்தாருடன் பஹாமாஸில் படாடோபமாக வாழ்ந்து வருகிறார். அவருக்கு சிஐஏ பணம் அளித்து வருகிறது. ஒசாமா உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.

வில்லா

வில்லா

ஒசாமா தற்போது எங்கு வசிக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் 2013ம் ஆண்டில் அவர் தனது 5 மனைவிகள் மற்றும் குழந்தைகளுடன் வில்லா ஒன்றில் வசித்து வந்தார் என்றார் ஸ்னோடென்.

அமெரிக்கா

அமெரிக்கா

ஒசாமா கொல்லப்பட்டுவிட்டதாக அமெரிக்கா அறிவித்ததுடன் அவரது உடலை கடலில் அடக்கம் செய்துவிட்டதாகவும் கூறியது. ஒசாமாவின் உடலை யாரும் பார்க்கவில்லை. அவரது உடலில் குண்டு பாய்ந்து கிடந்ததாக வெளியான புகைப்படமும் போலி என்று தெரிய வந்தது. இந்நிலையில் தான் ஸ்னோடென் ஒசாமா உயிருடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

உண்மையா?

உண்மையா?

ஒசாமா உயிருடன் இருப்பதாக ஸ்னேடென் கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து தெரிவித்து வருகிறார். இருப்பினும் அவர் கூறுவது உண்மையா என்பது இதுவரை கண்டறியாமல் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+