For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முன்னாள் பாக். பிரதமர் நவாஸ் ஷெரீப்பை வளர்த்துவிட்ட ஒசாமா..காஷ்மீரிலும் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு அல் கெய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் நிதியுதவி அளித்தது உண்மைதான் என்று அந்நாட்டின் முன்னாள் அமெரிக்க அபிடா உசேன் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப். பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவராக இருக்கும் நவாஸ் ஷெரீப், ஊழல் குற்றச்சாட்டிற்காகக் கடந்த 2017ஆம் ஆண்டு பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

Osama bin Laden supported, funded Nawaz Sharif says Ex-Pak envoy Abida Hussain

இந்நிலையில், அல் கெய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் நவாஸ் ஷெரீப்பிற்கு நிதியுதவி அளித்தார் என்ற அதிர்ச்சி தகவல் பாகிஸ்தான் நாட்டிற்கான முன்னாள் அமெரிக்க தூதர் அபிடா உசேன் தெரிவித்துள்ளார். "ஒசாமா பின்லேடன் ஒரு காலத்தில் நவாஸ் ஷெரீப்பிற்கு ஆதரவாக இருந்தார். அவருக்கு நிதியுதவி கூட அளித்தார்.

ஆனால், அப்போது இருந்த நிலைமையே வேறு. அப்போது அமெரிக்கா உள்ளிட்ட அனைவராலும் விரும்பப்படும், மக்கள் செல்வாக்கு உள்ள ஒரு தலைவராக ஒசாமா பின்லேடன் இருந்தார். அதன் பின்னர் நிலைமை மாறியது. உலகிலேயே மோசமான பயங்கரவாதியாக ஒசாமா மாறினார்" என்றார்.

வாங்க விவசாயிகள் பலத்தை காட்டுவோம்...அழைப்பு விடுக்கும் பஞ்சாப் முதல்வர்வாங்க விவசாயிகள் பலத்தை காட்டுவோம்...அழைப்பு விடுக்கும் பஞ்சாப் முதல்வர்

முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்தான் பெனாசிர் பூட்டோ அரசை கவிழ்க்க நவாஸ் ஷெரீப் 10 மில்லியன் டாலர் பெற்றதாக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியிருந்தது. ஒசாமா பின்லேடனிடம இருந்து பெறும் நிதியைக் கொண்டு நவாஸ் ஷெரீப் காஷ்மீரில் ஜிகாதி அமைப்புகளை வளர்க்க முயன்றார் என்றும் குற்றச்சாட்டும் அவர் மீது பல ஆண்டுகளாக உள்ளது.

70 வயதாகும் நவாஸ் ஷெரீப் தற்போது லண்டனில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் 1990-93, 1997-98 மற்றும் 2013-17 வரை பாகிஸ்தான் பிரதமராக இருந்தார். என்னதான் ஒசாமா பின்லேடனிடம் இருந்து நிதியுதவி பெற்றாலும் பிரதமர் ஆனதும், ஒசாமாவுக்கு எதிராகவும் நவாஸ் ஷெரீப் செயல்பட தொடங்கியதாகவும் அமெரிக்க தூதர் தெரிவித்தார்

English summary
Al Qaeda terrorist Osama bin Laden had supported and extended financial assistance to former Pakistan Prime Minister Nawaz Sharif, claimed the country's former envoy to the US, Abida Hussain.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X