Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவுக்கு எதிராக போர் அறிவிப்பு.. பாகிஸ்தானின் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பு வீடியோ

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: இந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது. இருநாடுகள் இடையே மோதல் அதிகரித்து போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தான் இந்தியாவுக்கு எதிராக போரை அறிவித்துள்ளது பாகிஸ்தான் ஆதரவு ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பு. இதுதொடர்பாக அந்த அமைப்பின் டாப் தலைவர் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பு என்றால் என்ன? இந்தியாவில் எப்படி தாக்குதல் நடத்தி உள்ளது? என்பது பற்றிய முழுவிபரம் வருமாறு:

இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று 2வது நாளாக எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் பாகிஸ்தான் ராணுவம் நம் நாட்டு வீரர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு பதிலடியாக நம் ராணுவமும் துப்பாக்கிச்சூடு நடத்தியது.

pahalgam-attack-pakistan-support-terror-organization-hizbul-mujahideen-declares-war-against-india

இதனால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் என்று 2 நாடுகளும் எல்லையில் ஆயுதங்கள் மற்றும் வீரர்களை குவித்து வருகிறது. இதனால் அங்கு எப்போது வேண்டுமானாலும் பெரிய மோதல் ஏற்படலாம். இந்த மோதல் எல்லை மீறும்போது போராக கூட வெடிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 சுற்றுலா பயணிகளை கொன்றது தான் இந்த பதற்றத்துக்கு முக்கிய காரணம். இதற்கு நிச்சயம் நம் நாடு பதிலடி கொடுக்கும் என்று தெரிவித்துள்ளது. இதனால் பீதியில் பாகிஸ்தான் தனது எல்லையில் வீரர்களையும், போர் ஆயுதங்களையும் குவிக்கிறது.

மேலும் முதற்கட்டமாக இந்தியா பாகிஸ்தானியர்களை வெளியேற்றி வருகிறது. சிந்து நதிநீர் பங்கீடு தொடர்பான ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது. பாகிஸ்தானியர்களுக்கான சார்க் விசா திட்டத்தை ரத்து செய்துள்ளது. பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளது. இதையடுத்து விரைவில் பாகிஸ்தானுக்கு நம் நாடு பதிலடி கொடுக்க உள்ளது.

இந்நிலையில் தான் பாகிஸ்தான் ஆதரவில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல் முஜாகிதீன் என்ற பயங்கரவாத அமைப்பு இந்தியாவுக்கு எதிராக போரை அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் டாப் தலைவராக உள்ள ஷம்ஷீர் கான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது:

‛‛ஜம்மு காஷ்மீரில் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்தை' தொடங்க தயாராக உள்ளோம். பயங்கரவாத அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட உள்ளோம். அல்லாவின் ஆதரவில் இது நிகழ்த்தி காட்டப்படும். காஷ்மீர் ஜிகாத் போராட்டம் நடக்கும். இதில் வெற்றியும் பெறுவோம்'' என்று கூறியுள்ளார். இதன்மூலம் ஹிஸ்புல் முஜாகிதீன் என்ற அமைப்பு இந்தியாவுக்கு எதிராக போரை அறிவித்துள்ளது.

தற்போது வீடியோ மூலம் மிரட்டல் விடுத்துள்ள ஷம்ஷீர் கான் இந்தியாவை சேர்ந்தவர். இவர் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தை சேர்ந்தவர். 1990 காலக்கட்டத்தில் பயங்கரவாத அமைப்பில் சேர பாகிஸ்தானுக்கு சென்றார். ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பில் இப்போது செயல்பட்டு வருகிறார். இந்த ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் தலைவராக சையத் சலாவுதீன் தலைமை வகித்து வருிகறார். இருப்பினும் கூட காஷ்மீர் விவகாரம் என்பதால் ஷம்ஷீர் கான் வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்த ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் பிரதான நோக்கம் என்பது காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரித்து பாகிஸ்தானுடன் இணைப்பது தான். கடந்த 1989ம் ஆண்டில் இந்த அமைப்பு உருவானது. காஷ்மீரை மையப்படுத்தி தான் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. காஷ்மீரில் இருந்து பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்த்துள்ளது. மேலும் காஷ்மீரில் பல இடங்களில் தாக்குதலை நடத்தி உள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல் 17 ம் தேதி காஷ்மீரில் பீர்வா பகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் கையெறி குண்டுகள் வீசப்பட்டது. 17 பேர் காயமடைந்தனர்.

அதன்பிறகு தெற்கு காஷ்மீரில் கையெறி குண்டுகள் வீசப்பட்டது. இதில் 24 பேர் காயமடைந்தனர். அதன்பிறகு 2015 மே மாதம் குப்வாரா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பாதுகாப்பு படையினர் பலியாகினர். அதன்பிறகு 2017 மே 1ம் தேதி வங்கிக்கு பணம் எடுத்து செல்லப்பட்ட வாகனத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 போலீஸ்காரர்கள் உள்பட 7 பேர் வரை பலியாகினர். இப்படி காஷ்மீரில் பல தாக்குதல்களை இந்த அமைப்பு நடத்திய நிலையில் தான் தற்போது இந்தியாவுக்கு எதிராக ஆயுத போராட்டம் என்ற பெயரில் போரை அறிவித்துள்ளது.

மேலும் ஹிஸ்புல் முஜாகிதீன் வீடியோ வெளியிட்டதன் பின்னணியில் பாகிஸ்தான் உளவுத்துறை உள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாகவே மோதல் என்று வந்துவிட்டால் பாகிஸ்தான் நம்மை கண்டு அஞ்சும். இதனை சமாளிக்க அவர்கள் பயங்கரவாதிகளை களமிறக்குவது உண்டு. இதற்கு முன்பு கார்கில் போரில் கூட பாகிஸ்தான் பயங்கரவாதிகளை வைத்து நம்மை சீண்டியது. ஆனாலும் நம் வீரர்கள் அனைவரையும் கொன்று குவித்து வாகை சூடினர். அதன்படியே இப்போது பாகிஸ்தான் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பை வைத்து மிரட்ட தொடங்கி உள்ளது என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+