For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சயின்ஸ் படிச்சா செக்ஸ் ஆசை வருமாம்... சொல்கிறது பாக். அரசு!

Google Oneindia Tamil News

Pakistan Logo
லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசு, ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடம் நடத்த தடை விதித்துள்ளது.

இந்த புத்தகத்தைப் படிப்பதால் மாணவர்களின் செக்ஸ் ஆசை தூண்டப்படும் என்பதால் இந்த தடை உத்தரவு என்று அது கூறியுள்ளது.

லூகாரைச் சேர்ந்த கிராமர் பள்ளி என்ற தனியார் பள்ளியில் அறிவியல் பாடம் நடத்துவதற்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. பெற்றோர்களிடமிருந்து இதுதொடர்பாக புகார் வந்ததால் தடை உத்தரவு. இதேபோல பல்வேறு தனியார் பள்ளிகளிலும் அறிவியல் பாடம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாம்.

இதுகுறித்து மாகாண கல்வி அமைச்சர் ராணா மசூச் அகமது கூறுகையில், பெற்றோர்களிடமிருந்து புகார்கள் வந்ததால் தடை விதித்துள்ளோம். செக்ஸ் ஆசையைத் தூண்டும் வகையில் இந்தப் பள்ளிகளின் அறிவியல் பாடம் உள்ளதால் தடை விதிக்கப்படுகிறது. இதை ஏற்க முடியாது என்றார் அவர்.

மேலும் இந்த அறிவியல் பாடம் தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளதாம் இந்த மாகாண அரசு.

English summary
The government of Pakistan's Punjab province has banned a science book for Grade VI students of a chain of elite schools for containing material that could provoke "sexual desire". The textbook used by the Lahore Grammar School was banned after authorities received complaints from parents.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X