For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லண்டனின் முதல் முஸ்லீம் மேயர்... பாகிஸ்தான் பஸ் டிரைவர் மகன்!

By Siva
Google Oneindia Tamil News

லண்டன்: லண்டன் மாநகரின் முதல் முஸ்லீம் மேயராக பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த சாதிக் கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து தலைநகர் லண்டன் மாநகர மேயர் தேர்தல் கடந்த 5ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பில் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த சாதிக் கான்(44) என்பவரும், கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் சேக் கோல்ட்ஸ்மித் என்பவரும் போட்டியிட்டனர்.

Pak. bus driver's son is London's first muslim mayor

இந்த தேர்தலில் 46 சதவீத வாக்குகள் பெற்று சாதிக் கான் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் லண்டன் மாநகரின் முதல் முஸ்லீம் மேயராகியுள்ளார் சாதிக் கான். சாதிக் சிறுவனாக இருக்கையிலேயே அவரது குடும்பம் பாகிஸ்தானில் இருந்து இங்கிலாந்துக்கு வந்துவிட்டது.

இங்கிலாந்தில் படித்து வளர்ந்த சாதிக் கானின் தந்தை ஒரு பேருந்து ஓட்டுநர். சாதிக் மனித உரிமை வழக்கறிஞராக உள்ளார். மேலும் கிழக்கு லண்டனில் உள்ள டூடிங் பகுதியின் எம்.பி.யும் ஆவார்.

முன்னதாக கோல்ட்ஸ்மித் பிரச்சாரத்தின்போது ஒரு முஸ்லீமுக்கு வாக்களித்து அவரை மேயராக்கக் கூடாது என்று மக்களிடம் தெரிவித்தார். ஆனால் அவர் பேச்சை மக்கள் கேட்கவில்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

லண்டன் நகரில் வசிக்கும் 80 லட்சம் பேரில் 30 லட்சம் பேர் சிறுபான்மை சமூகத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sadiq Khan(44), a Pakistani bus driver's son has become the first mulsim mayor of London.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X