பாக்-இல் பரபரப்பு! தோல்வியில் முடிந்த கடத்தல் முயற்சி.. இந்து பெண் படுகொலை! காரணம் கட்டாய மதமாற்றம்?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் 18 வயதான இந்து பெண் ஒருவர் கடத்தல் முயற்சியில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் 18 வயதான இந்து பெண் ஒருவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கடத்த முயன்று உள்ளனர்.
அச்சிறுமி அவர்களிடம் இருந்து தப்பி முயன்றுள்ளார். அப்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அச்சிறுமி கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாக உள்ளது.

பாகிஸ்தான்
பாகிஸ்தான் நாட்டில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சிறுமி பூஜா ஓட் என அடையாளம் காணப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் ரோஹி பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அப்பெண்ணைக் கட்டாயப்படுத்தி மதம் மாற்றம் செய்யவே இதுபோன்ற கடத்தல் சம்பவம் நடந்துள்ளது. இது பாக் நாட்டில் எதோ ஒரு பகுதியில் நடைபெற்ற தனித்த சம்பவம் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் இதேபோல நூற்றுக்கணக்கான கிறிஸ்தவ மற்றும் இந்து சிறுமிகள் இஸ்லாம் மதத்திற்கு மாறுவதற்குக் கட்டாயப்படுத்தி மதம் மாற்றம் செய்யப்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

சிறுபான்மை சமூகம்
சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்படுகின்றனர். பாகிஸ்தான் நாட்டின் சிறுபான்மை சமூகங்கள் கட்டாயத் திருமணம் மற்றும் மதமாற்றம் போன்ற பிரச்சினைகளை நீண்ட காலமாக எதிர்கொண்டு வருவதாகவும் மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர், அதேபோல இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிராக அதிகரித்து வரும் குற்றங்கள் குறித்து பாகிஸ்தான் அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனப் பல உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

சிந்து மாகாண அரசு
முன்னதாக, சிந்து மாகாண அரசு கட்டாய மதமாற்றம் மற்றும் திருமணங்களைச் சட்டத்திற்கு விரோதமானதாக மாற்ற முயல்கிறது. இருப்பினும், பெண்கள் முஸ்லிம் ஆண்களைக் காதலித்த பின்னர், அவர்களின் விருப்பத்தின் பெயரிலேயே மதம் மாறுகிறார்கள் என்று கூறினர். பாகிஸ்தானில் இந்து சமூகத்தின் ஒட்டுமொத்த மக்கள்தொகை 1.60 சதவீதமாகவும், சிந்துவில் 6.51 சதவீதமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறுபான்மையினர்
பாகிஸ்தான் நாட்டில் சிறுபான்மையினருக்கு முறையான பாதுகாப்பு அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. அங்கு மத சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடும் வன்முறையும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 2020இல் கூட பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்க்வா தலைநகர் பெஷாவரில் இருக்கும் சில இந்து கோயில்கள் அடுத்து நொறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications