எங்க ராணுவம் சுத்த வேஸ்ட்.. நாட்டை அழித்ததே அவர்கள்தான்.. பயத்தில் கதறும் பாகிஸ்தான் இளைஞர்கள்
இஸ்லாமாபாத்: இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்தியா எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளைக் குறிவைத்துத் தாக்கும் எனச் சொல்லப்படுகிறது. மேலும், இரு நாடுகளுக்கும் இடையே போர்ப் பதற்றமும் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவத்தின் மீது அந்நாட்டு இளைஞர்களுக்கு நம்பிக்கை இல்லை என்று அவர்கள் புலம்பித் தள்ளியுள்ளனர். மேலும், பாகிஸ்தான் நாட்டையே ராணுவம் தான் அழித்ததாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் மீது இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற சூழலே இருக்கிறது. இதற்கிடையே பாகிஸ்தான் முழுவதும் அந்நாட்டு மக்களிடையே நம்பிக்கையின்மை அதிகரித்து வருகிறது.

அதிகரிக்கும் அதிருப்தி
சமூக வலைத்தளங்களில் பாகிஸ்தானியர்கள் வெளிப்படையாகவே தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக அந்நாட்டைச் சேர்ந்த பலரும் தங்கள் ராணுவத்தின் மீது அவநம்பிக்கையையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
பாகிஸ்தான் அரசியலில் ராணுவத்தின் தலையீடு அதிகரித்து வருவது தொடர்பாகவும் நெருக்கடியான சூழல்களில் நாட்டை வழிநடத்தச் சரியான தலைவர்கள் இல்லை என்று அந்நாட்டு மக்கள் சமூக வலைத்தளங்களில் புலம்பி வருகிறார்கள். போர் என்று வந்தால் முதலில் நாட்டை விட்டு வெளியேறுவது பாகிஸ்தான் தலைவர்களாகவே இருப்பார்கள் என்றும் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள்.
ராணுவம்
ஏற்கனவே பல மூத்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் தங்கள் குடும்பங்களை ஐரோப்பிய மற்றும் வளைகுடா நாடுகளில் தான் தங்க வைத்துள்ளனராம்.. அரசியல் அழுத்தம் மற்றும் அச்சுறுத்தலைத் தவிர்க்க இப்போது பாகிஸ்தான் டாப் ராணுவ அதிகாரிகளும் கூட வெளிநாடுகளுக்குச் செல்வது குறித்து யோசித்து வருவதாகச் சொல்லப்படுகிறது.
பிரபலப் பின்னணிப் பாடகர் அட்னான் சாமி தனது பாகிஸ்தான் குடியுரிமையைத் துறந்துவிட்டு, 2016ல் இந்தியக் குடியுரிமையைப் பெற்றிருந்தார். இப்போது அஜர்பைஜானின் பாகுவில் உள்ள அவர் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் சமீபத்தில் பாகிஸ்தான் இளைஞர்களைச் சந்தித்ததாகவும் அவர்கள் தங்கள் பாகிஸ்தானியர்கள் எனச் சொல்லவே பயப்படுவதாகத் தன்னிடம் கூறியதாகப் பதிவிட்டுள்ளார்.
நாட்டை அழித்ததே ராணுவம் தான்
மேலும் அவர், "பாகிஸ்தான் இளைஞர்கள் தங்களைப் பாகிஸ்தானியர்களாக அடையாளப்படுத்திக் கொள்ளவே விரும்பவில்லை. அவர்கள் என்னிடம்.. நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி... நல்ல நேரத்தில் பாகிஸ்தானை விட்டு வெளியேறினீர்கள்... நாங்களும் தான் எங்கள் குடியுரிமையை மாற்ற விரும்புகிறோம்... நாங்கள் எங்கள் ராணுவத்தை வெறுக்கிறோம். அவர்கள் பிடிக்கவில்லை.. அவர்கள் தான் நாட்டையே அழித்தது என்று ஆவேசமாகக் கூறினர். அதற்கு நான் அவர்களிடம் இது எனக்கு நீண்ட காலத்திற்கு முன்பே தெரியும் எனப் பதிலளித்தேன்" என்று பதிவிட்டுள்ளார்.
யாரும் முன்வரவில்லை
இதற்கிடையே பாகிஸ்தானின் லால் மசூதி மதகுரு மௌலானா அப்துல் அஜீஸ் காசி தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதாவது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் வெடித்தால் யார் போரிட முன்வருவீர்கள் என அங்கிருந்தவர்களிடம் அஜீஸ் கேள்வி எழுப்பினார். அங்கு ஏகப்பட்ட பேர் திரண்டிருந்த போதிலும் அதில் ஒருவர் கூட பேச்சுக்குக் கூட நாங்கள் முன்வருவோம் எனச் சொல்லவில்லை. அந்தளவுக்கே அவர்கள் அந்நாட்டு ராணுவத்தை நம்புகிறார்கள். மேலும், போர் வந்தால் இந்தியா எளிதாக வென்றுவிடும் என்பதும் அவர்களுக்குத் தெரியும்.
-
இந்தியாவை முடக்க சீனாவின் நரித்தனம்.. பக்காவான பிளான் Bஐ இறக்கும் இந்தியா.. பிரம்மாண்ட அஸ்திரம்! -
காரை அடிக்கடி துடைத்தால் இப்படியொரு பிரச்சனை வருமாம்.. தெரியாம கூட இதை மட்டும் செய்ய வேண்டாம்! -
பாகிஸ்தான் கூட டிரம்ப்பை மதிக்கல.. அமெரிக்காவை சீண்டும் ஷெரீப் அரசு.. இனி தான் இருக்கு சம்பவம்! -
மிகப்பெரிய டவிஸ்ட்.. யுரேனியத்தை கைவிடும் ஈரான்.. அமெரிக்காவிடம் தாராளமாக விட்டுக் கொடுக்க முடிவு -
இந்தியர்கள் 3 நாடுகளுக்கு செல்ல அதிரடி தடை.. அறிவித்த மத்திய அரசு.. பின்னணியில் ‘எபோலா' நோய்த்தொற்று -
கரப்பான் பூச்சி கட்சிக்கு பின்னணியில் பாகிஸ்தான்? முடக்கப்பட்ட பக்கங்கள்.. அடுத்து திடீர் விளக்கம் -
“இந்தியா என்னை 100% நம்பலாம்.. நான் மோடியின் மிகப்பெரிய ரசிகன்!” ஓபனாக பேசிய டிரம்ப்! -
சீனாவில் இருந்தபடி ஹைதராபாத்தில் ஆபரேஷன்! 3,000 கிமீ தொலைவில் ரோபோவை கண்ட்ரோல் செய்த இந்திய டாக்டர் -
92% மார்க் எடுத்த பிறகும் நேர்ந்த சோகம்! நீட் ரத்தால் கர்நாடக மாணவி விபரீதம்.. கண்ணீரில் பெற்றோர் -
ஒரே நொடி.. மின்னல் வேகத்தில் வந்து மோதிய கார்! வெடித்து சிதறிய ரயில்.. பறிபோன 24 உயிர்கள்.. திக்திக் -
உடல் வெடித்து சிதறிய பாக்., ராணுவ வீரர்கள்..ரயிலில் தற்கொலைப்படை தாக்குதல்.. BLA–வின் ஷாக் பின்னணி -
பெட்ரோல், டீசல் விலை மேலும் உயரும்.. இதை தவிர்க்கவே முடியாது.. BPCL முன்னாள் இயக்குனர் எச்சரிக்கை












Click it and Unblock the Notifications