பாகிஸ்தான் உருவாக்கும் செயற்கை தீவு.. பின்னணியில் இருப்பதே டிரம்ப் தான்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் இப்போது திடீரென ஒரு செயற்கை தீவை உருவாக்கி வருகிறது. சிந்து நதிக்கு அருகில் கடலில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உருவாக்கப்படும் இந்த செயற்கைத் தீவின் பணிகள் அடுத்தாண்டு பிப்ரவரியில் முடியுமாம். பாகிஸ்தான் திடீரென ஏன் இந்த செயற்கை தீவை உருவாக்குகிறது. இதனால் இந்தியாவுக்கு எதாவது சிக்கலா என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நமது அண்டை நாடான பாகிஸ்தான் பொருளாதார ரீதியாக பல்வேறு தடுமாற்றங்களைச் சந்தித்து வருகிறது. தீவிரவாதத்தை ஊக்குவிப்பதில் ஆர்வம் செலுத்தும் பாகிஸ்தான் வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்துவதில்லை. இதனால் தான் பாகிஸ்தான் பொருளாதாரம் மிக மோசமாக இருக்கிறது. இதற்கிடையே பாகிஸ்தான் இப்போது செயற்கை தீவு ஒன்றை உருவாக்கி வருகிறதாம். இதற்கு டிரம்ப் தான் ஒரு வகையில் காரணம்.!

செயற்கை தீவு
பாகிஸ்தானில் நல்ல எண்ணெய் வளம் இருப்பதாக டிரம்ப் சொல்லி வருகிறார். இதனால் பாகிஸ்தான் பெட்ரோலியம் லிமிடெட் நிறுவனம் செயற்கை தீவை உருவாக்குகிறதாம். இதன் மூலம் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுகளைத் தீவிரப்படுத்த முடியும் என பாகிஸ்தான் நம்புகிறது. சிந்து மாகாணத்தின் சுஜாவல் அருகே, சிந்து நதிக்கு அருகில் கடலில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் இந்த செயற்கைத் தீவு அமையவுள்ளது.
எதற்காக இந்த தீவு?
கடலில் எண்ணெய் பணிகளைச் செய்யும்போது, ஒவ்வொரு ஷிப்ட் முடியும் போதும் மீண்டும் கரைக்குத் திரும்ப வேண்டும். இதனால் நேரம் வீணாகிறது. செயல்திறனும் குறைகிறது. இதன் காரணமாகவே அங்குச் செயற்கை தீவை பாகிஸ்தான் உருவாக்குகிறது. இதன் மூலம் உற்பத்தியை அதிகரிக்க முடியும். இதனால் பயணச் செலவும் குறையும். இந்த தீவு உருவாக்கப்பட்ட உடன் 24 மணி நேரமும் கேப் இல்லாமல் பணிகளைச் செய்யவும் பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து 6 அடி கூடுதல் உயரத்தில் அமையும் இந்த செயற்கைத் தீவு, கடல் அலைகளாலும் பாதிக்கப்படாது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இதன் கட்டுமான பணிகள் நிறைவடையும் எனப் பாகிஸ்தான் பெட்ரோலியம் தெரிவிக்கிறது. கட்டுமான பணிகள் முடிந்த உடனேயே தீவு செயல்படத் தொடங்கும். அங்கு சுமார் 25 எண்ணெய் கிணறுகளைத் தோண்டப் பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.
முதல்முறை இல்லை
இதுபோல கச்சா எண்ணெய் பணிகளுக்காக செயற்கைத் தீவுகளை உருவாக்குவது பாகிஸ்தானுக்கு இதுவே முதல்முறை. இதற்கு முன்பு பாகிஸ்தானில் இதுபோல எதுவும் உருவாக்கப்பட்டது இல்லை. அதேநேரம் உலகிலேயே இதுதான் முதல்முறை எனச் சொல்ல முடியாது. ஐக்கிய அமீரகம், ஜப்பான் போன்ற நாடுகள் கடலில் பல செயற்கை தீவுகளைக் கட்டி, உற்பத்தித் திறனை அதிகரித்துள்ளன.
மண், மணல் அல்லது பிற கட்டுமான பொருட்களைக் கடலில் போட்டு, இது போன்ற தீவுகள் உருவாக்கப்படும். இந்த மிக நீண்ட அதிக செலவு வைக்கும் முறை என்றாலும் கூட செயற்கை தீவு மூலம் அதிக லாபம் கிடைக்கும். இதன் காரணமாகவே பல நாடுகள் இதுபோன்ற செயற்கை தீவுகளை உருவாக்கியுள்ளன. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் இதுபோல பல தீவுகளை உருவாக்கியுள்ளன. குறிப்பாக ஜப்பான் இதுபோன்ற 50 செயற்கை தீவுகளை உருவாக்கியுள்ளது.
பெரிய ரிஸ்க்
பாகிஸ்தான் இந்த செயற்கை தீவுக்காகப் பல ஆயிரம் கோடி செலவிடுகிறது. ஆனால் இதில் விஷயம் என்னவென்றால் அங்கு அந்தளவுக்குக் கச்சா எண்ணெய் இருக்கிறதா என உறுதியாகத் தெரியாது. ஒருவேளை அங்குக் கச்சா எண்ணெய் இருந்தால் ஓகே லாபம் தான். ஆனால், கச்சா எண்ணெய் இல்லை என்றால் இது பாகிஸ்தானுக்கு ஒரு தேவையில்லாத செலவாகவே இருக்கும்.
-
ஹார்முஸில் கப்பல் போக ஆரம்பித்த அடுத்த நொடி.. ஈரான் கைகளுக்கு வரும் பல கோடி டாலர்! எப்படி? -
39 முறை பொய் சொன்ன Trump.. முழுக்க முழுக்க மார்க்கெட் மேனிபுலேஷன்? ஈரான் கொடுத்த பதிலடி! -
போலீசாருக்குப் பயந்து ஓடி.. நேராக முதலையிடம் மாட்டிய நபர்.. ஒரே கடியில் கையை கடித்து துப்பிய முதலை -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
திடீரென மனசு மாறிய டிரம்ப்.. ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி உத்தரவு! காரணம் இதுதான் -
"AI மனித கட்டுப்பாட்டை மீறும்.." அடுத்து என்ன நடக்கும் தெரியுமா? AI நிறுவனத்தின் தலைவர் எச்சரிக்கை -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது! -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
கதையை முடிக்க அமெரிக்கா போடும் பிளான்.. கறார் காட்டும் ஈரான்! டிரம்புக்கு செக்! -
ஈரானை மொத்தமாகக் கைப்பற்றத் திட்டம் போடும் அமெரிக்கா.. டிரம்ப் சொன்ன ஷாக்கான விஷயம்! -
ஈரான்-ஐ துவம்சம் செய்யபோகும் அமெரிக்கா! இன்று இரவே தாக்குதல் டொனால்ட் டிரம்ப் பரபர 'வார்னிங்'! -
டிரம்பின் கோல்டு காயின் பிசினஸ்.. அமெரிக்க அதிபர் சட்டத்தை மீறுகிறாரா? என்ன சொல்கிறார்கள் அதிகாரிகள்












Click it and Unblock the Notifications