Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காசாவில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட மறுநொடி.. பாகிஸ்தானில் வெடித்த கலவரம்! ஒரே நாளில் பலர் உயிரிழப்பு!

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: காசாவில் நீண்ட இழுபறிக்குப் பிறகு இப்போது தான் ஒரு வழியாகப் போர் முடிவுக்கு வந்துள்ளது. இதற்கிடையே காசா போர் முடிந்த மறுநொடியே பாகிஸ்தானில் மிகப் பெரிய வன்முறை வெடித்துள்ளது. இதில் பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில், அங்குப் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த நகரமும் ஸ்தம்பித்துப் போய் இருக்கிறது.

கடந்த 2 ஆண்டுகளாகவே மத்தியக் கிழக்கில் பதற்றம் நிலவி வந்தது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் வெடித்தது. காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இதற்கிடையே நீண்ட போராட்டத்திற்குப் பிறகு டிரம்ப் தலையீடு காரணமாக இந்தப் போர் இப்போது முடிவுக்கு வந்துள்ளது. இதற்கிடையே காசாவில் அமைதி திரும்பிய அடுத்த நொடியே பாகிஸ்தானில் வன்முறை வெடித்துள்ளது.

Pakistan Burns Over Gaza Ceasefire TLP Protests Turn Violent as Palestinians Rejoice in Peace Deal

திடீர் வன்முறை

பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமிய மதவாதக் கட்சியான தெஹ்ரீக்-இ-லப்பைக் பாகிஸ்தான் (TLP) ஆதரவாளர்கள், இஸ்ரேலுக்கு எதிராகப் பேரணியை நடத்தியுள்ளனர். லாகூரில் இருந்து இஸ்லாமாபாத் நோக்கி பேரணி சென்றுள்ளனர். அப்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே திடீரென மோதல் வெடித்ததில் ஒரு அதிகாரியும், பல போராட்டக்காரர்களும் கொல்லப்பட்டுள்ளனர். லாகூர் அருகே வன்முறை வெடித்ததில் அந்த நகரமே முழுமையாக ஸ்தம்பித்தது.

போராட்டம் நடந்தபோது திடீரென ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதில் ஒரு அதிகாரி கொல்லப்பட்டதாகவும் பஞ்சாப் காவல்துறை தலைவர் உஸ்மான் அன்வர் தெரிவித்தார். அதேநேரம் போராட்டக்காரர்கள் தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து அவர் எந்தவொரு தகவலையும் கூறவில்லை. இருப்பினும், இதில் பலர் கொல்லப்பட்டதாகவும் டிஎல்பி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஎல்பி தலைவர்

குறிப்பாக டிஎல்பி தலைவர் சாத் ரிஸ்விக்கு துப்பாக்கிக் குண்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.. கூட்டத்தைக் கட்டுப்படுத்த போராட்டக்காரர்கள் மீது அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது அவருக்குக் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் மீது பல துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததாகவும் அவர் தற்போது ஆபத்தான நிலையில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சாத் ரிஸ்வி காயமடைந்துள்ள நிலையில், மிகப் பெரிய ஒரு போராட்டத்திற்கு டிஎல்பி அழைப்பு விடுத்துள்ளது. இதனால் நிலைமை மோசமடையும் என அஞ்சப்படுகிறது.

இந்தத் துப்பாக்கிச் சூடு தொடர்பாகப் பல்வேறு வீடியோக்களும் இணையத்தில் பரவி வருகிறது. அதில் பல வாகனங்கள் எரிந்த நிலையில் காணப்பட்டன. சாலை முழுக்க ஆங்காங்கே தீ வைப்பு சம்பவங்களும் நடந்துள்ளன. இதில் லாகூர் நகரம் முழுக்க மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது அந்த வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது.

என்ன நடந்தது

ஆர்ப்பாட்டக்காரர்கள் இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியே பாலஸ்தீன ஆதரவு பேரணியை நடத்தத் திட்டமிட்டிருந்தனர். அந்தக் கூட்டத்தைக் கலைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தபோது இரு தரப்பிற்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. அதைத் தொடர்ந்தே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அங்குச் சாலைகளில் போலீசார் தடுப்பிற்கு வைத்திருந்த கண்டெய்னர்களை அகற்றப் போராட்டக்காரர்கள் முயன்றதுதான் இந்த வன்முறை வெடித்தாக தகவல் வெளியாகியுள்ளது.

டிஎல்பி போராட்டம்

இந்தப் போராட்டத்தை நடத்திய டிஎல்பி ஒரு மதவாதக் கட்சியாகும். கடந்த 2018ல் நடந்த பாகிஸ்தான் தேர்தலில் இஸ்லாத்தை அவமதிப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தை முன்னிறுத்தி இவர்கள் பிரச்சாரம் செய்தனர். அதன் பின்னர், டிஎல்பி கட்சி தொடர்ச்சியாக பாகிஸ்தானில் வன்முறை பேரணிகளை நடத்தியுள்ளது. சமீப ஆண்டுகளில் லாகூர் மற்றும் பிற நகரங்களில் பாலஸ்தீன ஆதரவு பேரணிகளையும் இக்கட்சி நடத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+