Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல.. 12 மரண தண்டனை.. நம்ம ஊர்ல இப்படி ஒன்னு கொடுத்தாபோதும்!

பாகிஸ்தானில் 9 குழந்தைகளை பலாத்காரம் செய்து 3 பேரை கொன்ற நபருக்கு 12 மரண தண்டனைகள் விதிக்கப்பட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    நம்ம ஊர்ல இப்படி ஒன்னு கொடுத்தாபோதும்!- வீடியோ

    இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் 9 குழந்தைகளை பலாத்காரம் செய்து 3 பேரை கொன்ற நபருக்கு 12 மரண தண்டனைகள் விதிக்கப்பட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பாகிஸ்தான் நாட்டின் கசூர் நகரை சேர்ந்த சைனப் என்ற 7 வயது சிறுமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
    இதுதொடர்பான வழக்கில் இம்ரான் அலி என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார்.

    இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு லாகூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

    வழக்கை விசாரித்த நீதிபதிகள், இம்ரான் அலிக்கு மரண தண்டனையும், 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 40 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தனர்.

    8 சிறுமிகள் பலாத்காரம்

    8 சிறுமிகள் பலாத்காரம்

    தொடர்ந்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இம்ரான் அலி இதுபோன்று மேலும் 8 சிறுமிகளை பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

    3 சிறுமிகள் கொலை

    3 சிறுமிகள் கொலை

    அதில் ஆயிஷா, லைபா மற்றும் நூர் பாத்திமா என்ற 3 சிறுமிகளை பலாத்காரம் செய்து கொலை செய்ததும் தெரியவந்தது. இந்நிலையில், பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் 3 சிறுமிகளை கொன்ற வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

    12 மரண தண்டனைகள்

    12 மரண தண்டனைகள்

    வழக்கை விசாரித்த நீதிபதிகள், 3 சிறுமிகளை கொன்ற வழக்கில் இம்ரான் அலிக்கு 12 மரண தண்டனைகளை விதித்து உத்தரவிட்டனர். ஒவ்வொரு கொலைக்கும் 4 தூக்குதண்டனைகள் விதித்து உள்ளனர்.

     ரூ.60 லட்சம் அபராதம்

    ரூ.60 லட்சம் அபராதம்

    மேலும், 60 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தனர். அந்த தொகையில் இருந்து 30 லட்சம் ரூபாயை கொலை செய்யப்பட்ட 3 சிறுமிகளின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    இந்தியாவிலும் இதுபோன்று

    இந்தியாவிலும் இதுபோன்று

    இந்த தீர்ப்பு குறித்து அறிந்த நெட்டிசன்கள் இந்தியாவிலும் இதுபோன்று சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் நபர்களுக்கு கடும் தண்டனை விதித்தால் குற்றங்கள் குறையும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+