அந்த தப்பை செய்யாதீங்க.. பாக். ராணுவ தளபதியை வறுத்தெடுத்த அமெரிக்கா! இந்தியாவுக்கு சப்போர்ட்
வாஷிங்டன்: இந்தியா மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதலை தொடங்கியிருக்கிறது. இந்நிலையில், இந்தியாவுடன் மோதலை தவிர்க்க வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீருக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
ஏற்கெனவே ஒரு முறை இதே போன்று அறிவுறுத்தியும் பாகிஸ்தான் கேட்பதாக தெரியவில்லை. இந்நிலையில் இரண்டாவது முறையாக இந்த அறிவுறுத்தல் வந்திருக்கிறது.

இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூருக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் இந்தியா மீது தாக்குதலை தொடங்கியிருக்கிறது. எல்லை பகுதிகளான ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியிருந்தது. இதனை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக முறியடித்திருக்கிறது. இருப்பினும் ஷெல் குண்டுகள் ஜம்மு காஷ்மீரின் எல்லையை ஒட்டிய பகுதிகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன.
பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் குண்டு விழுந்ததால், உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. அதேபோல நேற்றிரவும் தாக்குதலை பாகிஸ்தான் தொடங்கியிருக்கிறது. இதனை வழக்கம்போல இந்திய ராணுவமும், விமானப்படையும் முறியடித்திருக்கிறது.
ஆனால் இதேபோல தொடர்ந்தால் இந்தியா கடுமையான பதிலடியை கொடுக்கும். இரு நாடுகள் வசமும் அணு ஆயுதங்கள் இருக்கின்றன. எனவே, இந்த தாக்குதலை பாகிஸ்தான் உடனடியாக தவிர்க்க வேண்டும்.
இன்று காலை பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிருக்கு போன் போட்ட அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, இந்தியா மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றும், இரு நாடுகளுக்கிடையே அமைதி உருவாகும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், அமைதிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்யும் எனவும் கூறியிருக்கிறார்.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications