முதுகில் குத்திய பாகிஸ்தான்.. ஈரானுக்கு எதிராக சவுதி அரேபியா-வில் செய்த வேலை.. முதல் ராணுவ ஆக்ஷன்!
பாகிஸ்தான் தலைமையில் நடந்த அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை பெரும் தோல்வியில் முடிந்துள்ள நிலையில், அடுத்தது என்ன நடக்கும் என உலகமே அச்சத்துடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் வேளையில், இந்த பேச்சுவார்த்தையை நடத்திய பாகிஸ்தான் அடுத்தக்கட்ட போரில் முதலும் முக்கியமான ராணுவ நடவடிக்கையாக மேற்கொண்டுள்ளது.
2025 செப்டம்பரில் கையெழுத்தான பாகிஸ்தான் - சவுதி அரேபியா மத்தியிலான பரஸ்பர பாதுகாப்பு உடன்பாட்டின் கீழ் சவுதி அரேபியாவுக்கு பாகிஸ்தான் அரசு தனது போர் விமானங்கள் மற்றும் துணை விமானங்களை அனுப்பியுள்ளது. இதே நேரத்தில் தான் பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையை நடத்தி வந்தது.

இந்த இரட்டை நடவடிக்கை பாகிஸ்தான் தன் உத்தியை இரு பக்கங்களிலும் சமநிலைப்படுத்த முயற்சிப்பதை தெளிவாகக் காட்டுகிறது. இதன் காரணமாகவே ஈரான் உடனான முக்கியமான பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஏன் பாகிஸ்தானை சேர்வு செய்தது என கேள்விகள் எழுந்தது.
பாதுகாப்பு ஒப்பந்தம்
சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள கிங் அப்துல் அஜீஸ் விமான தளத்தில் சனிக்கிழமை பாகிஸ்தான் போர் விமானங்கள் தரையிறங்கின. மேலும் பாகிஸ்தான் ராணுவ வீரர்ரகளையும் சவுதிக்கு அனுப்பியுள்ளதாக பாகிஸ்தான் டான் செய்தியில் தெரிக்கப்பட்டு உள்ளது. இதேநேரத்தில் தான் பாகிஸ்தானில் ஈரான் உடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியது.
2025 செப்டம்பரில் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் ரியாத் சென்றபோது சவுதி இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்தபோது இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம்படி, ஒரு நாட்டுக்கு எதிரான தாக்குதல் என்பது இரு நாடுகளுக்கும் எதிரான தாக்குதலாகக் கருதப்பட்டு பாதுகாப்பு உதவிகளை செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தான் தான் சவுதி மீது ஈரான் தாக்குதல் மேற்கொண்ட நிலையில் தற்போது பாகிஸ்தான் தனது விமானங்களை அனுப்பியுள்ளது.
தற்போது ஈரான் - அமெரிக்கா மத்தியிலான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ள நிலையில் திட்டமிட்டுள்ள 2 வார போர் நிறுத்தம் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதேவேளையில் டிரம்ப் அரசு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமான என்ற எதிர்பார்பும் உருவாகியுள்ளது. இதற்கிடையில் தான் இஸ்லாமாபாத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்துக்கொண்டு இருக்கும் போதே, போர் விமானங்களை சவுதிக்கு கொடுத்துள்ளது பாகிஸ்தான்.
பாதுகாப்பு வல்லுநர்கள் இந்க மூன்று விமானங்கள் ராணுவ ரீதியாக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது என்று கூறியுள்ளார். ஆனால் இது பாகிஸ்தான் தன் பாதுகாப்பு உடன்பாட்டுக்கு உண்மையாக இருப்பதை உலகுக்கு காட்டும் செயல் என்று அவர்கள் பார்க்கின்றனர். இன்னும் சிலர் ஆபத்தான சூதாட்டம் என்று விமர்சனம் செய்துள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications