எந்த தாக்குதலுக்கும் நாங்க தயாராக இருக்கோம்... கொக்கரிக்கும் பாகிஸ்தான்
Recommended Video

இஸ்லாமாபாத்: எந்த விதமான தாக்குதலுக்கும் நாங்கள் தயாராக உள்ளோம் என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் முகமது பைசல் கூறியிருக்கிறார்.
புல்வாமா தாக்குதல் நடைபெற்றது முதலே இந்தியா பாகிஸ்தான் இடையே தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று காலை பாகிஸ்தான் போர் விமானம் காஷ்மீரில் உள்ள ரஜோரியில், இந்திய ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தியது.
அதனை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகத்தில் பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. எல்லையில் உள்ள பொதுமக்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவுரை வழங்கினார்.

தயாராக இருக்க ஆணை
மேலும் ராணுவம், துணை ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் போர் விமானங்கள் ரஜோரி ராணுவ நிலை அருகே குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

பாகிஸ்தான் விளக்கம்
குண்டுவீசிய பாகிஸ்தான் போர் விமானங்களை இந்திய போர் விமானங்கள் துரத்தி அடிக்கப்பட்டன. இந்நிலையில், தாக்குதல் நடத்தியது குறித்து பாகிஸ்தான் விளக்கமளித்துள்ளது.

திறமைக்கான தாக்குதல்
இது தொடர்பாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகமது பைசல் கூறியிருப்பதாவது: எங்களுடைய திறமையை காண்பிக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்துவது எங்களது பாதுகாப்பு மற்றும் உரிமையை மட்டுமே காண்பித்துள்ளோம்.

தயாராக இருக்கிறோம்
மேலும் தாக்குதலை தீவிரப்படுத்த நாங்கள் விரும்பவில்லை. அதே நேரத்தில் எந்த விதமான தாக்குதலுக்கும் நாங்கள் தயாராக உள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications