ராவல்பிண்டி நரம்பில்.. நெருப்பை உருக்கி ஊற்றிய இந்தியா.. பாகிஸ்தான் முழுக்க பரவிய அச்சம்.. பின்னணி
இஸ்லாமாபாத்: பபாகிஸ்தான் நாடு முழுக்க கடுமையான அச்சம் நிலவி வருகிறது. இந்தியா மேற்கொள்ள உள்ள பாதுகாப்பு ராணுவ ஒத்திகை காரணமாக பாகிஸ்தான் முழுக்க கடுமையான அச்சம் நிலவி வருகிறது.
இந்தியாவில் 54 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு முழுவதும் நாளை பாதுகாப்பு ஒத்திகை நடைபெறவுள்ளது. இந்திய வரலாற்றில் மிகப்பெரிய போர் ஒத்திகையாக இது பார்க்கப்படுகிறது. போர்ச் சூழலில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாளை ஒத்திகை நடத்த, பல மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு கடிதம் அனுப்பியது. விமான தாக்குதல் அபாயச் சங்கு ஒலிக்க விடுவது, தாக்குதல் நடந்தால் மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான நடைமுறைகள் உள்ளிட்டவை ஒத்திகை பார்க்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விமானத் தாக்குதல் எச்சரிக்கை அமைப்புகளின் தாக்கத்தை மதிப்பிடுதல். அவை எப்படி இருக்கின்றன, சரியாக இயங்குகிறதா? விமானங்கள் வருவதை முறையாக அறிவிக்கிறதா என்பதை மதிப்பிடுவது. இந்திய விமானத்துடன் ஹாட்லைன்/ரேடியோ தொடர்பு இணைப்புகளை இயக்குதல், சோதனை செய்தல், படை கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் நிழல் கட்டுப்பாட்டு அறைகளின் செயல்பாட்டைச் சோதிப்பது.

எதிரி தாக்குதல் ஏற்பட்டால் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சிவில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பொதுமக்கள், மாணவர்கள் போன்றோருக்கு பயிற்சி அளித்தல். விபத்து தடுப்பு நடவடிக்கைகளை வழங்குதல். முக்கியமான ஆலைகள்/நிறுவல்களை முன்கூட்டியே மறைப்பதற்கான ஏற்பாடுளை செய்தல், அவசர சேவைகள், தீயணைப்பு, மீட்பு நடவடிக்கைகள் மற்றும் கிடங்கு மேலாண்மை உள்ளிட்ட சிவில் பாதுகாப்பு சேவைகளின் செயல்பாடுகள் மற்றும் வேகத்தை கண்டுபிடித்தல்.
விபத்து தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தல். பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வேகமாக செல்ல வெளியேற்றத் திட்டங்களை வகுத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
பாகிஸ்தானில் அச்சம்
இது முழுக்க முழுக்க போருக்கான அறிகுறி ஆகும். இதனால் இந்தியாவின் போர் ஒத்திகை பாகிஸ்தானுக்குள் பின்வரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் நாட்டு தலைவர்கள் தொடங்கி பொதுமக்கள் வரை அச்சத்தில் உள்ளனர்.
1. பாகிஸ்தானியர்கள் மிக நீண்ட போருக்கு தயாராகி வருவதாக அந்நாட்டு உள்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா நடத்த போகும் தாக்குதல்கள் மோசமாக இருக்கும் என்பதால் பாகிஸ்தான் நீண்ட போருக்கு தயாராகி வருகிறதாம்.
2. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், பதட்டம் இன்னும் தெளிவாகத் தெரிகிறது. எல்லைப் பதட்டங்களை காரணம் காட்டி, 1,000க்கும் மேற்பட்ட மதரஸாக்கள் முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டுள்ளன. முசாபராபாத் மற்றும் கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகே உள்ள நகரங்களில், பள்ளி, மதரஸாக்கள் தற்காலிக பயிற்சி முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன.
3. அங்கே 11 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீயை அணைக்கும் கருவிகளைப் பயன்படுத்துவது, முதலுதவி அளிப்பது மற்றும் காயமடைந்த வகுப்பு தோழர்களை ஸ்ட்ரெச்சர்களில் சுமந்து செல்வது எப்படி என்பதைக் கற்றுக்கொள்கிறார்கள்.
4. எல்லையிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சகோதி போன்ற கிராமங்களில், பெற்றோர்கள் குழந்தைகளை வீட்டிற்குள் வைத்திருக்கிறார்கள். மேலும் பதுங்கு குழிகள் வலுப்படுத்தப்படுகின்றன. அவர்கள் பள்ளியிலிருந்து நேராக வீடு திரும்பும் வரை ஆட்கள் வைத்து பாதுகாப்பு அளிக்கிறார்கள்.
5. அங்கே 2 மாதங்களுக்கு உணவு இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. கட்டுப்பாட்டுக் கோட்டில் (LoC) உள்ள 13 தொகுதிகளில் இரண்டு மாதங்களுக்கு உணவுப் பொருட்களை இருப்பு வைக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. உணவு, மருந்துகள் மற்றும் பிற அனைத்து அடிப்படைத் தேவைகளையும் வைத்துக்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது.
6. கோஸ்ட் டவுன் என்று அழைக்கும் அளவிற்கு சுற்றுலாத் தலங்கள் ஆட்களே இல்லாத பேய் நகரங்களாக மாறி வருகின்றன. கடைகள் கூட காலியாகி உள்ளன.
7. இந்தியாவின் போர் ஒத்திகை காரணமாக பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் இஸ்லாமாபாத்தில் உள்ள இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) தலைமையகத்திற்கு அவசரமாக சென்றார். ஷெரீப்புடன் துணைப் பிரதமர் இஷாக் தார் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் ஆகியோர் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கே கடுமையான பதற்றம் தற்போது நிலவி வருகிறது.
8. பொதுவாக பார்வையாளர்களால் பரபரப்பாகவும், பசுமையான நிலப்பரப்புகளுக்கு பெயர் பெற்றதாகவும் இருக்கும் நீலம் பள்ளத்தாக்கு வெறிச்சோடி உள்ளது. ஹோட்டல்கள் காலியாக உள்ளன. மேலும் உள்ளூர் வாசிகளும் வெளியேறி விட்டனர். பாகிஸ்தானின் செயல்கள் அந்த நாடு மிக நீண்ட போருக்கு தயாராவதை உறுதி செய்கிறது.












Click it and Unblock the Notifications