தாக்குதலை கைவிட்ட பாகிஸ்தான்! இந்தியா திருப்பி அடிக்க தொடங்கியதும்.. பம்பிய பாக். வெளியுறவு அமைச்சர்
இஸ்லாமாபாத்: இந்தியா பாகிஸ்தான் இடையேயான பதற்றம் அதிகரித்து வருகிறது. ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைப் பொறுக்க முடியாமல் பாகிஸ்தான் இந்தியாவின் வட மாநிலங்கள் மீது தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு இந்தியாவும் தக்கப் பதிலடி கொடுத்து வருகிறது. முதல் வீர ஆவேசமாகத் தாக்குதலை நடத்திய பாகிஸ்தான், தாக்குதல் அதிகமாகவே அப்படியே பல்டி அடித்தது.
கடந்த மே 7ம் தேதி ஆபரேஷன் சிந்தூரை இந்திய ராணுவம் வெற்றிகரமாக நடத்தியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத தளங்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் சுமார் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் தீவிரவாத முகாம்கள் மீது மட்டும் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தான்
ஆனால், இந்திய ராணுவத்தின் வெற்றியைப் பொறுக்காத பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. கடந்த இரண்டு நாட்களாகவே எல்லையில் உள்ள பல்வேறு பகுதிகளைக் குறிவைத்து இந்தியா மீது பாகிஸ்தான் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. முதலில் இந்தியா திருப்பி அடிக்கவில்லை.. இந்தியா நோக்கி வரும் ட்ரோன்களை மட்டுமே பாகிஸ்தான் நிறுத்தியது. ஆனால், நேற்றைய தினம் இந்தியா இறங்கி அடித்தது. பாகிஸ்தானில் உள்ள சுமார் 6 ஏர் பேஸ்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. குறிப்பாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே கூட தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பாகிஸ்தானின் ரேடார் அமைப்புகள், பாதுகாப்பு அமைப்புகளை இந்தியா காலி செய்தது.
திருப்பி அடித்த இந்தியா
இந்தியா இதுபோல திருப்பி அடிக்கும் என்பதை பாகிஸ்தான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்தியா அதிகபட்சம் எல்லையோரப் பகுதிகளில் மட்டுமே தாக்குதல் நடத்தும் என்றே பாகிஸ்தான் எதிர்பார்த்தது. ஆனால், இந்தியா பாகிஸ்தான் முழுக்க 6 ஏர் பேஸ்களை குறிவைத்துத் தாக்குதல் நடத்தியது. அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் ராணுவத் தளம் அமைந்துள்ள நூர் கான் விமானத் தளம் மீதும் இந்தியா தாக்குதல் நடத்தியது. இது பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து வெறும் 10 கிமீ தூரத்தில் தளம் என்பது குறிப்பிடத்தக்கது.
யூடர்ன் போட்ட பாகிஸ்தான்
இந்தியா இந்தளவுக்குத் திருப்பி அடிக்கும் என்தை பாக். சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதன் காரணமாகவே பாகிஸ்தான் திடீரெனத் தனது டோனை மொத்தமாக மாற்றிக் கொண்டது. தாக்குதலையே கூட மொத்தமாக நிறுத்தவும் தயாராக இருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் தெரிவித்தார். போர் நிறுத்த அறிவிப்பு வெளியாகும் முன்பே அவர் இதைக் குறிப்பிட்டிருந்தார்.
இந்தளவுக்குச் சூழல் செல்ல பாகிஸ்தான் தான் பிரதானக் காரணமாக இருந்தது. ஒவ்வொரு சூழலிலும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த அதற்கு இந்தியா பதிலடி மட்டுமே கொடுத்தது. ஆனால், அதை மறைக்கும் வகையில்.. இந்தியா தனது ராணுவத் தாக்குதலை நிறுத்தினால் தனது நாடும் தாக்குதலை நிறுத்தம் என அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் ரெடியாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வெளியான தகவல்
பாகிஸ்தான் ராணுவத் தளங்கள் மீது இந்திய நடத்திய தாக்குதலால் அங்குப் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே நிலைமை தணிக்க பாகிஸ்தான் விரும்பியுள்ளது.. இந்தியாவின் மூத்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு மோதலை முடிவுக்குக் கொண்டு வர முயற்சிகள் நடந்துள்ளன. இந்தச் சூழலில் தான் சற்று நேரத்திற்கு முன்பு இந்தியா பாகிஸ்தான் இடையேயான சண்டை முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
பரிதாபமாக சீரழியும் பாகிஸ்தான்.. இப்படியொரு நிலைமை ஏற்பட்டதே இல்லை.. ரொம்பவே மோசம்! -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications