பீதியில் பாகிஸ்தான்! இந்திய எல்லையில் செய்துள்ள வேலையை பாருங்க!

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமபாத்: காஷ்மீர் தாக்குதல் காரணமாக நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் என்பது அதிகரித்துள்ளது. நம்நாடு எப்போது பதிலடி தாக்குதல் கொடுக்கும் என்று அச்சத்தில் பாகிஸ்தான் உள்ளது. இதனால் நம் நாட்டின் தாக்குதலை சமாளிக்க தேவையான வேலைகளை பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் நிலையில் இந்தியாவுக்கு எதிராக உலகில் சக்திவாய்ந்த ரேடாரை காஷ்மீர் எல்லைக்கு கொண்டு வந்துள்ளது. இதை நம் நாடு சமாளிக்குமா? இல்லையா? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த 22ம் தேதி துப்பாக்கிச்சூடு நடத்தினர். 26 சுற்றுலா பயணிகள் இறந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா திட்டமிட்டு வருகிறது.

pakistan-moves-its-radar-systems-along-india-border-due-to-fearing-of-air-strikes

பயங்கரவாதிகளும் அவர்களை ஆதரிப்பவர்களும் கற்பனை செய்ய முடியாத பதிலடியை இந்தியா தரும் என்று மோடி எச்சரித்துள்ளார். இதனால் இந்த முறை பாகிஸ்தானுக்கு பலமான பதிலடியை நம் நாடு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது காஷ்மீரில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. இதற்கு உரிய பதிலடியை நம் ராணுவமும் வழங்கி வருகிறது. தற்போது எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. அதுமட்டுமின்றி எந்த நேரம் வேண்டுமானாலும் நம்நாட்டு படைகள் பாகிஸ்தானை பதம் பார்க்கலாம் என்ற நிலை தான் உள்ளது.

அதுமட்டுமின்றி ராணுவப்படை, விமானப்படை, கடற்படை என அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. இதனால் பாகிஸ்தான் பீதியடைந்துள்ளது. நம் நாட்டின தாக்குதலை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக தான் நம் தாக்குதலை முன்கூட்டியே கணிக்க பாகிஸ்தான் தனது ரேடார் சிஸ்டங்களை எல்லையை நோக்கி நகர்த்தி வருகிறது.

குறிப்பாக சியால்கோட் செக்டார் பகுதியில் எல்லையை நோக்கி ரேடார் சிஸ்டங்களை கொண்டு வந்து இருக்கிறது. அதேபோல் நம்மை நோட்டம் பார்க்கும் வகையில் நம் நாட்டின் பெரோஷ்பூர் செக்டாருக்கு எதிர்பகுதியில் பாகிஸ்தான் தனது ராணுவத்தின் மின்னணு பிரிவை (Electronic warfare detachments) நிலை நிறுத்தி உள்ளது. தற்போது TPS-77 ரோடாரை நம் எல்லையில் இருந்து 58 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சோர் கண்டோன்மென்ட்( Chor Cantonment) ஏரியாவில் பாகிஸ்தான் நிறுவி உள்ளது.

இது உலகில் உள்ள சிறந்த ரேடார்களில் ஒன்றாகும். இந்த ரேடாரின் சிறப்பு என்னவென்றால் பாலிஸ்டிக் ஏவுகணைகள், ட்ரோன்கள், போர் விமானங்கள் உள்ளிட்டவற்றை 463 கிலோ மீட்டர் தூரத்தில் வரும்போதே கண்டுபிடித்து சிக்னல் கொடுக்கும். அதே போல் தாழ்வாக பறந்து வந்து தாக்கும் ட்ரோன், போர் விமானங்களை 150 கிலோ மீட்டருக்கு அப்பால் கண்டுபிடித்துவிடும். அதோடு தரைவழியாக தாக்குதல் நடத்தினாலும் இந்த ரேடாரால் கண்காணிக்க முடியும்.

மேலும் இந்த ரேடாரின் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் இதனை எளிதாக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நகர்த்தி கொள்ளலாம். குறிப்பாக விமானங்கள், ஹெலிகாப்டர், லாரிகள், ரயில்கள் மூலமாக கூட இந்த ரேடாரை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்ல முடியும். இது பாகிஸ்தானுக்கு ஒரு பிளஸ் பாயிண்ட்டாகும் .

பாகிஸ்தான் இப்படி சக்திவாய்ந்த ரேடாரை களமிறக்கி இருந்தாலும் கூட அது பெரிய அளவுக்கு அந்த நாட்டுக்கு பயனளிக்காது என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் நம்மிடம் ரேடாரில் சிக்காமல் தாக்குதல் நடத்தும் போர் விமானம், ஏவுகணைகள் உள்ளன. ஒருவேளை போர் விமானங்கள், ஏவுகணைகள் அல்லது ட்ரோன்கள் பாகிஸ்தானுக்குள் நுழைவதை அந்த நாட்டின் ரேடார் கண்டுப்பிடித்தாலும் கூட அதனை பாகிஸ்தான் இடைமறித்து அழிக்க வேண்டும்.

ஆனால் இந்தியாவுடன் ஒப்பிடும்போது இடைமறிப்பு திறனில் பாகிஸ்தான் மிகவும் பின்தங்கி இருக்கிறது. எனவே இந்தியாவின் தாக்குதலை தடுப்பது என்பது பாகிஸ்தானுக்கு சவால் தான் என்கின்றனர் பாதுகாப்பு துறை சார்ந்த வல்லுநர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+