பாகிஸ்தானை புறவாசலாக பயன்படுத்தும் ஈரான்.. 3000 கண்டெய்னர்கள், 6 வழிகள்.. மெகா திட்டம்!
பாகிஸ்தான் அரசு ஈரானுக்கு செல்லும் பொருட்களை கொண்டு செல்ல 6 புதிய நிலவழி போக்குவரத்து பாதைகளை அதிகாரப்பூர்வமாக திறந்துள்ளது. கடல் வழி போக்குவரத்து தடைபட்டதால் பாகிஸ்தான் துறைமுகங்களில் சிக்கியுள்ள ஈரானுக்கு செல்ல வேண்டிய ஆயிரக்கணக்கான கண்டெய்னர்களை சாலை மூலம் கொண்டு செல்ல இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கராச்சி உள்ளிட்ட பாகிஸ்தான் துறைமுகங்களில் ஈரானுக்கு செல்ல வேண்டிய 3,000-க்கும் மேற்பட்ட கண்டெய்னர்கள் நீண்ட நாட்களாக சிக்கியுள்ளன. அமெரிக்காவின் தடை மற்றும் ஹார்முஸ் நீரிணை பகுதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து இடையூறுகள் காரணமாக ஈரானுக்கான கடல்வழி போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தற்போது திறக்கப்பட்டுள்ள ஆறு நிலவழி பாதைகள் மூலம் இந்த 3000 கண்டெய்னர்களை சாலை வழியாக ஈரானுக்கு அனுப்ப பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.
அவசர நடவடிக்கை
இந்த பாதைகள் அரசியல் ரீதியான பாதைகள் அல்ல, ஆனால் ஈரானுக்கு கண்டெய்னர்களை அனுப்ப வேண்டும் என்ற காரணத்திற்காக அவசர நடவடிக்கையாக 6 பாதைகளும் திறக்கப்பட்டு உள்ளது. ஹார்முஸ் நீரிணை மூலம் கடல் வழி போக்குவரத்து தடைப்பட்டதால், ஈரானுக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானை பின் கதவுகளாக பயன்படுத்தி சரக்கு போக்குவரத்தை எளிதாக்கியுள்ளது ஈரான்.
இந்த பாதைகள் வழியாக முதலில் எந்த பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன என்பது முக்கியமானது. உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய நுகர்வோர் பொருட்கள் முன்னுரிமை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஈரான் மக்களின் அன்றாட வாழ்க்கை எளிதாக்கும்.
இந்த நடவடிக்கை பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு தெளிவாகக் காட்டுகிறது. ஒருபுறம் ஈரானின் விநியோகப் பாதையைத் திறந்து வைக்கும் அதேவேளையில், தெஹ்ரான் மற்றும் வாஷிங்டன் இடையே மத்தியஸ்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டுள்ளது. இது வெறும் நடுநிலை அல்ல, மாறாக பாகிஸ்தான் தனது முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளதை உலக நாடுகளுக்கு காட்டும் ஒரு முக்கியமான நகர்வு என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.
ஹார்முஸ் நீரிணை தடைபட்டதன் முதல் உண்மையான பாதிப்பு இப்போது தெரியத் தொடங்கியுள்ளது. கடல் வழி மூடப்படும்போது நிலவழிகள் முக்கியமானதாக மாறுகிறது. இந்த சம்பவம் உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் நடக்கும் மாற்றங்களை தெளிவாகக் காட்டுகிறது.
-
அடுத்தடுத்து நிலநடுக்கம்.. காலையிலேயே குலுங்கிய ஈரான்.. கியூபாவில் 150 ஆண்டுகளில் இல்லாத அதிர்வு -
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரர்கள் - பாதுகாப்புப் படை மோதல்.. 30 பேர் சுட்டுக்கொலை -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வன்முறை.. 30 பேர் பலியானது எப்படி? பிரச்சனை ஏன்? எளிய விளக்கம் -
நாட்டில் 21 இடங்களுக்கு குறி.. பதம் பார்த்த ஈரான் IRGC ராணுவ படை.. அலறிய அமெரிக்கா! -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம் -
ஹார்முஸ், பாப் அல்-மண்டெப் இரண்டையும் மூடிய ஈரான்..? மொத்த வர்த்தகமும் முடக்கம்.. உலக நாடுகள் ஷாக் -
இஸ்ரேல் - ஈரான் இடையில் திடீர் போர் நிறுத்தம்! பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அதிரடி அறிவிப்பு! -
இஸ்ரேல் கப்பலை கண்டதும் சுட உத்தரவு.. பாப் அல்-மன்டெப் கண்ட்ரோலில் எடுக்கும் ஹவுதி!












Click it and Unblock the Notifications