"ஸ்லோ பாய்சன்.." இம்ரான் கானை ஜெயிலில் வைத்து தீர்த்து கட்ட சதி? பற்றி எரியும் பாகிஸ்தான்! பகீர்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைதைத் தொடர்ந்து அங்கே பதற்றமான சூழல் நிலவும் நிலையில், இது குறித்து சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் இம்ரான் கான். கடந்த முறை அங்கு நடந்த தேர்தலில் அதிக இடங்களைப் பெற்று, கூட்டணி ஆட்சியையும் அமைத்தார் இம்ரான் கான்.

Pakistan Prime minister Imran Khan fears he may be killed in prison by slow poisoning

பாகிஸ்தானைப் பொறுத்தவரை அந்நாட்டின் ராணுவத்திற்கு அதீத பவர் இருக்கிறது. ராணுவத்தை எதிர்க்கும் ஒருவரால் அங்கே நீண்ட காலம் பிரதமராக இருக்கவே முடியாது. இம்ரான் கான் பிரதமரான போது ராணுவ தலைமைக்கும் மோதல் இல்லாமலேயே இருந்தது.

இம்ரான் கான்: இருப்பினும், சில காலத்தில் இரு தரப்பிற்கும் இடையே மோதல் அதிகரித்தது. இந்தச் சூழலில் தான் இம்ரான் கான் கூட்டணியில் இருந்த சில அரசியல் கட்சியினரே அவருக்கு எதிராகத் திரும்பினர். இதனால் அங்கே அரசியல் குழப்பம் ஏற்பட்டு, அவர் பிரதமர் பதவியில் இருந்து விலக நேர்ந்தது. இருப்பினும், தான் பதவி விலகச் சர்வதேச அளவில் நடந்த சதியே காரணம் என்று இம்ரான் கான் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டினார்.

அவர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட போதிலும் தொடர்ச்சியாக இப்போது இருக்கும் ஷெரீப் அரசுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார். தொடர் போராட்டங்களையும் நடத்தி வந்தார். இது ஒரு பக்கம் இருக்கப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, இம்ரான் கான் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், கைதாவதை அவர் தவிர்த்தே வந்தார்.

காதர் அறக்கட்டளை: இந்தச் சூழலில் சமீபத்தில் அவர் வழக்கு விசாரணைக்காக இஸ்லாமாபாத் ஐகோர்ட்டிற்கு வந்திருந்தார். அப்போது காதர் அறக்கட்டளை தொடர்பான வழக்கில் இம்ரான் கானை பாகிஸ்தானின் துணை ராணுவ படையினர் கைது செய்தனர். நீதிமன்ற வளாகத்திற்கு நுழைந்த துணை ராணுவ படையினர் 70 வயதான இம்ரான் கானை அதிரடியாக கைது செய்தனர். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பின் டாப் தலைவர் மீது இம்ரான் கான் குற்றஞ்சாட்டிய மறுநாளே இந்த கைது நடவடிக்கை நடந்துள்ளது. இம்ரான் கான் கைதை கண்டித்து அங்கே நாடு முழுக்க கடும் போராட்டங்கள் நடந்து வருகிறது. பல இடங்களில் இந்த போராட்டம் தீவைப்பு மற்றும் கலவரத்திலும் கூட முடிந்தது. இந்த கலவரத்தில் சில உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளது. இதனால் ஒட்டுமொத்த பாகிஸ்தானிலும் பதற்றமான ஒரு சூழலே நிலவி வருகிறது.

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையக நுழைவாயிலை அடித்து நொறுக்கிய போராட்டக்காரர்கள் நாடு முழுக்க போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பாகிஸ்தானின் சில பகுதிகளில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் கூட நடந்தது. இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பல இடங்களில் தீ வைத்தும் எரித்தனர். இதனால் ஒரு வித பதற்றமான சூழலே நிலவியது.

ஸ்லோ பாய்சன்: இதற்கிடையே ஜெயிலில் ஸ்லோ பாய்சன் கொடுத்து தான் கொலை செய்யப்படலாம் என்று இம்ரான் கான் அஞ்சுவதாகக் கூறப்படுகிறது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிடிஐ தலைவர் இம்ரான் கான், ஸ்லோ பாய்சனால் சிறையில் கொல்லப்படலாம் என்று அச்சம் தெரிவித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அல்-காதிர் அறக்கட்டளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இம்ரான் கான் நீதிமன்றத்திலேயே தனது அச்சத்தை வெளிப்படுத்தினார். மெதுவாகத் தன்னை கொலை செய்ய ஸ்லோ பாய்சன் ஊசி போட அவர்கள் திட்டமிட்டுள்ளதாக பகீர் கிளப்பியுள்ளார். இது அங்கே பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+