எவ்வளவு அடி வாங்குனாலும் திருந்தாத பாகிஸ்தான்! ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாத முகாம்கள்?
இஸ்லாமாபாத்: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா குறிவைத்து அழித்தது. இந்த நிலையில் அழிக்கப்பட்ட பயங்கரவாத முகாம்களை மீண்டும் அதிநவீன வசதிகளுடன் கட்டமைக்கும் வேலைகளை பாகிஸ்தான் செய்யத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின் போது சுக்குநூறாக உடைக்கப்பட்ட பயங்கரவாத முகாம்களை மீண்டும் கட்டமைக்க ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை
ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா நடத்திய இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாத முகாகள் தகர்த்து எறியப்பட்டன. நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் அரண்டு போன பாகிஸ்தான், இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் மக்கள் வசிப்பிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தான் டிரோன்கள் மூலமாக தாக்குதல் நடத்த முயற்சித்தது. பாகிஸ்தானின் இந்த முயற்சியை இந்தியா தனது வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் முறியடித்தது. அதுபோக, பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் மீது அதிரடியாக தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாத பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தது. இதையடுத்து இருநாடுகளுக்கும் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.
மீண்டும் சதிவேலையை தொடங்கிய பாகிஸ்தான்
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்த நிலையில், ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டாம் என்று பாகிஸ்தான் கெஞ்சுகிறது. பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்தும் வரை எந்த மாற்றமும் செய்யப்படாது என்று இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்த நிலையில்தன் வேதாளம் முருங்கை மரம் ஏறியது என்று சொல்வார்களே அதேபோல பாகிஸ்தான் மீண்டும் தனது சதி செயலை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின் போது சுக்குநூறாக உடைக்கப்பட்ட பயங்கரவாத முகாம்களை மீண்டும் கட்டமைக்க ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரபல ஆங்கில ஊடக நிறுவனமான என்.டி.டிவி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
அதிநவீன வசதிகளுடன்..
பாகிஸ்தான் ராணுவம், உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ அரசின் முழு ஆதரவுடன், பயங்கரவாத உள்கட்டமைப்பை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் மீண்டும் கட்டமைக்க ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. கண்காணிப்பில் இருந்து தப்பவும், தாக்குதல் நடத்த ஏதுவாகவும், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (LoC) அருகே அடர்ந்த வனப்பகுதிகளில் சிறிய மற்றும் அதிநவீன வசதிகளுடன் பயங்கரவாத கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே இடத்தில் மீண்டும் முகாம்கள்
லஷ்கர்-இ-தொய்பா (LeT), ஜெய்ஷ்-இ-முகமது (JeM), ஹிஸ்புல் முஜாஹிதீன் மற்றும் தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் (TRF) போன்ற குழுக்கள் பயன்படுத்திய பல பயங்கரவாத தளங்களை ஆபரேஷன் சிந்துர் ஆக்ஷனில் இந்தியா அழித்த சில வாரங்களுக்குப் பிறகு ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்த நடவடிக்கை தொடங்கியுள்ளது.
லூனி, புட்வால், திப்பு போஸ்ட், ஜமீல் போஸ்ட், உம்ரான்வாலி, சப்ரார் ஃபார்வர்ட், சோட்டா சக் மற்றும் ஜங்லோரா போன்ற பகுதிகளில் இருந்த பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்ட நிலையில், அதே இடத்தில் மீண்டும் முகாம்கள் கட்டமைக்கப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications