For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பறந்து வரும் ஹெலிகாப்டர்.. குவிக்கப்பட்ட போலீஸ் படை! பாகிஸ்தானில் இன்று கைதாகும் இம்ரான் கான்.. ஏன்?

பாகிஸ்தானில் யார் ஆட்சியில் இருந்தாலும்.. உண்மையில் அந்நாட்டில் ஆட்சியில் இருப்பது என்னவோ ராணுவம்தான்

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று கைது செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இஸ்லாமாபாத் போலீசார் இம்ரான் கானை கைது செய்ய உள்ளனர்.

பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான், அந்நாட்டு ராணுவத்திற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வைத்து வந்தார். பாகிஸ்தான் பிரதமர்கள் பெரும்பாலும் அந்நாட்டு ராணுவத்தை எதிர்க்கவே மாட்டார்கள்.

ராணுவத்தை எதிர்த்தால், பிரதமர்களை அந்த ராணுவமே தீர்த்து கட்டும் என்பதுதான் பாகிஸ்தான் அரசியல் சூழ்நிலை. பாகிஸ்தானில் யார் ஆட்சியில் இருந்தாலும்.. உண்மையில் அந்நாட்டில் ஆட்சியில் இருப்பது என்னவோ ராணுவம்தான் என்ற கூற்று உள்ளது. அது மீண்டும் அங்கு உண்மை ஆகியுள்ளது.

‛சைத்தான்’.. பிரதமர் மோடியை விமர்சித்த பாகிஸ்தான் மாஜி கிரிக்கெட் வீரர் சயீத் அன்வர்.. சர்ச்சை ‛சைத்தான்’.. பிரதமர் மோடியை விமர்சித்த பாகிஸ்தான் மாஜி கிரிக்கெட் வீரர் சயீத் அன்வர்.. சர்ச்சை

 பாகிஸ்தான்

பாகிஸ்தான்

கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில் பிரதமர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவது பாகிஸ்தான் ராணுவம்தான். பாகிஸ்தானில் ராணுவ ஜெனரலாக இருப்பவர்கள் சொல்வதே அங்கு சட்டம் என்ற நிலை நிலவி வருகிறது. ஒருவேளை ஜெனரல்கள் சொல்வதை மீறினால் அங்கு ஆட்சியே கவிழும் நிலை கூட ஏற்பட்டு இருக்கிறது. பாகிஸ்தான் வரலாற்றில் இதற்கு முன் இப்படிப்பட்ட ஆட்சி மாற்றங்கள் பல ராணுவம் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் செய்யப்பட்டுள்ளது.அதேபோல் எதிர்த்ததால் இம்ரான் கானுக்கு எம்பிக்கள் சப்போர்ட் போனது. இதனால் அங்கே ஆட்சியையும் கவிழ்ந்தது.

ஆட்சி கவிழ்ப்பு

ஆட்சி கவிழ்ப்பு

இந்த நிலையில் இடையில் ஒருமுறை இம்ரான் கான் மீது துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது. லேசான காயங்களுடன் இந்த துப்பாக்கி சூட்டில் இருந்து அவர் தப்பித்தார். அவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் தற்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று கைது செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இஸ்லாமாபாத் போலீசார் இம்ரான் கானை கைது செய்ய உள்ளனர். முக்கியமான வழக்கு ஒன்றில் அவர் இன்று கைது செய்யப்பட உள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்து உள்ளன.

என்ன வழக்கு

என்ன வழக்கு

பேரணி ஒன்றில் பாகிஸ்தான் மாஜிஸ்திரேட் ஜெபா சவுத்ரி மற்றும் காவல்துறை அதிகாரிகளை மிரட்டியதாக இம்ரான் கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. நீதித்துறையில் தீவிரவாதிகளை கொண்டு வருவேன் என்று கூறி இம்ரான் கான் மிரட்டியதாக புகார் வைக்கப்பட்டது. இதில் விசாரணை நடைபெற்று வந்தது. ஆனால் வழக்கு விசாரணையில் ஆஜராக இம்ரான் கான் விலக்கு கேட்டு இருந்தார். அவருக்கு விலக்கு கொடுக்கப்படாத போதும் கூட அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த நிலையில்தான் சிவில் நீதிபதி ராணா முஜாஹித் ரஹீம் மூன்று பக்க தீர்ப்பை வெளியிட்டார். அதில் கான் மீண்டும் மீண்டும் விலகி விசாரணைக்கு ஆஜராகாததால் ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்டை பிறப்பித்தார்.

கைது

கைது

இதில் கடந்த வாரமே இம்ரான் கான் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில் இம்ரான் கான் இன்று கைது செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இஸ்லாமாபாத் போலீசார் இம்ரான் கானை கைது செய்ய உள்ளனர்.ஹெலிகாப்டரில் அவரின் வீட்டிற்கு அருகே இருக்கும் பகுதிக்கு போலீசார் சென்றுள்ளனர். சிறப்பு போலீஸ் படையை இறக்கி அவரின் வீடு இருக்கும் சாமன் பார்க்கில் சென்று போலீசார் இம்ரான் கானை கைது செய்ய உள்ளனர். இதையடுத்து பாகிஸ்தானில் தற்போது போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

English summary
Pakistan's former Prime Minister Imran Khan to be arrested by Islamabad police today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X