காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணித்தாலும் காஷ்மீர் சபாநாயகருக்கு அழைப்பில்லை. பாக். திட்டவட்டம்
இஸ்லமாபாத் : காமன்வெல்த் நாடாளுமன்ற சங்க மாநாட்டை இந்தியா புறக்கணித்தாலும், ஜம்மு காஷ்மீர் மாநில சபாநாயகரை மாநாட்டிற்கு அழைக்கப் போவதில்லை என்று பாகிஸ்தான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில், செப்டம்பர் 30-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை காமன்வெல்த் நாடாளுமன்ற சங்கத்தின் 61-வது மாநாடு நடைபெறுகிறது.அதில் பங்கேற்குமாறு இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களின் சபாநாயகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள பாகிஸ்தான், காஷ்மீர் மாநில சபாநாயகருக்கு மட்டும் அழைப்பு விடுக்கவில்லை.

பாகிஸ்தானின் இந்த தன்னிச்சையான முடிவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில்,காமன்வெல்த் நாடாளுமன்ற சங்க மாநாட்டை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஆனால், இந்த விஷயத்தில் பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டை மாற்றிகொள்ளப்போவது இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகர் அயாஸ் சாதிக் கூறியதாவது...
மாநாட்டிற்கு ஜம்மு-காஷ்மீர் சபாநாயகருக்கு அழைப்பு விடுக்க மாட்டோம். ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டசபை சட்டப்பூர்வமானது அல்ல. அதனால் நாங்கள் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டோம். காஷ்மீர் பிரச்சினையை காரணம் காட்டி இந்தியா இந்த மாநாட்டைப் புறக்கணித்தால் அது அவர்களின் விருப்பம். நாங்கள் எங்கள் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்றார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications