For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இம்ரான்கானுக்கு இப்படி ஒரு பெயரா? சீனாவுக்காக செய்யும் சூப்பர் வேலை.. பாவம் கழுதைகள்!

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: உலகளவில் அதிக கழுதைகளை கொண்ட 3வது நாடாக உள்ள பாகிஸ்தான், சீனாவிடம் தான் வாங்கிய கடனை கழுதையை விற்று அடைத்து வருகிறது.

Recommended Video

    China-வுக்காக செய்து வரும் சூப்பர் வேலை.. கழுதையை வச்சு கடன் அடைக்கும் Pakistan

    கழுதை மேய்க்கத்தான் நீ லாயக்கு என்று ஆசிரியர்கள் மாணவர்களை திட்டியிருப்பார்கள். இன்றும் பல பேர் நிறுவனத்தின் மேலாளர்களிடமும், அலுவலகத்தின் உயர் அதிகாரிகளிடமும் திட்டு வாங்கி கொண்டிருப்பார்கள்.

    ஆனி மாதத்தில் இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும் ஆனி மாதத்தில் இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்

    ஆனால் ஒரு நாடே கழுதையை மேய்த்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. நமது பக்கத்து நாடான பாகிஸ்தான் உலகிலேயே அதிக கழுதைகளை வைத்துள்ளது. கழுதைகளை அதிக அளவில் இனம் பெருக்கம் செய்யவைத்து தனது நாட்டின் கடனை அடைத்து வருகிறது.

    எருமை எண்ணிக்கை

    எருமை எண்ணிக்கை

    விசித்திரமாக இருக்கிறதா, இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. பாகிஸ்தான் மாடு வளர்ப்பிலும் கழுதை வளர்ப்பதிலும் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். 2021ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி பாகிஸ்தானில் எருமைகளின் எண்ணிக்கை 12 லட்சமாக அதிகரித்துள்ளது. ஆடுகள் எண்ணிக்கை 3.2 கோடியில் இருந்து 3.5 கோடியாக உயர்ந்துள்ளது.

    56 லட்சம் கழுதைகள்

    56 லட்சம் கழுதைகள்

    செம்மறி ஆடு எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் 4 லட்சம் அளவிற்கு புதிதாக உயர்ந்து வருகிறது. இதேபோல், கழுதைகளின் எண்ணிக்கை கடந்த ஒரே ஆண்டில் ஒரு லட்சம் அதிகரித்து இருக்கிறது. இப்போதைக்கு பாகிஸ்தானில் 56 லட்சம் கழுதைகள் இருக்கின்றன. பாகிஸ்தான் தனது நாட்டில் கழுதைகளின் இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்கு சீனாவும் முக்கிய காரணம்

    வருமானம்

    வருமானம்

    கழுதைகளுக்கு சீனாவில் அதிகளவில் மவுசு உள்ளது. ஆண்மையை அதிகரிக்கும் கொழுப்பு சத்துகள் கழுதையின் பாலில் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. மேலும் கழுதை கறியில் இருந்து பல்வேறு நோய்களுக்கு பாரம்பரிய மருந்துகள் கிடைக்கின்றன. அதனால், பாகிஸ்தானிடம் இருந்து ஆண்டுதோறும் 80 ஆயிரம் கழுதைகளை சீன நிறுவனங்கள் வாங்கி கொன்று, மருந்துகளை தயாரிக்கின்றன. இதன் மூலமாக பல கோடி ரூபாயை பாகிஸ்தான் வருமானமாக ஈட்டி வருகிறது.

    சீனாவிடம் வாங்கிய கடன்

    சீனாவிடம் வாங்கிய கடன்

    சீனாவிடம் இருந்து வாங்கியுள்ள பல ஆயிரம் கோடி கடனை, கழுதைகள் விற்பனை மூலமாகவும் பாகிஸ்தான் அரசு அடைத்து வருகிறது.. இதன் காரணமாகவே, கழுதைகள் இனப்பெருக்கத்தை பெருக்குவதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆர்வமாக உள்ளார்.. கழுதைக்காகவே பாகிஸ்தானில் தனி மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன.

    கிண்டல்

    கிண்டல்

    கழுதைகள் எண்ணிக்கை அதிகரித்து வருவது பாகிஸ்தானில் சர்ச்சையாகி உள்ளது பிரதமராக இம்ரான் பொறுப்பேற்றதில் இருந்து கழுதைகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகமாகி வருகிறது. இதனால், எதிர்கட்சிகள் பிரதமர் இம்ரான்கானை 'கழுதைகளின் அரசன்' என பட்டப்பெயர் சூட்டி கிண்டல் செய்து வருகின்றன.

    English summary
    Pakistan, the third largest donkey country in the world, is selling the donkey it borrowed from China.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X