பயங்கர நிலநடுக்கம்.. ட்ரோன்களை ஏவிக் கொண்டிருந்த அதே நேரத்தில்.. குலுங்கிய பாகிஸ்தான் நகரம்!
கராச்சி: பாகிஸ்தான் நாட்டில் நள்ளிரவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளைக் குறி வைத்து பாகிஸ்தான் ட்ரோன்களை ஏவி வருவதற்கு மத்தியில், பாகிஸ்தான் நகரம் நிலநடுக்கத்தால் குலுங்கி உள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் குவேட்டா நகரின் அருகில் இன்று (மே 10) அதிகாலை 1.44 மணியளவில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கமானது நிலபரப்பில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் பதிவாகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.
இதுபோன்ற ஆழமற்ற நிலநடுக்கங்கள் நிலபரப்புக்கு மிக அருகில் ஏற்படுவதால், அதிகளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
An earthquake with a magnitude of 4.0 on the Richter Scale hit Pakistan at 01.44 am (IST) today: National Center for Seismology (NCS) pic.twitter.com/zAuDQQ2WRQ
— ANI (@ANI) May 9, 2025
70 கிலோ மீட்டருக்கும் குறைவான ஆழத்தில் நிகழும் ஆழமற்ற பூகம்பங்கள், பெரும்பாலும் வலுவான நில நடுக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஏனெனில் நில அதிர்வு அலைகள் மேற்பரப்புக்கு விரைவாக பயணிக்கும். 10 கி.மீ ஆழத்தில் ஏற்படும் நிலநடுக்கங்கள், கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் கடந்த 5 ஆம் தேதி திங்கட்கிழமை 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதற்கு முன்னதாக ஏப்ரல் 30 ஆம் தேதி இரவு 9:58 மணிக்கு 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
சமீபத்திய நிலநடுக்கங்களில் மிகவும் வலிமையானது ஏப்ரல் 12 ஆம் தேதி ஏற்பட்டது, இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக 10 கி.மீ ஆழத்தில் பதிவாகி இருந்தது. இந்நிலையில் தொடர்ந்து தற்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் இந்திய மற்றும் யூரேசிய டெக்டோனிக் தகடுகளின் சந்திப்பில் அமைந்துள்ளது. இதனால் இப்பகுதி அதிக நில அதிர்வு ஏற்படும் பகுதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications