காஷ்மீர் பிரச்சனையில் பகீர் திருப்பம்.. 5 முக்கிய முடிவை எடுத்த பாக்.. இந்தியாவுடன் உறவு முறிகிறது!
காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்ததை அடுத்து இந்தியாவுடன் பாகிஸ்தான் மொத்தமாக உறவை முறித்துள்ளது.
Recommended Video
இஸ்லாமாபாத்: காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்ததை அடுத்து இந்தியாவுடன் பாகிஸ்தான் மொத்தமாக உறவை முறித்துள்ளது. 5 முக்கியமான முடிவுகளை பாகிஸ்தான் தற்போது எடுத்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு, அதற்கான சிறப்பு அந்தஸ்தும் நீக்கப்பட்டுள்ளது. இது பாகிஸ்தான் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
இதுகுறித்து பெரிய எதிர்வினையாற்றாமல் இருந்த பாகிஸ்தான் தற்போது இதில் ராஜாங்க ரீதியான நடவடிக்கையில் இறங்கி உள்ளது. இந்தியாவுடனான உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.

முதலில் என்ன
அதன்படி முதற்கட்டமாக, இந்தியாவுடன் அனைத்து விதமான தூதரக உறவுகளையும் பாகிஸ்தான் முறித்துக் கொள்கிறது. எந்த விதமான அரசு தொடர்பான உறவுகளும் இனி இருக்காது. இரண்டு நாட்டு தூதராக அதிகாரிகளும் சொந்த நாட்டிற்க்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

என்ன உறவு
இரண்டு நாட்டிற்கு இடையில் இருந்த வர்த்தக உறவும் முடிவிற்கு வருகிறது. இரண்டு நாடுகளுக்கு இடையில் இனி எந்த விதமான ஏற்றுமதி, இறக்குமதியும் இருக்காது. வாகா எல்லை மூடப்படும். பேருந்து போக்குவரத்து கூட இருக்காது.

என்ன ஒப்பந்தம்
இதற்கு முன் செய்யப்பட ஒப்பந்தங்கள், இதற்கு முன் கையெழுத்து இடப்பட்ட முக்கிய புரிந்துணர்வுகள் எல்லாம் இனி பரிசீலிக்கப்படும். இதை தற்போது பாகிஸ்தான் ரத்து செய்யவில்லை. ஆனால் இது தொடர்பான அனைத்து விஷயங்களை பாகிஸ்தான் ஆய்வு செய்து பின் முடிவு செய்யும்.

ஐநா என்ன
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் நடந்த அதிரடி மாற்றங்கள் குறித்து ஐநாவில் முறையிட உள்ளதாக பாகிஸ்தான் முடிவு எடுத்துள்ளது. ஐநாவில் மட்டுமில்லாமல் ஐநா பாதுகாப்பு கவுன்சிலும் முறையிட போவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தற்போது சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டிஷ், அமெரிக்கா ஆகிய நாடுகள் இருக்கிறது. இவர்களிடம் பாகிஸ்தான் தரப்பில் புகார் அளிக்கப்பட உள்ளது.

கடைசி
இதையடுத்து இந்திய சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்க போவதாக பாகிஸ்தான் அறிவித்து உள்ளது. இந்திய சுதந்திர தினத்திற்கு முதல்நாள் பாகிஸ்தான் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதை காஷ்மீர் போராளிகளுக்கு மரியாதை செலுத்தவும் பயன்படுத்த போவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஐஎஸ்ஐ தீவிரவாதிகளின் புது சதி.. இந்திய அரசியலுக்குள் ஊடுருவ திட்டம்.. அதிர வைக்கும் பயங்கர பிளான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications