For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிகாலை நேரம்.. பாகிஸ்தானில் நேருக்குநேர் மோதிய 2 ரயில்கள்.. 30பேர் பலி,பலர் படுகாயம்.. வீடியோ வைரல்

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் இரண்டு ரயில்கள் நெருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர், மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

    அதிகாலை நேரம்.. பாகிஸ்தானில் நேருக்குநேர் மோதிய 2 ரயில்கள்.. 30பேர் பலி,பலர் படுகாயம்.. வீடியோ வைரல்

    பாகிஸ்தான் நாட்டில் ரயில் விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையான ஒன்றாகவே உள்ளது. அந்நாட்டின் பெரும்பாலான ரயில் கட்டமைப்புகள் பிரிட்டன் ஆட்சி சமயத்தில் ஏற்படுத்தப்பட்டவை.

    ஹரியானாவில் திடீர் பரபரப்பு..பசுவுடன் போலீஸ்நிலையத்தில் விவசாயிகள் முற்றுகை..டெல்லி நோக்கியும் பேரணிஹரியானாவில் திடீர் பரபரப்பு..பசுவுடன் போலீஸ்நிலையத்தில் விவசாயிகள் முற்றுகை..டெல்லி நோக்கியும் பேரணி

    ஊழல், முறைகேடு உள்ளிட்டவை காரணமாக ரயில் பாதைகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை. இதனால் அவ்வப்போது அங்கு ரயில் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

    32 பேர் பலி

    32 பேர் பலி

    தெற்கு பாகிஸ்தானில் அமைந்துள்ள தர்கி நகர் அருகே இரண்டு ரயில்கள் மோதி மிகப் பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் குறைந்தபட்சம் 30 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    உயிரிழப்புகள் அதிகரிக்கலாம்

    உயிரிழப்புகள் அதிகரிக்கலாம்

    வடக்கு சிந்து மாகாணத்தில் இன்று அதிகாலை நடந்து இந்த விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த கொடூர விபத்தில் 6 ரயில் பெட்டிகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. மேலும், விபத்து மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

    எப்படி ஏற்பட்டது

    எப்படி ஏற்பட்டது

    கராச்சியில் இருந்து சர்கோதாவுக்குச் சென்று கொண்டிருந்த மில்லட் எக்ஸ்பிரஸ், விடியற்காலையில் தடம் புரண்டது. அந்த ரயில் அருகிலிருந்த மற்றொரு ரயில் பாதையில் குறுக்கே சென்றுவிட்டது. அப்போது ராவல்பிண்டியில் இருந்து எதிர்த்திசையில் வந்து கொண்டிருந்த சர் சையத் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

    பிரதமர் இரங்கல்

    பிரதமர் இரங்கல்

    இந்த ரயில் விபத்து அதிர்ச்சி அளிப்பதாகவும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய உதவிகளை மேற்கொள்ளுமாறும் அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த ரயில் விபத்து குறித்து விசாரணை நடத்தி விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

    English summary
    Pakistan Train Accident latest news.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X