Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஷேக் ஹசீனாவை பொதுவெளியில் தூக்கிலிட திட்டம்.. வங்கதேச மாணவர்கள் போட்ட பெரிய சதி - உளவுத்துறை ஷாக்

Subscribe to Oneindia Tamil

டாக்கா: வங்கதேச ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமானை பாகிஸ்தான் உளவுத்துறையுடன் சேர்ந்து வங்கதேச இடைக்கால அரசு பதவியில் இருந்து இறக்க துடித்ததையும், இதற்காக மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டத்தை நம் நாட்டின் உளவுத்துறை கண்டுபிடித்து அவரை காப்பாற்றியதும் நமக்கு தெரியும். இப்போது இன்னொரு திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த மாணவர் போராட்டத்தின் முக்கிய நோக்கம் என்பது ஷேக் ஹசீனாவின் மாளிகையில் நுழைந்து அவரை அடித்து தெருத்தெருவாக இழுத்து சென்று பொதுவெளியில் தூக்கிலிடுவது தான் என்பதை உளவுத்துறை பகிர்ந்துள்ளது.

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு கல்லூரி மாணவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். வங்கதேசம் சுதந்திரமடைய போராடியவர்களின் வாரிசுகளுக்கு அரசு பணியில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் நாடு முழுவதும் பெரும் போராட்டத்தை நடத்தினர்.

bangladesh sheikh hasina waqar uz zaman intelligence

இந்த போராட்டம் என்பது வன்முறையாக மாறியது. ஏராளமானவர்கள் கொல்லப்பட்டனர். மேலும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக திரும்பியது. அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி அவர் வங்கதேசத்தை விட்டு வெளியேறி நம் நாட்டில் தஞ்சமடைந்தார். தற்போது ஷேக் ஹசீனா நம் நாட்டில் பாதுகாப்பாக உள்ளார்.

ராணுவ உளவுத்துறை

ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் வங்கதேசம் கூறி வந்தாலும் கூட மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. இந்நிலையில் தான் கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடந்த மாணவர்களின் போராட்டம் மற்றும் அதன் பின்னணி குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக வங்கதேசத்தின் உளவுத்துறை முக்கிய தகவலை தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் டிஜிஎஃப்ஐ எனும் Directorate General of Forces Intelligence எனும் உளவுத்துறை செயல்பட்டு வருகிறது.

மாணவர்கள் போராட்டம்

வங்கதேச ராணுவத்தின் ஒருபகுதியாக இந்த உளவுத்துறை என்பது செயல்பட்டு வருகிறது. இந்த உளவுத்துறை சார்பில் தான் கடந்த ஆண்டு நடந்த மாணவர்கள் போராட்டம் தொடர்பாக Swarajya செய்தி நிறுவனத்துக்கு முக்கிய தகவல் கிடைத்துள்ளது.

அதாவது கடந்த ஆண்டு இடஒதுக்கீட்டுக்கு எதிராக வங்கதேசத்தில் மாணவர்கள் பேராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் என்பது ஏடிஎஸ்எம் எனும் Anti Discrimination Students Movement என்று அழைக்கப்பட்டது. பாகிஸ்தான் ஆதரவு இஸ்லாமிய அமைப்பினரும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஷேக் ஹசீனாவை தூக்கிலிட திட்டம்

இவர்களின் முக்கிய குறிக்கோள் என்பது ஷேக் ஹசீனாவின் ஆட்சியை விட்டு இறக்குவது தான். அதுமட்டுமின்றி ஷேக் ஹசீனா வசிக்கும் பங்களாவுக்குள் நுழைந்து அவரை அசிங்கப்படுத்தி அடித்து தெருத்தெருவாய் இழுத்து செல்ல வேண்டும்.

அதன்பிறகு இனப்படுகொலை செய்த குற்றச்சாட்டில் அவரை சிறையில் அடைத்து சிறப்பு நீதிமன்றம் அமைத்து விரைந்து வழக்கை முடித்து அவரை பொதுவெளியில் தூக்கிலிட வேண்டும் என்பது தான் இந்த போராட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்று உளவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷேக் ஹசீனாவை காப்பாற்றிய ராணுவ தளபதி

ஆனால் இப்படி எதுவும் நடக்கவில்லை. ஷேக் ஹசீனாவை பொதுவெளியில் தூக்கிலிடும்போது அது வங்கதேச வரலாற்றில் இருந்து மறையாது.இதன்மூலம் மாணவர்களின் வன்முறையை வங்கதேசத்தில் நடந்த புரட்சி என்று பெயரிட்டு அழைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இது கைக்கூடவில்லை. இதற்கு முக்கிய காரணம் வங்கதேச ராணுவ தலைமை தளபதி வாக்கர் உஸ் ஜமான் தான்.

மாணவர்கள் நோக்கம் பற்றி உளவுத்துறை மூலம் அறிந்ததுமே அவர் ஷேக் ஹசீனாவை தொடர்பு கொண்டு பேசினார். மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் பிரதமர் மாளிகை நோக்கி வருகின்றனர். உங்களின் உயிருக்கே ஆபத்து உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று எச்சரிக்கை செய்தார். அதுமட்டுமின்றி ஷேக் ஹசீனாவை உடனடியாக ராணுவ ஹெலிகாப்டரில் வங்கதேசத்தில் இருந்து நம் நாட்டுக்கு அனுப்பி வைத்தார். இதன்மூலம் ஷேக் ஹசீனா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

ஷேக் ஹசீனா மீது வன்மம் ஏன்?

ஷேக் ஹசீனா மீது வங்கதேச மாணவர்கள் வன்மம் வர முக்கிய காரணம். அவரது நீண்ட கால ஆட்சி தான். வங்கதேசத்தின் பிரதமராக அவர் கடந்த 2008 ம் ஆண்டு முதல் தொடர்ந்து நீடித்து வந்தார். 15 ஆண்டுகளாக அவர் பிரதமராக இருந்தார். அந்த சமயத்தில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்தார். அவர்களை பிடித்து சிறையில் அடைத்தார். அதேபோல் இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களையும் முதலில் கைது செய்தார்.

இதனால்ஷேக் ஹசீனாவை மாணவர்கள் கடுமையாக எதிர்க்க தொடங்கினர். அதுமட்டுமின்றி வங்கதேசம் பாகிஸ்தானில் இருந்து சுதந்திரம் பெற்று தனிநாடாக மாற காரணமாக இருந்தவர் ஷேக் முஜிபூர் ரஹ்மான். இவர் தான் சுதந்திர வங்கதேசத்தின் முதல் பிரதமராக இருந்தார். இவரது மகள் தான் ஷேக் ஹசீனா. இவர் பாகிஸ்தானை முற்றிலுமாக புறக்கணித்தார். நம் நாட்டுடன் நெருங்கிய நட்பில் இருந்தார். இதனால் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்களின் போராட்டம் என்பது திரும்பியது.

ராணுவ தளபதிக்கு எதிராக நடந்த சதி

மேலும் சமீபத்தில் இன்னொரு தகவலும் வெளியானது. வங்கதேசத்தின் ராணுவ தளபதியாக உள்ள வாக்கர் உஸ் ஜமானை வங்கதேச இடைக்கால அரசு மற்றும் பாகிஸ்தான் நாட்டின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ இணைந்து காலி செய்ய முடிவு செய்தது.

இதற்கு முக்கிய காரணம் வாக்கர் உஸ் ஜமான், ஷேக் ஹசீனாவின் உறவினர் என்பதும், ஷேக் ஹசீனா தான் அவரை ராணுவ தளபதியாக நியமித்தார் என்பதும் தான். அதாவது வாக்கர் உஸ் ஜமானை ராணுவ தளபதி பொறுப்பில் இருந்து நீக்கி அந்த இடத்தில் லெப்டினன்ட் ஜெனரல் முகமது பைசூர் ரஹ்மானை வங்கதேசத்தின் புதிய ராணுவ தளபதியாக நியமிக்க முடிவு செய்யப்பட்டது.

காப்பாற்றிய இந்திய உளவுத்துறை

இந்த பைசூர் ரஹ்மான் தற்போது வங்கதேச ராணுவத்தின் Quartermaste General அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். இவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கிறார். அதோடு வாக்கர் உஸ் ஜமான், ஷேக் ஹசீனாவுக்கு உறவினர். இவர் தான் ஷேக் ஹசீனாவை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார். இதனால் வாக்கர் உஸ் ஜமானையும் நீக்கி தங்களின் நாட்டுக்கு ஆதரவான பைசூர் ரஹ்மானை அந்த பொறுப்பில் அமர்த்த பாகிஸ்தானின் உளவுப்பிரிவான ஐஎஸ்ஐ முடிவு செய்தது.

இதனை அறிந்த நம் நாட்டின் உளவுத்துறை பாகிஸ்தான் மற்றும் முகமது ரஹ்மானின் சதி வேலைகளை அம்பலப்படுத்தி வாக்கர் உஸ் ஜமானை காப்பாற்றியது. இப்போது அவர் வங்கதேசத்தின் இடைக்கால அரசின் பாகிஸ்தான் ஆதரவு நடவடிக்கையை எதிர்த்து வருகிறார். அதோடு நாட்டில் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க ராணுவம் மூலம் வாக்கர் உஸ் ஜமான் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+