தாலிபான்கள் அழைப்பு... காபூலில் பாக். உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தலைவர் ஃபையஸ் ஹமீத்!
காபூல்: தாலிபான்கள் அழைப்பை ஏற்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-ன் தலைவர் லெப்டினண்ட் ஜெனரல் ஃபையஸ் ஹமீத் தலைமையிலான குழு சென்றுள்ளது. இந்த பயணத்தின் போது இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
Recommended Video
ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான மாகாணங்களை கைப்பற்றிய தாலிபான்கள் புதிய அரசு அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த புதிய அரசில் பெண்களுக்கும் இடம் தரப்பட வேண்டும் என்பது கோரிக்கை.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி காபூலில் பெண்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 20 ஆண்டுகளுக்கு முந்தைய பெண்கள் போல தாலிபான்களிடம் அடங்கிக் கிடக்க மாட்டோம் என்பதும் இந்த போராடும் பெண்களின் முழக்கம்.

தாலிபான்கள் பேச்சுவார்த்தை
இதனிடையே தாலிபான்கள் உலக நாடுகளுடன் நல்லுறவை வளர்ப்பது தொடர்பாக அடுத்தடுத்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர். கத்தார் நாட்டின் தோஹாவில் இந்திய தூதருடன் தாலிபான்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து பாகிஸ்தான் தூதருடனும் தாலிபான்கள் அரசியல் பிரிவு பேச்சுவார்த்தை நடத்தியது. புதிய தாலிபான் அரசு தங்களுடன் நல்லுறவை வளர்க்கும் என நம்புவதாக சீனாவும் தெரிவித்துள்ளது.

ஐ.நா. பொதுச்செயலர் கருத்து
மேலும் ஆப்கானிஸ்தானுக்கு உதவுவது தொடர்பாக வரும் 13-ந் தேதி உயர்நிலைக் கூட்டத்தை கூட்டியுள்ளார் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ். அண்மையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய ஆன்டனியோ குட்டரெஸ், ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் பொதுமக்களை பிற நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆப்கானிஸ்தான் மக்கள் நாடு கடத்தப்படுவதை தவிர்க்க வேண்டும். பயங்கரவாத இயக்கங்களின் புகலிடமாக ஆப்கானிஸ்தான் மாறக் கூடாது. பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான மனித உரிமை மீறல் கவலை அளிக்கிறது. ஆப்கானிஸ்தான் மக்கள் பெருமைக்குரியவர்கள். ஆப்கான் மக்களுக்கு முழு ஆதரவு உண்டு. அவர்களை கைவிட முடியாது என கூறியிருந்தார்.

காபூலில் ஐ.எஸ்.ஐ. தலைவர்
இந்நிலையில் தாலிபான்கள் அழைப்பை ஏற்று பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.-ன் தலைவர் லெப்டினண்ட் ஜெனரல் ஃபையஸ் ஹமீத் தலைமையிலான பாகிஸ்தான் அதிகாரிகள் குழு காபூல் சென்றுள்ளது. தாலிபான்களும் பாகிஸ்தானும் எப்படி இணைந்து செயல்படுவது என்பது குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட உள்ளது. லெப்டினண்ட் ஜெனரல் ஃபையஸ் ஹமீத், பாகிஸ்தான் ராணுவத்தின் பலூச் ரெஜிமெண்ட்டை சேர்ந்தவர். 2019-ம் ஆண்டு ஐ.எஸ்.ஐ.-ன் தலைவராக பிரதமர் இம்ரான்கானால் நியமிக்கப்பட்டவர். ஆப்கான் தாலிபான்கள் வசமான பின்னர் வெளிநாடு ஒன்றின் குழு முதல் முறையாக காபூலுக்கு சென்றுள்ளது. இந்த பயணம் மிக முக்கியமானதாகவும் பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா ஆதரவு?
அதாவது ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிரான ஐ.எஸ்.ஐ.- கே, வடக்கு படைகள் ஆகியவற்றை ஒடுக்குவதற்கு தாலிபான்களுக்கு பாகிஸ்தான் உதவ வேண்டும் என அமெரிக்கா ரகசியமாக கேட்டுக் கொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டிருந்தன. இந்த நிலையில் ஐ.எஸ்.ஐ,.-ன் தலைவரான ஃபையஸ் ஹமீத் தலைமையிலான குழு காபூல் பறந்துள்ளது. அதாவது அமெரிக்காவின் ஆதரவுடனேயே தாலிபான்களுடன் பாகிஸ்தான் இணைந்து செயல்பட உள்ளது என்பதை உறுதி செய்யும் விதமாகவே இந்த பயணம் பார்க்கப்படுகிறது. இருந்தபோதும் இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களது விரோதங்களை ஆப்கான் விவகாரத்தில் காட்ட வேண்டாம் என தாலிபான்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்தியாவின் நிலை?
இந்தியாவும் ஆப்கானிஸ்தானை இந்தியாவுக்கு எதிரான சக்திகள் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்கிற கருத்தை முன்வைத்திருந்தது. கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானின் நாடாளுமன்ற கட்டிடம் உள்ளிட்ட ஏராளமான உட்கட்டமைப்புகளை உருவாக்கியதில் இந்தியா மிக முக்கிய பங்கு வகித்ததது. தற்போது தாலிபான்கள் கைவசம் ஆப்கான் போயுள்ள நிலையில் மத்திய அரசு நிதானமாகவே நிலைமைகளை கண்காணித்து முடிவெடுக்கும். குறிப்பாக பாகிஸ்தானுடன் எப்படி தாலிபான்கள் நெருக்கம் காட்டுகின்றனர் என்பதைப் பொறுத்தே மத்திய அரசின் நிலைப்பாடு இருக்கும் என கூறப்படுகிறது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம












Click it and Unblock the Notifications