சோலி முடிஞ்சு.. பாகிஸ்தானை பதற வைத்த இந்தியா! லைவிலேயே கண்ணீர் விட்டு அழுத பாகிஸ்தான் ஆங்கர்? வீடியோ
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மீது இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதல் நடத்திய நிலையில், அந்த தாக்குதல் குறித்த செய்திகள் பாகிஸ்தான் ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டது. அப்போது, இந்த வீடியோவில், பாகிஸ்தானை சேர்ந்ததாகக் கூறப்படும் ஒரு பெண் செய்தி வாசிப்பாளர், நேரலையிலேயே கதறி அழுவது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை அழித்தொழிக்க, இந்திய பாதுகாப்புப் படைகள் ஒருங்கிணைந்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பெரிய பதிலடி நடவடிக்கை எடுத்துள்ளது.
இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை இணைந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது முக்கிய பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் இதில் ஜெய்ஷ்-எ-முகமது, லஷ்கர்-எ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய தடைக்கப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் அழிக்கப்பட்டது.

அந்த இடங்களில் பஹவல்பூர் பகுதியில் உள்ள ஜெய்ஷ் முகாம், முரிட்கேவில் லஷ்கர் முகாம் உள்ளிட்டவை அழிக்கப்பட்டன. உளவுத்துறை தகவல்கள்படி, இந்த தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலின் மூலம் பயங்கரவாத முகாம்கள் மற்றும் அவற்றின் அடிப்படை தளங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன.
ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பின் தலைமையகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் மசூத் அசாரின் குடும்பத்தினர் 10 பேரும் அவரது ஆதரவாளர்கள் நான்கு பேரும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் மசூத் அசார் உயிர் தப்பியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலையில் இந்தியாவின் தாக்குதல் குறித்த செய்தி வாசித்த போது, பாகிஸ்தானை சேர்ந்த பெண் செய்தி வாசிப்பாளர் அழுத வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. நேரலையில் தனது உணர்ச்சிகளை அடக்க முடியாமல் கதறி அழுத அவர், தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆன்மா அமைதியடைய வேண்டும்" என்று வேண்டிக் கொண்டார்.
https://twitter.com/Incognito_qfs/status/1919964532052472260இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவிய நிலையில், அதில் உள்ள பெண் செய்தி வாசிப்பாளர் உண்மையில் பாகிஸ்தானின் எந்த செய்தி நிறுவனத்தை சேர்ந்தவர் என்பது உறுதியாகத் தெரியவில்லை. அதேசமயம், இந்த வீடியோ உண்மையானதா என்றும் தெரியாத நிலையில், சமாஜ்வாதி கட்சி தலைவர் ஐபி சிங் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
-
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம்












Click it and Unblock the Notifications