டைட்டன் கப்பலில் போனவர்கள்.. இதெல்லாம் சாத்தியமா.. வாய்ப்பே இல்லை.. விஞ்ஞானிகள் திகைப்பு
நியூயார்க்: வடக்கு அட்லாண்டிக்கில் சுமார் 3,800 மீ ஆழத்தில் உள்ள டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்களை பார்ப்பதற்காக சென்ற நீர் மூழ்கி கப்பல் வெடித்து சிதறியதில் அதில் பயணித்த உலகின் பெரும் பணக்காரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இந்த விபத்தில் சிக்கிய நீர் மூழ்கி கப்பலின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் உயிரிழந்தவர்களின் உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 1912ம் ஆண்டு தனது முதல் பயணத்திலேயே மொத்தமாக மூழ்கிய டைட்டானிக் கப்பலின் பாகங்கள் கடலுக்கடியில் சுமார் 4 கி.மீ ஆழத்தில் இருக்கிறது. இந்த கப்பலை சுற்றுலா தலமாக்க பல்வேறு நிறுவனங்கள் முயன்று வந்தன. அப்படிப்பட்ட ஓர் நிறுவனம்தான் OceanGate Expeditions. டைட்டானிக் சுற்றுலாவுக்காக இந்நிறுவனம் டைட்டன் எனும் சிறப்பு நீர்மூழ்கி கப்பலை தயாரித்திருந்தது. இந்த கப்பல் மூலம் ஏற்கெனவே இரண்டு முறை நிறுவனத்தை சேர்ந்தவர்கள் சிலர் டைட்டானிக்கை போய் பார்த்து வந்திருக்கிறார்கள்.
அதேபோல கடந்த 18ம் தேதியன்று OceanGate நிறுவனத்தின் தலைவர், 61 வயதான ஸ்டாக்டன் ரஷ், பிரிட்டிஷ் ஆய்வாளர் ஹமிஷ் ஹார்டிங்(58), ஷாஜதா தாவூத்(48), இவரது மகன் சுலைமான் தாவூத் (19) மற்றும் பிரெஞ்சு ஆழ்கடல் நீச்சல் வீரர் பால்-ஹென்றி நர்கோலெட்(77) என 5 பேர் டைட்டானிக்கை பார்கக், டை்டன் நீர் மூழ்கி கப்பலில் பயணித்துள்ளனர். இது புறப்பட்ட 90 நிமிடங்களிலேயே வெடித்து சிதறியுள்ளது.

இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், "பூமியின் மேற்பரப்பில் மனிதர்கள் பயணிப்பதை போல கடலுக்குள் இப்படி சாதாரணமாக பயணித்துவிட முடியாது. கடலில் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க அழுத்தமும் அதிகரிக்கும். கடலின் அதீத ஆழத்தில் மீன்கள் கூட அதிகம் இருக்காது. அழுத்தத்தை மீறி பயணிக்கும்போது மனிதர்கள் வெடித்து சிதறிவிடுவார்கள். இதைத்தான் catastrophic implosion என்று கூறுகிறோம். டைட்டன் நீர் மூழ்கி கப்பலிலும் இதுதான் நடந்திருக்கிறது. இதில் பயணித்தவர்கள் நிச்சயம் உயிரிழந்திருப்பார்கள். அவர்களின் உடல்கள் கூட கிடைப்பது சிரமம்" என்று கூறியுள்ளனர்.
இந்நிலையில் இந்த விபத்து குறித்த விசாரணையை அமெரிக்க கடற்படை மேற்கொள்ள தொடங்கியது. முதற்கட்டமாக வெடித்து சிதறிய டைட்டன் நீர் மூழ்கி கப்பலின் பாகங்களை தேடும் பணிகள் தீவிரமடைந்தன. இந்நிலையில், நேற்று சில பாகங்கள் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதனை அமெரிக்க மருத்துவ வல்லுநர்கள் குழு ஆய்வு செய்யும். அநேகமாக இதில், உயிரிழந்தவர்களின் உடல் பாகங்கள் சிறு சிறு துண்டுகளாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
என்ன இருந்தாலும், உயிரிழந்தவர்களின் உடலை மீட்க வேண்டும் என்பதுதான் உறவினர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆனால் அதற்கு சாத்தியமே இல்லை என விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். ஏனெனில் உடல் நிச்சயம் வெடித்த சிதறி இருக்கும். இப்படி சிதறப்பட்ட உடல்கள் மீன்களுக்கு இரையாகி இருக்கலாம். அல்லது ஆழ்கடலில் சென்று சேர்ந்திருக்கலாம். உலகம் முழுவதும் ஆழ்கடலுக்கு இதுவரை வெறும் 3 பேர்தான் சென்றிருக்கின்றனர். எனவே இந்த உடல் பாகங்களை மீட்பது சாத்தியமில்லாததாக இருக்கிறது.
-
ட்ரம்ப் அகராதியில் இல்லாத அந்த வார்த்தை.. ஈரான் போரில் நடக்கும் செம ட்விஸ்ட்! உலக நாடுகள் வெயிட்டிங் -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க












Click it and Unblock the Notifications