Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திடீரென போரை அறிவித்த அமைதியான நாடு.. எந்தவொரு வம்புக்கும் போகாமல் இருந்தார்களே.. ஏன இப்படி!

Subscribe to Oneindia Tamil

ஆக்லாந்து: உலகிலேயே மிகவும் அமைதியான.. பெரிதாகப் போர்கள், சண்டைகள் பக்கமே போகாத நாடு ஒன்று இப்போது திடீரென போரை அறிவித்துள்ளது. இருப்பினும், உலக நாடுகள் இப்போது நடத்தும் போர்களில் இருந்து இது மொத்தமாக வேறாக இருக்கிறது. அது எந்த நாடு.. யாருக்கு எதிராக இந்த போரை அவர்கள் அறிவித்துள்ளனர் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!

உலகிலேயே மிகவும் அமைதியான நாடுகளில் ஒன்று நியூசிலாந்து. ஆஸ்திரேலியாவுக்கு மேலே அமைந்துள்ள இந்த குட்டி தீவு நாடு எப்போதும் அமைதிக்குப் பெயர்போனது. பெரிதாக எந்தவொரு நாடு உடனும் போரிட்டதில்லை. இந்த நாட்டின் மொத்த மக்கள்தொகையே சுமார் 50 லட்சம் தான். எப்போதும் அமைதியை விரும்பும் நாடாக நியூசிலாந்து இருந்து வந்துள்ளது.

New Zealand world offbeat

அமைதியான நாட்டில் போர்

அப்படிப்பட்ட நியூசிலாந்து தான் இப்போது ஒரு போரை அறிவித்துள்ளது. ஆனால், இது எந்தவொரு நாட்டின் மீதும் இல்லை.. மாறாக ஒரு விலங்கின் மீது போரை அறிவித்துள்ளார்கள். எது விலங்கின் மீது போரா! இது என்ன வினோதமா இருக்கே என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம்.. இதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.

பூனைகளுக்கு எதிராக

நியூசிலாந்து நாட்டில் feral cats எனப்படும் காட்டுப் பூனைகள் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாகப் போய்விட்டதாம். இந்த காட்டுப் பூனைகள் அங்குள்ள உள்ளூர் தனித்துவமான வனவிலங்குகளை வேட்டையாடி சாப்பிடுகிறது. இதனால் அந்த உள்ளூர் வனவிலங்குகளின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருகிறது. அந்த வன விலங்குகளைப் பாதுகாக்கவே நியூசிலாந்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதற்காக 2050ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அனைத்து காட்டுப் பூனைகளையும் ஒழிக்க நியூசிலாந்து திட்டமிட்டுள்ளது.

காட்டுப் பூனைகளை "கொடூரமான கொலைகாரர்கள்" என்று குறிப்பிட்ட அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் டாமா பொடகா, Predator-Free 2050 என்ற திட்டத்திலும் காட்டுப் பூனைகளைச் சேர்த்துள்ளனர். நியூசிலாந்தின் உள்ளூர் வனவிலங்குகளை அழிக்கும் அந்நிய விலங்குகளை ஒழிப்பதே இதன் நோக்கமாகும். 2016 முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

காரணம் என்ன

காட்டுப்பூனைகளைப் பொறுத்தவரை அவை மனிதர்கள் அருகில் கூட வராது. வேட்டையாடி மட்டுமே உயிர்வாழும். உலகில் மற்ற பகுதிகளில் இல்லாத பல தனித்துவமான உயிரினங்கள் நியூசிலாந்தில் இருக்கும் சூழலில் அதைப் பாதுகாக்கக் காட்டுப்பூனைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது அவசியமாகிறது. ராகியுரா, ஸ்டீவர்ட் தீவில் உள்ள தெற்கு டோட்டரல் போன்ற உள்ளூர் பறவை இனங்கள் காட்டுப்பூனைகளால் அழிவின் விளிம்பில் உள்ளது.

நியூசிலாந்தின் காடுகளிலும், நகரங்களிலும் சுமார் 25 லட்சத்திற்கும் அதிகமான காட்டுப் பூனைகள் வாழ்கின்றன. இவை 1 மீட்டர் நீளமும், 7 கிலோ எடை வரையும் வளரக்கூடியவை. இவை தான் உள்ளூர் நியூசிலாந்து விலங்குகளை முழுமையாக அழிக்கிறதாம்.

இது தொடர்பாக நியூசிலாந்து அமைச்சர் பொடகா கூருகையில், "நியூசிலாந்து முழுவதும் விவசாய நிலங்கள் முதல் காடுகள் வரை காட்டுப் பூனைகள் அதிகமாக உள்ளன. அவை உள்ளூர் பறவைகள், வெளவால்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. மேலும் ஆபத்தான நோய்களையும் பரப்புகிறது. இதனால் ஏற்படும் இழப்புகள் அதிகம். அதேநேரம் இதில் வீட்டில் வளர்க்கப்படும் பூனைகளுக்கு பாதிப்பு ஏற்படாது" என்றார்.

எப்படி

ரசாயனம் கலந்த விஷத்தைக் கொடுத்து காட்டுப்பூனைகளைக் கொல்ல நியூசிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது. இருப்பினும், இதனால் மற்ற விலங்குகளும் பாதிக்கப்படலாம் என்பதால் இத்திட்டம் சர்ச்சையாகியுள்ளது. அதேநேரம் இது இறுதியான திட்டம் இல்லை என்றும் இப்போது தான் சோதனைகள் தொடங்கியுள்ளதாக நியூசிலாந்து தெரிவித்துள்ளது. மேலும், 2026 மார்ச் மாதத்திற்குள் இது குறித்த விரிவான திட்டத்தை வெளியிடும் என நியூசிலாந்து தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+